திருப்புகழ் 718 குதிபாய்ந்தி ரத்தம்  (மதுராந்தகம்)
Thiruppugazh 718 kudhipAindhiraththam  (madhurAndhagam)
Thiruppugazh - 718 kudhipAindhiraththam - madhurAndhagamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதாந்த தத்த தனன தத்தத்
     தந்த தத்த தந்த ...... தனதான

......... பாடல் .........

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
     கிந்த்ரி யக்கு ரம்பை ...... வினைகூர்தூர்

குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
     கொண்டி ளைத்த யர்ந்து ...... சுழலாதே

உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
     கிண்கி ணிச்ச தங்கை ...... விதகீத

உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
     றுங்க ருத்தை யென்று ...... தருவாயே

கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
     ரந்த ரித்த கொண்டல் ...... மருகோனே

கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
     பைம்பு னக்க ரும்பின் ...... மணவாளா

மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
     மந்த னிற்பி றந்த ...... குமரேசா

மதுராந்த கத்து வடதி ருச்சிற்
     றம்ப லத்த மர்ந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொளைத்தொக்கு ... குதித்துப் பாய்ந்து
ஓடும் ரத்தமானது வடிகின்ற தொளைகளை உடையதும், தோலை
உடையதும்

இந்த்ரி யக் குரம்பை ... ஐந்து பொறிகளை உடையதுமான இந்த
உடம்பு,

வினைகூர்தூர் குணபாண்டமுற்று ... வினை மிகுந்து நிரம்பியுள்ள
குணங்களுக்குப் பாத்திரமான இந்த உடம்புதான்

அகிலமெனக் கைக் கொண்டிளைத்து அயர்ந்து சுழலாதே ...
சகல செல்வமுமாகும் என்று மேற்கொண்டு, அதனால் இளைத்துச்
சோர்வுற்றுத் திரியாமல்,

உதிதாம்ப ரத்தை யுயிர்கெட ... மனத்திலே உதிக்கின்றதாகும்
பரம்பொருளை, ஆத்ம தத்துவம் நீங்க,

பொற் கிண்கி ணிச்சதங்கை விதகீத ... அழகிய கிண்கிணி,
சதங்கை ஆகியவை விதவிதமான கீதங்களை இசைக்கும்

உபய அம்புயப் புணையையினி ... இரண்டு தாமரையை ஒத்த உன்
திருவடிகளாம் தெப்பத்தை இனியாவது

பற்றுங்க ருத்தை யென்று தருவாயே ... பற்றிக் கொண்டு வாழும்
கருத்தை எனக்கு நீ எப்போது தருவாய்?

கதைசார்ங்க கட்கம் வளை ... கதை, சாரங்கம், வாள், பாஞ்சஜன்யம்
என்ற சங்கு,

அடற்சக்ரந் தரித்த கொண்டல் மருகோனே ... வலிமை வாய்ந்த
சுதர் னம் என்ற சக்கரம் ஆகிய பஞ்ச ஆயுதங்களையும் தரித்த மேக
நிறத்துத் திருமாலின் மருகனே,

கருணாஞ்சனக் கமலவிழி ... கருணையும் அஞ்சன மையும் கொண்ட
தாமரையைப் போன்ற கண்களை உடைய

பொற்பைம்பு னக் கரும்பின் மணவாளா ... அழகிய பசுமையான
தினைப்புனத்தில் இருந்த கரும்பு போல் இனிய வள்ளியின் மணவாளனே,

மதன அந்தகர்க்கு மகவெனப் பத்மந்தனிற்பி றந்த குமரேசா ...
மன்மதனுக்கு யமனாக இருந்த சிவபிரானுக்குக் குழந்தையாக தாமரையில்
பிறந்த* குமரேசனே,

மதுராந்தகத்து வடதிருச்சிற்றம்பலத்து அமர்ந்த பெருமாளே. ...
மதுராந்தகத்தில் உள்ள வட திருச்சிற்றம்பலம்** என்ற தலத்தில் அமர்ந்து
விளங்கும் பெருமாளே.


* சிவபிரானிடமிருந்து தோன்றிய ஆறு பொறிகளும் கங்கை வழியாக
சரவணப் பொய்கையை அடைந்து ஆறு குழந்தைகளாக தாமரை மீது தோன்றின
- கந்த புராணம்.


** மதுராந்தகத்திலுள்ள முருகன் ஆலயத்திற்கு வட திருச்சிற்றம்பலம் என்று பெயர்.
மதுராந்தகம் செங்கற்பட்டுக்குத் தெற்கே 15 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.723  pg 2.724 
 WIKI_urai Song number: 722 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 718 - kudhipAindhi raththam (madhurAndhagam)

kuthipAynthi raththam vaditho Laiththok
     kinthri yakku rampai ...... vinaikUrthUr

kuNapANda mutRa kilame nakkaik
     koNdi Laiththa yarnthu ...... suzhalAthE

uthithAmpa raththai yuyirke dappoR
     kiNki Nicca thangai ...... vithakeetha

upayAmpu yappu Naiyaiyi nippaR
     Rungka ruththai yenRu ...... tharuvAyE

kathaisArnga katkam vaLaiya daRchak
     rantha riththa koNdal ...... marukOnE

karuNAnja nakka malavi zhippoR
     paimpu nakka rumpin ...... maNavALA

mathanAntha kArkku makave nappath
     mantha niRpi Rantha ...... kumarEsA

mathurAntha kaththu vadathi rucciR
     Rampa laththa marntha ...... perumALE.

......... Meaning .........

kuthipAynthi raththam vadithoLaiththokku: It consists of veins and arteries through which blood gushes and drains; it is covered with skin,

inthri yak kurampai: and has five sensory organs; and it is this body.

vinaikUrthUr kuNapANdamutRu: It is the receptacle for all evil vices.

akilamenak kaik koNdiLaiththu ayarnthu suzhalAthE: Thinking that this body is everything, I do not want to grow weaker and roam around aimlessly.

uthithAmpa raththai yuyirkeda: To destroy the ego of my soul, I want the thought of the Supreme to dawn in my mind;

poR kiNki Niccathangkai vithakeetha upaya ampuyap puNaiyaiyini patRung: henceforth, I must firmly hold, as the safe haven, Your two hallowed lotus feet in which the anklets kiNkiNi and chatangai are making a variety of musical sounds;

karuththai yenRu tharuvAyE: when will You give me that resolute determination to hold on to them?

kathaisArnga katkam vaLai adaRchakran - thariththa: He holds in His hands five weapons, namely, gathai (mace), bow (sArangam), sword, conch shell (pAnchajanyam), and a powerful wheel (sudharsana chakram);

koNdal marukOnE: He has the complexion of dark cloud; He is Lord Vishnu, and You are His nephew!

karuNAnjanak kamalavizhi: She has compassionate eyes like lotus, adorned with black mascara;

poRpaimpu nak karumpin maNavALA: She is sweet like sugarcane, living in the beautiful and fertile millet field; You are the consort of that VaLLi!

mathana anthakarkku makavenap pathmanthaniRpi Rantha kumarEsA: You were born as the child of Lord SivA, who was the God of Death to Manmathan, and You materialised on a lotus*, Oh Kumaresa!

mathurAnthakaththu vadathiruccitRampalaththu amarntha perumALE.: You are seated at Your abode in Vada (North) ThiruchchitRambalam**, a part of MathurAnthagam, Oh Great One!


* The six flames that emerged from Lord SivA were carried by River Ganga into the pond at Saravan where Murugan appeared as six infants on a lotus - Kandha PurANam.


** The Murugan Temple in MadhurAndhagam is known as Vada (North) ThiruchchitRambalam.
MadhurAndhagam is 15 miles south of Chengalpattu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 718 kudhipAindhi raththam - madhurAndhagam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]