திருப்புகழ் 706 ஞால மெங்கும்  (கோடைநகர்)
Thiruppugazh 706 gnAlamengkum  (kOdainagar)
Thiruppugazh - 706 gnAlamengkum - kOdainagarSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தந்த தனத்த தத்த ...... தனதானா

......... பாடல் .........

ஞால மெங்கும் வளைத்த ரற்று ...... கடலாலே

நாளும் வஞ்சி யருற்று ரைக்கும் ...... வசையாலே

ஆலமுந்து மதித்த ழற்கும் ...... அழியாதே

ஆறி ரண்டு புயத்த ணைக்க ...... வருவாயே

கோல மொன்று குறத்தி யைத்த ...... ழுவுமார்பா

கோடை யம்பதி யுற்று நிற்கு ...... மயில்வீரா

கால னஞ்ச வரைத்தொ ளைத்த ...... முதல்வானோர்

கால்வி லங்கு களைத்த றித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஞாலமெங்கும் வளைத்து அரற்று கடலாலே ... உலகத்தை
எல்லாப் பக்கங்களிலும் சுற்றி வளைத்து ஓயாமல் அலை ஓசையோடு
இரைச்சலிடும் கடலாலே,

நாளும் வஞ்சியர் உற்று உரைக்கும் வசையாலே ... நாள்தோறும்
பெண்கள் அனைவரும் சேர்ந்து கூறும் வசைமொழிகளினாலே,

ஆலம் உந்து மதித் தழற்கும் அழியாதே ... விஷக்கதிர்களைச்
செலுத்துகிற சந்திரன் (உன்னைப் பிரிந்து தவிக்கும்) இவள் மீது வீசும்
நெருப்பாலே, அழிந்து போகாதவாறு,

ஆறிரண்டு புயத்தணைக்க வருவாயே ... உன் பன்னிரண்டு
புயங்களினாலும் இவளை அணைத்துக்கொள்ள நீ வரமாட்டாயா?

கோலம் ஒன்று குறத்தியைத் தழுவுமார்பா ... அழகு பொருந்திய
குறத்தி வள்ளியை அணைக்கும் மார்பனே,

கோடையம்பதி யுற்று நிற்கு மயில்வீரா ... கோடைநகரில்* வந்து
வீற்றிருக்கும் மயில் வீரனே,

காலனஞ்ச வரைத்தொளைத்த முதல் ... யமனும் நடுங்க
கிரெளஞ்சமலையைத் தொளை செய்த முதல்வனே,

வானோர் கால்வி லங்குகளைத் தறித்த பெருமாளே. ...
தேவர்களுக்கு சூரன் பூட்டிய கால் விலங்குகளை உடைத்தெறிந்த
பெருமாளே.


* கோடைநகர் இன்று வல்லைக்கோட்டை என வழங்கப்படுகிறது.
சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குத் தெற்கே 6 மைலில் உள்ளது.


இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில் முருகனைப் பிரிந்த
தலைவிக்காக பாடியது. கடல், சந்திரன், மன்மதன், மலர்க் கணைகள், ஊரார்
ஏச்சு இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.697  pg 2.698 
 WIKI_urai Song number: 710 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 706 - gnAla mengkum (kOdainagar)

nyAla mengum vaLaiththa ratru ...... kadalAlE

nALum vanjiyar utru raikkum ...... vasaiyAlE

Ala mundhu madhith thazhaRkum ...... azhiyAdhE

ARi randu buyath thaNaikka ...... varuvAyE

kOla mondru kuRaththiyaith ...... thazhuvumArbA

kOdai yampadhi utru niRku ...... mayilveerA

kAlan anja varaith thoLaiththa ...... mudhal vAnOr

kAl vilangu gaLaith thaRiththa ...... perumALE.

......... Meaning .........

nyAla mengum vaLaiththa ratru kadalAlE: The continuous drone from the waves of the seas surrounding the entire world;

nALum vanjiyar utru raikkum vasaiyAlE: the daily gossip-mongering by all women joined together;

Ala mundhu madhith thazhaRkum azhiyAdhE: and the poisonous rays emitted by the moon which make her feel as if she is on fire (due to separation from You) are all killing her.

ARi randu buyath thaNaikka varuvAyE: Wouldn't You come to her rescue and embrace her with all Your twelve shoulders?

kOla mondru kuRaththiyaith thazhuvumArbA: With Your chest You did embrace VaLLi, the lovely damsel of KuRavAs!

kOdai yampadhi utru niRku mayilveerA: You chose to come to KOdainagar* with Your peacock!

kAlan anja varaith thoLaiththa mudhal: When You, the Prime One, decided to pierce the mount of Krouncha, even Death-God (YamA) was frightened!

vAnOr kAl vilangu gaLaith thaRiththa perumALE.: You shattered the chains with which SUran bonded the DEvAs, Oh Great One!


* KOdainagar is now known as VallakkOttai which is 6 miles south of SriperumputhUr near Chennai.


This song has been written in the NAyaka-NAyaki BhAva portraying the pangs of separation of the heroine from Lord Murugan.
The sea, the moon, Love God, the flowery arrows and the scandal-mongering women are some of the sources which aggravate her separation from the Lord.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 706 gnAla mengkum - kOdainagar

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]