பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தச்சூர்) திருப்புகழ் உரை 2O3 வாலியுடன் ஏழு மராமரங்களும் அற்று விழவும், அரக்கன் ராவணனுடைய அழகிய தலை ஒருபத்தும், கைகள் இருபதும் அழியும்படியும் ஒரு அம்பை விட்ட ஒப்பற்ற கரியவனும் ஆன திருமாலின் மருகனே! நறுமணம் உள்ள மலர்கள் வீசின வாசனையைக் கொண்ட திரு ஆமாத்துார் என்னும் நகரில் வீற்றிருக்கும் ஒப்பற்ற அறுமுகனே! விண்ணுலகில் இருந்த அடியார்களின் துன்பம் நீங்க அருளின பெருமாளே! (தவமிக நினைவது தருவாயே) தச்சூர் 737. (அச்சாய்) வலிமை உடையதாய், இறுக்கு (அழுந்தப் பதிந்துள்ள) ஆணி காட்டி - இரும்பாணி போன்றும் கடைந்தெடுக்கப்பட்ட செப்புக்குடம் போன்றும் உள்ள சிமிழ்போன்ற கொங்கையாம் மலையை முன் காட்டியும், அம்புகள் போன்ற கண்களால் கூர்மையுடன் - நுண்மையாகப் பார்த்தும், குழைந்து) மனம் நெகிழ்ச்சி காட்டி உறவாடியும் அத்தான் என்று அழைத்து, ஆசையும் கலந்து, (தயங்க வைத்தாய் எனப் பேசி) நீ என்னை வாடும்படி வைத்து விட்டாய் என்று பேசி, (மூக்கைச் சொறிந்து) - (வந்தவருடைய) மூக்கை (ஆசையுடன்) சொறிந்து, அந்தக் காலத்தில் (முன்பு) 62(по காலத்தில் (ஏக்கற்று). ஆசையால் விரும்பி எம்மிடம் வந்திருந்தாய், (ஆனால்) இப்போது (இலையாசை) ஆசை எம்மீது இல்லை - வைச்சாய் எடுப்பான பேச்சுக் கிடங்கள் - (ஆகையால்) (எடுப்பான பேச்சுக்கு இடங்கள் வைச்சாய்) நிந்தையான பேச்சுக்கு நீ இடம் தந்துவிட்டாய் (ஒப்பார் உனக்கீடு பார்க்கிற் கடம்பன் மட்டோ) - பார்க்கில் - யோசித்துப் பார்க்கில், உனக்கு ஒப்பு - ஈடு- உனக்கு ஒப்பானவர்கள், ஈடானவர்கள்உன்னைப் போலத் தகுதியுள்ளவர்கள் யார் இருக்கிறார்கள், கடம்பன் - முருகன் முதலாக (முருகன் முதலாக உனக்கு ஒப்பார் யாரும் இல்லை) என்று கூறிப், (பாரில்) இவ்வுலகில் மூர்க்கத்தனம் கொண்ட செய்கைகளாலே -