திருப்புகழ் 708 தோள் தப்பாமல்  (கோடைநகர்)
Thiruppugazh 708 thOLthappAmal  (kOdainagar)
Thiruppugazh - 708 thOLthappAmal - kOdainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானத் தானத் தானத் தானத்
     தானத் தானத் ...... தனதான

......... பாடல் .........

தோடப் பாமற் றோய்தப் பாணிச்
     சூழ்துற் றார்துற் ...... றழுவாருந்

தூரப் போகக் கோரப் பாரச்
     சூலப் பாசச் ...... சமனாரும்

பாடைக் கூடத் தீயிற் றேறிப்
     பாழ்பட் டேபட் ...... டழியாதே

பாசத் தேனைத் தேசுற் றார்பொற்
     பாதத் தேவைத் ...... தருள்வாயே

ஆடற் சூர்கெட் டோடத் தோயத்
     தாரச் சீறிப் ...... பொரும்வேலா

ஆனைச் சேனைக் கானிற் றேனுக்
     காரத் தாரைத் ...... தரும்வீரா

கூடற் பாடிக் கோவைப் பாவைக்
     கூடப் பாடித் ...... திரிவோனே

கோலச் சாலிச் சோலைச் சீலக்
     கோடைத் தேவப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தோள் தப்பாமல் தோய்தப் பாணி சூழ்(ந்)து உற்றார் துற்று
அழுவாரும் தூரப் போக
... (இறந்தவர்கள் வீட்டில்) ஒவ்வொருவரும்
சுற்றி உட்கார்ந்து ஒருவர் தோள் மேல் ஒருவர் கைகோத்து
அழுகின்றவர்களும் விலகிப் போகுமாறு

கோரப் பாரச் சூலப் பாசச் சமன் ஆரும் ... கோரமான, பாரமான
சூலத்தையும் பாசக் கயிற்றையும் கொண்ட யமன் வந்து சேர்கின்ற
சமயத்தில்,

பாடைக் கூடத் தீயில் தேறி பாழ் பட்டே பட்டு அழியாதே ...
பாடை கட்டப்பட்டு நெருப்பில் கூட்டப்பட்டு, பாழ் அடைந்து குலைந்து
நான் அழிந்து போகாமல்,

பாசத்தேனைத் தேசு உற்றார் பொன் பாதத்தே வைத்து
அருள்வாயே
... (உலக) ஆசையில் கட்டுண்ட என்னை ஞானம்
உள்ளவர்களின் அழகிய திருவடியில் சேர்த்து வைத்து அருள்வாயாக.

ஆடல் சூர் கெட்டு ஓடத் தோயத்து ஆரச் சீறிப் பொரும்
வேலா
... போர் புரிந்த சூரன் போரில் தோற்று ஓட, அவன் (மாமரமாய்க்)
கிடந்த கடலில் மிகவும் கோபித்துச் சண்டை செய்த வேலனே,

ஆனைச் சேனைக் கானில் தேனுக்கு ஆரம் தாரைத் தரும்
வீரா
... தெய்வ யானை (ஐராவதம்) வளர்த்த தேவயானைக்கும், காட்டில்
வாழ்ந்த தேன்போன்ற வள்ளிக்கும் முத்து மாலையையும், கடப்ப
மாலையையும் தந்தருளிய வீரனே,

கூடற்பாடிக் கோவைப் பாவைக் கூடப் பாடித் திரிவோனே ...
கூடல் நகரில் உள்ள தலைவனான சிவபெருமானை தேவி
அங்கயற்கண்ணியுடன் கூட ஒன்று சேர்த்துப் பாடித் திரிந்த (திருஞான
சம்பந்தப்) புலவனே,

கோலச் சாலிச் சோலைச் சீலக் கோடைத் தேவப்
பெருமாளே.
... அழகிய நெல் வயல்களும் பொழில்களும் நிறைந்த,
நல்லொழுக்கத்தார்கள் உள்ள கோடை நகரில்* வீற்றிருக்கும், தேவர்களின்
பெருமாளே.


* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.701  pg 2.702 
 WIKI_urai Song number: 712 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 708 - thOL thappAmal (kOdainagar)

thOdap pAmat ROythap pANic
     sUzhthut RArthut ...... RazhuvArum

thUrap pOkak kOrap pArac
     cUlap pAsac ...... camanArum

pAdaik kUdath theeyit RERip
     pAzhpat tEpat ......tazhiyAthE

pAsath thEnaith thEsut RArpoR
     pAthath thEvaith ...... tharuLvAyE

AdaR cUrket tOdath thOyath
     thArac ceeRip ...... porumvElA

Anaic cEnaik kAnit REnuk
     kArath thAraith ...... tharumveerA

kUdaR pAdik kOvaip pAvaik
     kUdap pAdith ...... thirivOnE

kOlac cAlic cOlaic ceelak
     kOdaith thEvap ...... perumALE.

......... Meaning .........

thOL thappAmal thOythap pANi sUzh(n)thu utRAr thutRu azhuvArum thUrap pOka: Scaring away all those relatives who have gathered (in a house around a death-bed) sitting in a circle, crying and holding hands and shoulders among themselves,

kOrap pArac cUlap pAsac caman Arum: comes the God of Death, Yaman, with His hideous-looking, heavy trident and the rope (of attachment); at that time,

pAdaik kUdath theeyil thERi pAzh pattE pattu azhiyAthE: the dead body is carried to the funeral pyre to be consumed by fire; I do not want to decay and die in this miserable way;

pAsaththEnaith thEsu utRAr pon pAthaththE vaiththu aruLvAyE: kindly relieve me from the bondage of attachment to the worldly desires and entrust me at the holy feet of the enlightened people!

Adal cUr kettu Odath thOyaththu Arac ceeRip porum vElA: When the battling demon SUran faced defeat and ran away to hide (assuming the disguise of a mango tree), You fought with him fiercely in the sea, Oh Lord with the spear!

Anaic cEnaik kAnil thEnukku Aram thAraith tharum veerA: To DEvayAnai, reared by the Divine elephant (AirAvadham), and to the honey-like sweet VaLLi who grew up in the forest, You gave a chain of pearls and a garland of kadappa flowers, Oh valorous One!

kUdaRpAdik kOvaip pAvaik kUdap pAdith thirivOnE: You sang great hymns (coming as ThirugnAna Sambandhar) praising Lord SivA, who ruled the town of Madhurai, along with His consort, AngayarkkaNNi (PArvathi), Oh roving Poet!

kOlac cAlic cOlaic ceelak kOdaith thEvap perumALE.: You have chosen KOdainagar* as Your abode which has plenty of beautiful paddy fields and groves, along with virtuous people, Oh Great One!


* KOdainagar is now known as VallakkOttai which is 6 miles south of SriperumputhUr near Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 708 thOL thappAmal - kOdainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]