திருப்புகழ் 707 தோழமை கொண்டு  (கோடைநகர்)
Thiruppugazh 707 thOzhamaikoNdu  (kOdainagar)
Thiruppugazh - 707 thOzhamaikoNdu - kOdainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தந்தன தந்த தந்தன
     தானன தந்தன தந்த தந்தன
          தானன தந்தன தந்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்
     ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்
          சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள் ...... பெரியோரைத்

தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்
     ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்
          சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள் ...... தொலையாமல்

வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்
     நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்
          மானவ கந்தைமி குந்த குண்டர்கள் ...... வலையாலே

மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்
     தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்
          வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழி ...... விழுவாரே

ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்
     வாலியு மம்பர மும்ப ரம்பரை
          ராவண னுஞ்சது ரங்க லங்கையு ...... மடைவேமுன்

ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவ
     சூரிய னுஞ்சுர ரும்ப தம்பெற
          ராம சரந்தொடு புங்க வன்திரு ...... மருகோனே

கோழி சிலம்பந லம்ப யின்றக
     லாப நடஞ்செய மஞ்சு தங்கிய
          கோபுர மெங்கும்வி ளங்கு மங்கல ...... வயலூரா

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்
     வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்
          கோடை யெனும்பதி வந்த இந்திரர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோழமை கொண்டுசலஞ்செய் குண்டர்கள் ... நட்பைக் காட்டிப்
பினனர் நண்பருக்கு வஞ்சகம் செய்யும் கீழோர்,

ஓதிய நன்றிம றந்த குண்டர்கள் ... போதித்த நன்றியை மறந்த
கீழோர்,

சூழ்விரதங்கள் கடிந்த குண்டர்கள் ... அநுஷ்டிக்க வேண்டிய
விரதங்களை விலக்கிய கீழோர்,

பெரியோரைத் தூஷண நிந்தைபகர்ந்த குண்டர்கள் ...
பெரியோரை வைது நிந்தித்துப் பேசிய கீழோர்,

ஈவது கண்டு தகைந்த குண்டர்கள் ... மற்றவர்க்குக் கொடுப்பதைக்
கண்டு அதைத் தடுத்த கீழோர்,

சூளுற வென்பதொழிந்த குண்டர்கள் ... சத்திய வார்த்தை
என்பதையே ஒழித்த கீழோர்,

தொலையாமல் வாழநினைந்து வருந்து குண்டர்கள் ...
எப்போதும் தாம் அழியாமல் வாழ நினைத்து அதற்காகவே வருந்தும்
கீழோர்,

நீதியறங்கள்சிதைந்த குண்டர்கள் ... நீதியையும், தர்மத்தையும்
அழித்த கீழோர்,

மானவகந்தைமிகுந்த குண்டர்கள் ... குற்றமும், ஆணவமும்
மிகுந்துள்ள கீழோர்,

வலையாலே மாயையில் நின்றுவருந்து குண்டர்கள் ...
பாசவலையால் உலகமாயையில் சிக்கி வருந்தும் கீழோர்,

தேவர்கள் சொங்கள்கவர்ந்த குண்டர்கள் ... தெய்வச் சொத்தை
அபகரித்த கீழோர், இவர்கள் யாவரும்

வாதை நமன்றன்வருந்திடுங்குழி விழுவாரே ... வேதனைக்கு
இடமாகிய, யமனது நரகக் குழியில் வீழ்வர்.

ஏழு மரங்களும் வன்குரங்கெனும் வாலியும் ... மராமரம் ஏழும்,
வலிய குரங்காகிய வாலியும்,

அம்பரமும்பரம்பரை ராவணனுஞ்சதுரங்க லங்கையும் ... கடலும்,
அசுர பரம்பரையில் வந்த ராவணனும், அவனது நால்வகைப் படையும்
(யானை, தேர், குதிரை, காலாட்படை) இருந்த இலங்கையும்,

அடைவேமுன்ஈடழியும்படி ... யாவுமே முன்பே வலிமை குன்றி
அழியும்படியும்,

சந்த்ரனுஞ் சிவசூரிய னுஞ்சுரரும் பதம்பெற ... சந்திரனும், சிவ
சூரியனும், தேவர்களும் தமது பதவியிலே நிலைபெறவும்,

ராம சரந்தொடு புங்கவன்திரு மருகோனே ... ராமசரம் என்ற
ராமநாமம் கொண்ட அம்பைச் செலுத்திய சிறப்பான ராமச்சந்திர
மூர்த்தியின் அழகிய மருகனே,

கோழி சிலம்ப நலம்ப யின்ற கலாப நடஞ்செய ... சேவல்
கொடியில் இருந்து ஒலிசெய்ய, அழகிய தோகையை உடைய மயில்
நடனம் செய்ய,

மஞ்சு தங்கிய கோபுர மெங்கும்விளங்கு மங்கல வயலூரா ...
மேகங்கள் தங்கும் உயரமான கோபுரங்கள் எங்கும் விளங்கும்
மங்களகரமான வயலூர் வாசனே,

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர் ... அழகிய தேவர்களும்,
தொண்டர்களும், மண்டலாதிபர்களும்,

வேல னெனும்பெய ரன்புடன்புகழ் ... வேலன் என்ற பெயரை
அன்புடன் புகழ்கின்ற பெருமாளே,

கோடை யெனும்பதி வந்த இந்திரர் பெருமாளே. ... கோடைநகர்*
என்ற பதியில் வந்துள்ள பெருமாளே, இந்திரர்களுக்குப் பெருமாளே.


* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.699  pg 2.700 
 WIKI_urai Song number: 711 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 707 - thOzhamai koNdu (kOdainagar)

thOzhamai koNdu chalamsey guNdargaL
     Odhiya nandri maRandha guNdargaL
          sUzh viradhangaL kadindha guNdargaL ...... periyOraith

dhUshaNa nindhai pagarndha guNdargaL
     eevadhu kaNdu thagaindha guNdargaL
          sULuRa venbadho zhindha guNdargaL ...... tholaiyAmal

vAzha ninaindhu varundhu guNdargaL
     needhi aRangaL sidhaindha guNdargaL
          mAna agandhai migundha guNdargaL ...... valaiyAlE

mAyaiyil nindru varundhu guNdargaL
     dhEvargaL songaL kavarndha guNdargaL
          vAdhai namandran varundhidung kuzhi ...... vizhuvArE

Ezhu marangaLum van kurangenum
     vAliyum ambaramum parambarai
          rAvaNanum chathuranga lankaiyum ...... adaivEmun

eedazhi yumpadi chandhranum siva
     sUriyanum surarum padham peRa
          rAma saran thodu pungavan thiru ...... marugOnE

kOzhi silamba nalam payindra ka
     lApa natam seya manju thangiya
          gOpuram engum viLangu mangala ...... vayalUrA

kOmaLa andargaL thoNdar maNdalar
     vElan enum peyar anbudan pugazh
          kOdai enum padhi vandha indhirar ...... perumALE.

......... Meaning .........

thOzhamai koNdu chalamsey guNdargaL: Those despicable people who befriend first and stab in the back later;

Odhiya nandri maRandha guNdargaL: those base people who forget all the good deeds done to them;

sUzh viradhangaL kadindha guNdargaL: those ignoble people who forsake all the essential rites;

periyOraith dhUshaNa nindhai pagarndha guNdargaL: those worthless people who insult the elders and call them names;

eevadhu kaNdu thagaindha guNdargaL: those debased people who cannot stand the sight of anyone being given alms;

sULuRa venbadho zhindha guNdargaL: those lowly people who have given up speaking the truth;

tholaiyAmal vAzha ninaindhu varundhu guNdargaL: those selfish people who alone want to flourish and brood only about their survival;

needhi aRangaL sidhaindha guNdargaL: those immoral people who destroy all codes of justice and righteousness;

mAna agandhai migundha guNdargaL: those vile people who are full of blemishes and arrogance;

valaiyAlE mAyaiyil nindru varundhu guNdargaL: those mean people who fall victim to attachment and suffer in delusion;

dhEvargaL songaL kavarndha guNdargaL: and those depraved people who steal the property belonging to the place of worship;

vAdhai namandran varundhidung kuzhi vizhuvArE: will all fall into the miserable and torturous pit of hell, controlled by the God of Death.

Ezhu marangaLum van kurangenum vAliyum: The seven marAmarA trees, the strong monkey called VAli,

ambaramum parambarai rAvaNanum: the ocean, King RAvaNA belonging to the dynasty of asuras,

chathuranga lankaiyum: his country LankA noted for its four divisions of armies (elephants, chariots, horses and soldiers) -

adaivEmun eedazhi yumpadi: were all rendered powerless and destroyed;

chandhranum siva sUriyanum surarum padham peRa: The Moon, the Sun, SivA, and all the celestials were all re-established in Heaven;

rAma saran thodu pungavan thiru marugOnE: when Rama sent out His arrow with His name branded on it. You are the beloved nephew of that great Rama!

kOzhi silamba nalam payindra kalApa natam seya: The rooster crows (from Your staff); the peacock dances gracefully;

manju thangiya gOpuram engum viLangu mangala vayalUrA: and the clouds settle on the tall towers of the temples in the sacred town VayalUr, Your favourite abode!

kOmaLa andargaL thoNdar maNdalar: The handsome celestials, Your devotees, several kings and emperors

vElan enum peyar anbudan pugazh: have all been praising Your name VElan (the God with the spear) in

kOdai enum padhi vandha indhirar perumALE.: KOdainagar,* where You are seated with relish! You are worshipped by all IndrAs of the Celestial land, Oh Great One!


* KOdainagar is now known as VallakkOttai which is 6 miles south of SriperumputhUr near Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 707 thOzhamai koNdu - kOdainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]