திருப்புகழ் 716 நீள் புயல் குழல்  (உத்தரமேரூர்)
Thiruppugazh 716 neeLpuyalkuzhal  (uththaramErUr)
Thiruppugazh - 716 neeLpuyalkuzhal - uththaramErUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானனத் தனதான தானனத் தனதான
     தானனத் தனதான ...... தனதான

......... பாடல் .........

நீள்புயற் குழல்மாதர் பேரினிற் க்ருபையாகி
     நேசமுற் றடியேனு ...... நெறிகெடாய்

நேமியிற் பொருள்தேடி யோடியெய்த் துளம்வாடி
     நீதியிற் சிவவாழ்வை ...... நினையாதே

பாழினுக் கிரையாய நாமம்வைத் தொருகோடி
     பாடலுற் றிடவேசெய் ...... திடுமோச

பாவியெப் படிவாழ்வ னேயர்கட் குளதான
     பார்வைசற் றருளோடு ...... பணியாயோ

ஆழியிற் றுயில்வோனு மாமலர்ப் பிரமாவு
     மாகமப் பொருளோரு ...... மனைவோரும்

ஆனைமத் தகவோனும் ஞானமுற் றியல்வோரு
     மாயிரத் திருநூறு ...... மறையோரும்

வாழுமுத் தரமேருர் மேவியற் புதமாக
     வாகுசித் திரதோகை ...... மயிலேறி

மாறெனப் பொருசூர னீறெழப் பொரும்வேல
     மான்மகட் குளனான ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நீள் புயல் குழல் மாதர் பேரினில் க்ருபையாகி ... நீண்ட மேகம்
போல் இருண்ட கூந்தல் உடைய விலைமாதர்களின் மேல் அன்பு வைத்து,

நேசம் உற்று அடியேனு(ம்) நெறி கேடாய் ... மிகவும் நேசம்
அடைந்து அடியேனும் நன்னெறியை இழந்தவனாய்,

நேமியில் பொருள் தேடி ஓடி எய்த்து உள்ளம் வாடி ... பூமியில்
பொருள் தேடுவதற்காக ஓடி இளைத்து, மனம் சோர்ந்து,

நீதியில் சிவ வாழ்வை நினையாதே ... நீதியான மங்களகரமான
வாழ்க்கையை வாழ நினையாமல்,

பாழினுக்கு இரையாய நாமம் வைத்து ... பாழுக்கே உணவாயிற்று
என்னும்படியாக, மற்றவர்களுடைய பெயர்களை (தலைவர்களாக)
கவிதையில் வைத்து,

ஒரு கோடி பாடல் உற்றிடவே செய்திடு மோச பாவி எப்படி
வாழ்வன்
... கோடிக் கணக்கான பாடல்கள் அமையும்படி இயற்றுகின்ற
மோசக்காரப் பாவியாகிய நான் எங்ஙனம் வாழ்வேன்?

நேயர்கட்கு உளதான பார்வை சற்று அருளோடு
பணியாயோ
... (உனது) அன்பர்களுக்கு நீ வைத்துள்ள பார்வையை
கொஞ்சம் திருவருள் வைத்து எனக்கும் பாலிக்க மாட்டாயா?

ஆழியில் துயில்வோனும் மா மலரப் பிரமாவும் ...
திருப்பாற்கடலில் பள்ளி கொள்ளும் திருமாலும், தாமரையில்
வீற்றிருக்கும் பிரமனும்,

ஆகமப் பொருளோரும் அனைவோரும் ... சிவாகமத்துக்கு உரிய
மூல முதல்வராகிய சிவபெருமானும், பிறர் யாவரும்,

ஆனை மத்தகவோனும் ஞானம் உற்று இயல்வோரும் ...
ஆனைமுகமும் மத்தகமும் கொண்ட கணபதியும், ஞானம் அடைந்து
உலவும் ஞானிகளும்,

ஆயிரத்து இருநூறு மறையோரும் வாழும் உத்தரமேரூர்
மேவி
... ஆயிரத்து இரு நூறு* மறையவர்களும் வாழ்கின்ற
உத்தரமேரூரில்** வீற்றிருந்து,

அற்புதமாக வாகு சித்திர தோகை மயில் ஏறி ... அற்புதமாக,
அழகிய விசித்திரமான கலாபத்தைக் கொண்ட மயிலின் மேல் ஏறி,

மாறு என பொரு சூரன் நீறு எழ பொரும் வேல ... பகைவன்
எனச் சண்டை செய்யும் சூரன் தூளாக போர் செய்த வேலனே,

மான் மகட்கு உளனான பெருமாளே. ... மான் பெற்ற மகளான
வள்ளிக்கு உரியவனாக விளங்கி நிற்கும் பெருமாளே.


* இவ்வாறே மற்ற ஊர்களிலும் வாழும் மறையவர் எண்ணிக்கை வருமாறு:

      திருப்பெருந்துறை = 300, தில்லை = 3,000, திரு ஆக்கூர் = 1,000,
      திருவீழிமிழலை = 500, சீகாழி = 400, மதுரை = 48,000.


** உத்தரமேரூர் செங்கற்பட்டு ரயில் நிலையத்திலிருந்து தென்மேற்கே
18 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.719  pg 2.720 
 WIKI_urai Song number: 720 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 716 - neeL puyal kuzhal (uththaramErUr)

neeLpuyaR kuzhalmAthar pEriniR krupaiyAki
     nEsamut RadiyEnu ...... neRikedAy

nEmiyiR poruLthEdi yOdiyeyth thuLamvAdi
     neethiyiR sivavAzhvai ...... ninaiyAthE

pAzhinuk kiraiyAya nAmamvaith thorukOdi
     pAdalut RidavEsey ...... thidumOsa

pAviyep padivAzhva nEyarkat kuLathAna
     pArvaisat RaruLOdu ...... paNiyAyO

Azhiyit RuyilvOnu mAmalarp piramAvu
     mAkamap poruLOru ...... manaivOrum

Anaimath thakavOnum njAnamut RiyalvOru
     mAyirath thirunURu ...... maRaiyOrum

vAzhumuth tharamErur mEviyaR puthamAka
     vAkusith thirathOkai ...... mayilERi

mARenap porucUra neeRezhap porumvEla
     mAnmakat kuLanAna ...... perumALE.

......... Meaning .........

neeL puyal kuzhal mAthar pErinil krupaiyAki: Loving the whores with long hair, dark as the cloud,

nEsam utRu adiyEnu(m) neRi kEdAy: I became passionately involved with them, drifting from the righteous path;

nEmiyil poruL thEdi Odi eyththu uLLam vAdi: searching for wealth in this world, I roamed all over, became exhausted and was disheartened;

neethiyil siva vAzhvai ninaiyAthE: without any thought of leading a virtuous and moral life,

pAzhinukku iraiyAya nAmam vaiththu: I became a victim destined to be doomed and used other peoples' names (as heroes) in my poems;

oru kOdi pAdal utRidavE seythidu mOsa pAvi eppadi vAzhvan: millions of songs were composed like this by me, a deceitful sinner; how could I ever survive in this world?

nEyarkatku uLathAna pArvai satRu aruLOdu paNiyAyO: Will You not kindly bestow the same gracious glance even slightly on me, which You reserve for Your devotees?

Azhiyil thuyilvOnum mA malarap piramAvum: Lord VishNu, who slumbers on the milky ocean, BrahmA, who is ensconced on the lotus,

Akamap poruLOrum anaivOrum: Lord SivA, who is the essence of all the scriptural texts, and all others,

Anai maththakavOnum njAnam utRu iyalvOrum: along with Lord GaNapathi, who has the elephant's face and rage, those enlightened ones who freely stroll about,

Ayiraththu irunURu maRaiyOrum vAzhum uththaramErUr mEvi: and the vEdic experts numbering a thousand and two hundred* have all assembled in UththaramErUr,**

aRputhamAka vAku siththira thOkai mayil ERi: which is also Your abode; You skillfully mounted the beautiful peacock with colourful feathers

mARu enap poru cUran neeRu ezhap porum vEla: and fought with the demon SUran who came to the war with hostility and shattered him to pieces with Your spear, Oh Lord!

mAn makadku uLanAna perumALE.: You stand loftily as the consort of VaLLi, the daughter born to a deer, Oh Great One!


* The number of Vedic experts in other centres were as follows:

ThirupperunthuRai = 300, Chidhambaram = 3,000, Thiru AkkUr = 1,000,
      Thiruveezhimizhalai = 500, SeekAzhi = 400, Mathurai = 48,000.


** UththaramErUr is 18 miles southwest of Chengalpattu.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 716 neeL puyal kuzhal - uththaramErUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]