திருப்புகழ் 717 மாதர் கொங்கையில்  (உத்தரமேரூர்)
Thiruppugazh 717 mAdharkongkaiyil  (uththaramErUr)
Thiruppugazh - 717 mAdharkongkaiyil - uththaramErUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்தன தத்தா தத்தன
     தான தந்தன தத்தா தத்தன
          தான தந்தன தத்தா தத்தன ...... தனதான

......... பாடல் .........

மாதர் கொங்கையில் வித்தா ரத்திரு
     மார்பி லங்கியல் முத்தா ரத்தினில்
          வாச மென்குழ லிற்சே லைப்பொரும் ...... விழிவேலில்

மாமை யொன்றும லர்த்தாள் வைப்பினில்
     வாகு வஞ்சியில் மெய்த்தா மத்தினில்
          வானி ளம்பிறை யைப்போல் நெற்றியில் ...... மயலாகி

ஆத ரங்கொடு கெட்டே யிப்படி
     ஆசை யின்கட லுக்கே மெத்தவும்
          ஆகி நின்றுத வித்தே நித்தலும் ...... அலைவேனோ

ஆறி ரண்டுப ணைத்தோ ளற்புத
     ஆயி ரங்கலை கத்தா மத்திப
          னாயு ழன்றலை கிற்பே னுக்கருள் ...... புரிவாயே

சாத னங்கொடு தத்தா மெத்தென
     வேந டந்துபொய் பித்தா வுத்தர
          மேதெ னும்படி தற்காய் நிற்பவர் ...... சபையூடே

தாழ்வில் சுந்தர னைத்தா னொற்றிகொள்
     நீதி தந்திர நற்சார் புற்றருள்
          சால நின்றுச மர்த்தா வெற்றிகொ ...... ளரன்வாழ்வே

வேத முங்கிரி யைச்சூழ் நித்தமும்
     வேள்வி யும்புவி யிற்றா பித்தருள்
          வேர்வி ழும்படி செய்த்தேர் மெய்த்தமிழ் ...... மறையோர்வாழ்

மேரு மங்கையி லத்தா வித்தக
     வேலொ டும்படை குத்தா வொற்றிய
          வேடர் மங்கைகொள் சித்தா பத்தர்கள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாதர் கொங்கையில் வித்தாரத் திரு மார்பில் இலங்கு இயல்
முத்து ஆரத்தினில் வாச மென் குழலில் சேலைப் பொரும்
விழி வேலில்
... (விலை) மாதர்களுடைய மார்பகங்களிலும், விரிந்த
அழகிய மார்பில் விளங்கும் தன்மையை உடைய முத்து மாலையிலும்,
நறுமணம் வீசும் மெல்லிய கூந்தலிலும், சேல் மீன் போன்ற கண்ணாகிய
வேலிலும்,

மாமை ஒன்று(ம்) மலர்த் தாள் வைப்பினில் வாகு வஞ்சியில்
மெய்த் தாமத்தினில் வான் இளம் பிறையைப் போல்
நெற்றியில் மயலாகி
... மகிமை பொருந்திய மலருக்கு ஒப்பான
பாதமாகிய இடத்திலும், அழகிய வஞ்சிக் கொடி போன்ற இடையிலும்,
உடலில் அணிந்துள்ள மாலையிலும், வானில் உள்ள இளம் பிறைக்கு
ஒப்பான நெற்றியிலும் மோகம் கொண்டவனாய்,

ஆதரம் கொ(ண்)டு கெட்டே இப்படி ஆசையின் கடலுக்கே
மெத்தவும் ஆகி நின்று தவித்தே நித்தலும் அலைவேனோ
...
பற்று வைத்துக் கெட்டுப் போய், ஆசைக் கடலுக்கே மிகவும்
ஈடுபட்டவனாய் தவிப்புற்று, நாள்தோறும் அலைச்சல் உறுவேனோ?

ஆறு இரண்டு பணை தோள் அற்புத ஆயிரம் கலை க(ர்)த்தா
மத்திபனாய் உழன்று அலைகிற்பேனுக்கு அருள் புரிவாயே
...
பன்னிரண்டு பெருமை வாய்ந்த தோள்களை உடைய அற்புதமானவனே,
ஆயிரக் கணக்கான கலைகளுக்குத் தலைவனே, சாமானிய மனிதனாய்
திரிந்து அலைகின்ற எனக்கு அருள் புரிவாயாக.

சாதனம் கொ(ண்)டு தத்தா மெத்தெனவே நடந்து பொய்
பித்தா உத்தரம் ஏது எனும் படி தன் காய் நிற்பவர் சபை
ஊடே
... ஆவணச் சீட்டு ஒன்றை எடுத்துக் கொண்டு, மிகத் தத்தி தத்தி
நடந்து போய், பொய் பேசும் பித்தனே மறு மொழி என்ன பேசுவாய் என்று
சுந்தரர் தம்மைக் கடிந்து கூறும்படி (திருமணப் பந்தலின் கீழ்)
நிற்பவராய்ச் சபை நடுவில்,

தாழ்வு இல் சுந்தரனைத் தான் ஒற்றி கொள் நீதி தந்திர நல்
சார்பு உற்று அருள் சால நின்று சமர்த்தா வெற்றி கொள்
அரன் வாழ்வே
... தம்மிடம் வணக்கம் இல்லாத சுந்தரனை, தான்
தனக்கு அடிமையாக அனுபவிக்கும் உரிமையை வழக்காடி அடைய, நீதி
முறையால் நல்ல காரணங்களைக் கூறி, கிருபை மிகவும் கொண்டு
சாமர்த்தியமாக வெற்றி பெற்ற சிவ பெருமானின் செல்வக் குழந்தையே,

வேதமும் கிரியைச் சூழ் நித்தமும் வேள்வியும் புவியில்
தாபித்து அருள் வேர் விழும்படி செய்த ஏர் மெய்த் தமிழ்
மறையோர் வாழ் மேரு மங்கையில் அத்தா வித்தக
... வேதப்
பயிற்சியையும், கிரியை மார்க்கமாக நாள்தோறும் யாகங்கள் செய்வதையும்
பூமியில் நிலை நிறுத்தி, இறைவனது அருள் வேரூன்றி பதியும்படிச் செய்த
அழகிய உண்மையாளராகிய செந்தமிழ் அந்தணர்கள் வாழ்கின்ற
உத்தரமேரூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் தலைவனே, அதிசயிக்கத்
தக்க அறிவாளனே,

வேலொடும் படை குத்தா ஒற்றிய வேடர் மங்கை கொள்
சித்தா பத்தர்கள் பெருமாளே.
... வேற்படை முதலிய படைகளைக்
கொண்டு குத்தியும் அடித்தலும் செய்த வேடர்களுடைய மகளாகிய
வள்ளியை மணம் கொண்ட சித்து விளையாட்டுக்காரனே, பக்தர்களுடைய
பெருமாளே.


* உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே
18 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.719  pg 2.720  pg 2.721  pg 2.722 
 WIKI_urai Song number: 721 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 717 - mAdhar kongkaiyil (uththaramErUr)

mAthar kongaiyil viththA raththiru
     mArpi langiyal muththA raththinil
          vAsa menkuzha liRchE laipporum ...... vizhivElil

mAmai yonRuma larththAL vaippinil
     vAku vanjiyil meyththA maththinil
          vAni LampiRai yaippOl netRiyil ...... mayalAki

Atha ramkodu kettE yippadi
     Asai yinkada lukkE meththavum
          Aki ninRutha viththE niththalum ...... alaivEnO

ARi raNdupa NaiththO LaRputha
     Ayi ramkalai kaththA maththipa
          nAyu zhanRalai kiRpE nukkaruL ...... purivAyE

sAtha namkodu thaththA meththena
     vEna danthupoy piththA vuththara
          mEthe numpadi thaRkAy niRpavar ...... sapaiyUdE

thAzhvil sunthara naiththA notRikoL
     neethi thanthira naRchAr putRaruL
          sAla ninRusa marththA vetRiko ...... LaranvAzhvE

vEtha mungiri yaiccUzh niththamum
     vELvi yumpuvi yitRA piththaruL
          vErvi zhumpadi seyththEr meyththamizh ...... maRaiyOrvAzh

mEru mangaiyi laththA viththaka
     vElo dumpadai kuththA votRiya
          vEdar mangaikoL siththA paththarkaL ...... perumALE.

......... Meaning .........

mAthar kongaiyil viththArath thiru mArpil ilangu iyal muththu Araththinil vAsa men kuzhalil sElaip porum vizhi vElil: On the bosom of the whores, on the elegantly-placed string of pearls upon their broad and beautiful chest, on their fragrant hair, on the spear-like eyes that resemble the sEl fish,

mAmai onRu(m) malarth thAL vaippinil vAku vanjiyil meyth thAmaththinil vAn iLam piRaiyaip pOl netRiyil mayalAki: on their feet that look like glorious flowers, on their tender waist that looks like the pretty creeper vanji (rattan reed), on the flowery garland adorning their body and on their forehead that looks like the young and crescent moon, I have been obsessed passionately;

Atharam ko(N)du kettE ippadi Asaiyin kadalukkE meththavum Aki ninRu thaviththE niththalum alaivEnO: why am I ruining myself with that kind of attachment, drowning deep in the sea of craze and roaming about aimlessly every day?

ARu iraNdu paNai thOL aRputha Ayiram kalai ka(r)ththA maththipanAy uzhanRu alaikiRpEnukku aruL purivAyE: Oh wonderful Lord with twelve strong shoulders, You are the master of thousands of arts! Kindly bless this ordinary wanderer by showering Your grace!

sAthanam ko(N)du thaththA meththenavE nadanthu poy piththA uththaram Ethu enum padi than kAy niRpavar sapai UdE: Taking in His hand a certificate with the sovereign seal, He walked in a tottering manner to the venue of the marriage and was rebuked in public by Sundarar who addressed Him as "Oh lying mad man, What kind of answer have You for me?";

thAzhvu il suntharanaith thAn otRi koL neethi thanthira nal sArpu utRu aruL sAla ninRu samarththA vetRi koL aran vAzhvE: despite the lack of reverence towards Him by Sundarar, He cleverly put forth sound legal arguments establishing His right even while being subservient; such was His graceful ability to succeed in the law suit; He is Lord SivA, and You are His dear child, Oh Lord!

vEthamum kiriyaic cUzh niththamum vELviyum puviyil thApiththu aruL vEr vizhumpadi seytha Er meyth thamizh maRaiyOr vAzh mEru mangaiyil aththA viththaka: The Brahmins belonging to the lineage of chaste Tamil established VEdic schools and the practice of performing sacrifices in this world through the KiriyA method; these truthful savants ensured that the Divine Grace remained deep-rooted in their place, namely, UththaramErUr*, where You are seated, Oh Leader; You are an awesome Scholar!

vElodum padai kuththA otRiya vEdar mangai koL siththA paththarkaL perumALE.: These hunters possess a number of arms like the spear with which they punch and beat up; You married VaLLi, the daughter of such hunters by playing many mystic tricks! You are the Lord of the devotees, Oh Great One!


* UththaramErUr is 18 miles southwest of Chengalpattu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 717 mAdhar kongkaiyil - uththaramErUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]