திருப்புகழ் 725 சீதள வாரிஜ  (சிறுவை)
Thiruppugazh 725 seedhaLavArija  (siRuvai)
Thiruppugazh - 725 seedhaLavArija - siRuvaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தானன தானான தானன
     தானன தானன தானான தானன
          தானன தானன தானான தானன ...... தனதான

......... பாடல் .........

சீதள வாரிஜ பாதாந மோநம
     நாரத கீதவி நோதாந மோநம
          சேவல மாமயில் ப்ரீதாந மோநம ...... மறைதேடுஞ்

சேகர மானப்ர தாபாந மோநம
     ஆகம சாரசொ ரூபாந மோநம
          தேவர்கள் சேனைம கீபாந மோநம ...... கதிதோயப்

பாதக நீவுகு டாராந மோநம
     மாவசு ரேசக டோராந மோநம
          பாரினி லேஜய வீராந மோநம ...... மலைமாது

பார்வதி யாள்தரு பாலாந மோநம
     நாவல ஞானம னோலாந மோநம
          பாலகு மாரசு வாமீந மோநம ...... அருள்தாராய்

போதக மாமுக னேரான சோதர
     நீறணி வேணியர் நேயாப்ர பாகர
          பூமக ளார்மரு கேசாம கோததி ...... யிகல்சூரா

போதக மாமறை ஞானாத யாகர
     தேனவிழ் நீபந றாவாரு மார்பக
          பூரண மாமதி போலாறு மாமுக ...... முருகேசா

மாதவர் தேவர்க ளோடேமு ராரியு
     மாமலர் மீதுறை வேதாவு மேபுகழ்
          மாநில மேழினு மேலான நாயக ...... வடிவேலா

வானவ ரூரினும் வீறாகி வீறள
     காபுரி வாழ்வினு மேலாக வேதிரு
          வாழ்சிறு வாபுரி வாழ்வேசு ராதிபர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சீதள வாரிஜ பாதா நமோநம ... குளிர்ந்த தாமரை மலர்ப் பாதனே,
போற்றி, போற்றி,

நாரத கீத விநோதா நமோநம ... நாரதருடைய இசையில்
மகிழ்பவனே, போற்றி, போற்றி,

சேவல மாமயில் ப்ரீதா நமோநம ... சேவற்கொடியோனே, சிறந்த
மயில்மீது பிரியமானவனே, போற்றி, போற்றி,

மறைதேடுஞ் சேகரமானப்ர தாபா நமோநம ... வேதங்கள் தேடும்
அழகான கீர்த்தியை உடையோனே, போற்றி, போற்றி,

ஆகம சார சொரூபா நமோநம ... ஆகமங்களின் சார ஸ்வரூபமாக
உள்ளவனே, போற்றி, போற்றி,

தேவர்கள் சேனை மகீபா நமோநம ... தேவர்களின் சேனைக்குத்
தலைவனே, போற்றி, போற்றி,

கதிதோயப் பாதக நீவு குடாரா நமோநம ... நற்கதி அடைய,
பாதகத்தைப் பிளக்கும் கோடாரியே, போற்றி, போற்றி,

மா அசுரேச கடோரா நமோநம ... பெரிய அசுரர்கள் அஞ்சும்படியாக
கொடுமை காட்டுபவனே, போற்றி, போற்றி,

பாரினிலே ஜய வீரா நமோநம ... இவ்வுலகிலே ஜயவீரனாக
விளங்குபவனே, போற்றி, போற்றி,

மலைமாது பார்வதியாள் தரு பாலா நமோநம ... மலைமகள்
பார்வதி பெற்றெடுத்த செல்வமே, போற்றி, போற்றி,

நாவல ஞான மனஉலா நமோநம ... வாக்கிலே வித்தகனே, ஞான
மனத்தில் உலவுகின்றவனே, போற்றி, போற்றி,

பாலகுமாரசுவாமீ நமோநம அருள்தாராய் ... பாலகுமாரசுவாமீ,
போற்றி, போற்றி, நினதருளைத் தருவாயாக.

போதக மாமுக நேரான சோதர ... யானையின் சிறந்த
முகத்தோனுக்கு நேர் இளைய சகோதரனே,

நீறணி வேணியர் நேயா ப்ரபாகர ... திருநீறு அணிந்த சடைப்
பெருமானுக்குப் பிரியமானவனே, ஞான சூரியனே,

பூமகளார் மருகேசா மகோததி யிகல்சூரா ... லக்ஷ்மிதேவியின்
மருமகனே, ஈசனே, பெருங் கடலைப் பகைத்து வேல் விட்ட சூரனே,

போதக மாமறை ஞானா தயாகர ... சிறந்த வேதங்களை போதிக்க
வல்லவனே, ஞானனே, கருணா மூர்த்தியே,

தேனவிழ் நீப நறாவாரு மார்பக ... தேன் சொட்டும் கடப்பமலரின்
மணம் வீசும் திருமார்பை உடையவனே,

பூரண மாமதி போலாறு மாமுக முருகேசா ... பூரணச்
சந்திரனைப் போல விளங்கும் ஆறு முகத்தானே, முருகேசா,

மாதவர் தேவர்களோடே முராரியும் ... தவ முநிவர்கள், தேவர்கள்,
அவர்களுடன் திருமாலும்,

மாமலர் மீதுறை வேதாவுமே புகழ் ... தாமரை மலரின் மீதுள்ள
பிரமனும், யாவரும் புகழும் நாயகனே,

மாநிலம் ஏழினு மேலான நாயக வடிவேலா ... பெரிய உலகங்கள்
ஏழிலும் மேலான தலைவனான வடிவேலனே,

வானவ ரூரினும் வீறாகி ... தேவர்களது ஊரான அமராபுரியைக்
காட்டிலும் மேம்பட்ட,

வீறளகாபுரி வாழ்வினு மேலாகவே ... புகழ் பெற்ற குபேரன்
ஊராகிய அளகாபுரியைக் காட்டிலும் மிகச் சிறந்த,

திருவாழ் சிறுவாபுரி வாழ்வே ... லக்ஷ்மி வாசம் செய்யும்
சிறுவாபுரித் தலத்தின் செல்வமே,

சுராதிபர் பெருமாளே. ... தேவர் தலைவர்களுக்கெல்லாம் பெருமாளே.


* சிறுவைத்தலம் சென்னை - ஆரணி வழியில் பொன்னேரிக்கு மேற்கே
7 மைல் தூரத்தில் உள்ளது. முழுப் பெயர் 'சிறுவரம்பேடு'. 'லவ - குசர்' ஆகிய
சிறுவர் அம்பெடுத்துப் போர் செய்த இடம். முருகனுக்குத் தனிக் கோயில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.743  pg 2.744  pg 2.745  pg 2.746 
 WIKI_urai Song number: 730 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

M.S. Balashravanlakshmi - Puducherry
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி
புதுச்சேரி

M.S. Balashravanlakshmi
Puducherry
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 725 - seethaLa vArija (siRuvai)

seethaLa vArija pAdhA namO nama
     nAradha geetha vinOdhA namO nama
          sEvala mA mayil preethA namO nama ...... maRaithEdum

sEkara mAna prathApA namO nama
     AgamasAra sorUpA namO nama
          dhEvargaL sEnai maheepA namO nama ...... gadhi thOya

pAdhaka neevu kutArA namO nama
     mA asurEsa katOrA namO nama
          pArinilE jaya veerA namO namo ...... malai mAdhu

pArvathiyAL tharu bAlA namO nama
     nAvala nyAna manOlA namO nama
          bAla kumAra suvAmee namO nama ...... aruL thArAy

pOthaka mA muka nErAna sOdhara
     neeRaNi vENiyar nEyA prabAkara
          bU magaLAr marugEsA mahOdhadhi ...... igalsUrA

bOdhaka mA maRai nyAnA dhayAkara
     thEnavizh neepa naRAvAru mArbaga
          pUraNa mA madhi pOl ARu mA muka ...... murugEsA

mAthavar dhEvargaL OdE murAriyu
     mA malar meedhuRai vEdhAvumE pugazh
          mAnilam Ezhinu mElAna nAyaka ...... vadivElA

vAnava rUrinum veeRAgi veeR aLa
     gApuri vAzhvinu mElAgavE thiru
          vAzh siRuvApuri vAzhvE surAdhipar ...... perumALE.

......... Meaning .........

seethaLa vArija pAdhA namO nama: You have nice and cool feet like the lotus,
     I bow to You, I bow to You;

nAradha geetha vinOdhA namO nama: You revel in the music of Sage NArathar,
     I bow to You, I bow to You;

sEvala mA mayil preethA namO nama: You love Your Rooster and Peacock,
     I bow to You, I bow to You;

maRaithEdum sEkara mAna prathApA namO nama: You are so famous that all VEdAs seek You,
     I bow to You, I bow to You;

AgamasAra sorUpA namO nama: You are the substance of all the scriptures,
     I bow to You, I bow to You;

dhEvargaL sEnai maheepA namO nama: You are the Commander-in-Chief of the armies of DEvAs,
     I bow to You, I bow to You;

gadhi thOya pAdhaka neevu kutArA namO nama: For the salvation of the soul, You are the axe to chop off the sins,
     I bow to You, I bow to You;

mA asurEsa katOrA namO nama: You are frighteningly cruel to the mighty demons (asuras),
     I bow to You, I bow to You;

pArinilE jaya veerA namO namo: You are the most victorious warrior in the world,
     I bow to You, I bow to You;

malai mAdhu pArvathiyAL tharu bAlA namO nama: You are the Son of PArvathi, Daughter of HimavAn,
     I bow to You, I bow to You;

nAvala nyAna manOlA namO nama: You are a great wizard of speech, ever strolling in a wise mind,
     I bow to You, I bow to You;

bAla kumAra suvAmee namO nama aruL thArAy: You are BalakumAra Swamy,
     I bow to You, I bow to You; and You must bless me with Your grace!

pOthaka mA muka nErAna sOdhara: You are the younger brother of the great elephant-faced VinAyagA.

neeRaNi vENiyar nEyA prabAkara: You are dear to SivA, wearing holy ash, and You are like the Sun radiating wisdom!

bU magaLAr marugEsA: You are the nephew of Lakshmi, Oh my Lord!

mahOdhadhi igalsUrA: You showed Your rage at the vast sea (by flinging Your spear), Oh valorous One!

bOdhaka mA maRai nyAnA dhayAkara: You are the teacher of the great scriptures, Oh Wise and Compassionate One!

thEnavizh neepa naRAvAru mArbaga: Your chest is full of the aroma of kadappa flowers dripping with honey!

pUraNa mA madhi pOl ARu mA muka murugEsA: Oh MurugA, each of Your six faces is like the full moon!

mAthavar dhEvargaL OdE murAriyu: Great sages, DEvAs, along with Vishnu,

mA malar meedhuRai vEdhAvumE pugazh: and BrahmA, seated on the lotus flower, are all praising You!

mAnilam Ezhinu mElAna nAyaka vadivElA: You are the greatest Leader in the seven worlds!

vAnava rUrinum veeRAgi: Better than AmarAvathi, the capital of DevalOkam,

veeR aLagApuri vAzhvinu mElAgavE thiru: and better than the famous town, ALagApuri of KubEran,

vAzh siRuvApuri vAzhvE: is this place, siRuvApuri*, where Lakshmi resides and which is also Your abode!

surAdhipar perumALE.: You are worshipped by all the Leaders of DEvAs, Oh Great One!


* SiRuvai is on the route between Chennai and AaraNi, about 7 miles west of PonnEri.
It is also known as SiRuvarambEdu as it is believed that young boys, LavA and KuchA, sons of Rama, fought here with bows and arrows. This place houses a special temple for Murugan.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 725 seedhaLa vArija - siRuvai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]