பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/746

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுவை திருப்புகழ் உரை -- 187 (போதக மாமறை) மாமறை போதக - சிறந்த வேதங்களை உபதேசிக்க வல்லவனே! ஞானனே! (தயைக்கு) கிருபைக்கு இருப்பிடமானவனே! தேன் சொட்டும் கடப்பமாலையின் நறுமணம் நிறைந்து வீசும் மார்பிடத்தை உடையவனே! அழகிய பூரண சந்திரன் போல விளங்கும் ஆறுமாமுகனே! முருகேசனே! மாதவர் (தவமுநிவர்கள்), தேவர்கள், அவர்களுடன் (முராரி) முரன் என்னும் அசுரனைக் கொன்ற திருமால், சிறந்த தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமா - இவர்கள் யாவரும் புகழும் (நாயகனே!) பெரிய உலகுகள் ஏழினும் மேலான தலைவனாக விளங்குபவனே! கூரிய வேலனே! தேவர்கள் ஊரினும் மேம்பட்டதாகி விளங்கி (அளகாபுரி). குபேரன் திருநகர் அளகாபுரி வாழ்வினும் மேம்பட்ட சிறப்பினதாக இலக்குமி வாசஞ் செய்யும் சிறுவாபுரி என்னும் தலத்தில் வாழும் செல்வமே தேவர் தலைவர்களுக்குப் பெருமாளே! (அருள் தாராய்) 731. பிறப்புக்கு ஏற்பட்ட உடலிற் புகுந்து, நல்வழியல்லாத வழிகளில் நெருங்கிப்போய், நோய் முதலிய துக்கங்களில் வேதனைப்பட்டுத் தடுமாற்றம் அடைந்து வளர்ந்து பெருகும் கெட்ட வினைகளின் பயனால் கஷ்டப்பட்டு, இங்ங்னம் - பிறப்புகள்தோறும் அலைச்சலை அடைந்து, (பிடிபடாத) (அதன் உண்மைத்) தன்மை புலப்படாத பிறப்பை விரும்பி அழிந்து போகாமல். தேன் நீங்காத மலர் நிரம்பக் கொண்டுள்ளதும், அருமையான மெளன வழியைத் திறந்துகாட்டின (உனது) தாமரை போன்ற திருவடி என் மனத்தை விட்டு நீங்காமல். மனிதரும், தேவர் தலைவர்களும் வணங்குகின்ற உனது இனிமையான தரிசனத்தை விரும்பி நன்மை பெறும்படியான பாக்கியத்தை அடியேன் என்று பெறுவேனோ!