திருப்புகழ் 688 அமரும் அமரர்  (திருமயிலை)
Thiruppugazh 688 amarumamarar  (thirumayilai)
Thiruppugazh - 688 amarumamarar - thirumayilaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதனன தனன தனதனன
     தனன தனதனன ...... தனதான

......... பாடல் .........

அமரு மமரரினி லதிக னயனுமரி
     யவரும் வெருவவரு ...... மதிகாளம்

அதனை யதகரண விதன பரிபுரண
     மமைய னவர்கரண ...... அகிலேச

நிமிர வருள்சரண நிபிட மதெனவுன
     நிமிர சமிரமய ...... நியமாய

நிமிட மதனிலுண வலசி வசுதவர
     நினது பதவிதர ...... வருவாயே

சமர சமரசுர அசுர விதரபர
     சரத விரதஅயில் ...... விடுவோனே

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு
     தரர ரரரரிரி ...... தகுர்தாத

எமர நடனவித மயிலின் முதுகில்வரு
     மிமைய மகள்குமர ...... எமதீச

இயலி னியல்மயிலை நகரி லினிதுறையு
     மெமது பரகுரவ ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அமரும் அமரரினில் அதிகன் ... சிறந்த தேவர்களில்
மேம்பட்டவனான இந்திரன்,

அயனும் அரியவரும் வெருவ வரும் ... பிரம்மா, திருமால் ஆகியோர்
அஞ்சும்படி வந்த

அதிகாளம் அதனை ... ஆலகால விஷத்தினை (அடக்குவதற்காக)

அதகரண விதன ... மனச் சஞ்சலத்தை ஹதம் செய்பவனே,

பரிபுரணமமை அ(ன்)னவர்கரண ... சிந்தை நிறைந்த சாந்தர்
மனத்தில் இருப்பவனே,

அகிலேச ... அகில உலகிற்கும் ஈசனே,

நிமிர வருள்சரண ... எம் தாழ்வு நீங்கி யாம் நிமிர்ந்திட உன் திருவடி
அருளவேண்டும்,

நிபிடம் அது என ... (அவ்விஷம்) எம்மை நெருங்கி வருகிறது,
என்றெல்லாம் எல்லா தேவர்களும் முறையிட,

உன நிமிர ... நினைக்கின்ற மாத்திரத்திலேயே,

சமிரமய ... வாயு வேகத்தில்,

நியமாய ... (சரணடைந்தவர்களைக் காப்பதுதான்) கடமையென்று

நிமிடமதனில் உணவல ... நிமிஷ நேரத்தில் (அந்த விஷத்தை)
உண்டருளிய

சிவசுதவர ... சிவனுடைய சிரேஷ்டமான குமாரனே,

நினது பதவிதர வருவாயே ... உனது குகசாயுஜ்ய பதவியைத் தந்திட
வரவேண்டும்.

சமரச அமர சுர ... ஒற்றுமையான பெருந்தன்மையுள்ள தேவர்களுக்கு

விதரபர அசுர ... பகைவர்களாகிய அசுரர்கள் மேல்

சரத விரதஅயில் விடுவோனே ... சத்தியமான ஆக்ஞாசக்தி வேலை
விடுவோனே,

தகுர்த தகுர்ததிகு திகுர்த திகுர்ததிகு தரர ரரரரிரி தகுர்தாத ...
(என்னும் அதே ஒலியில்)

எமர நடனவித ... (முருகன் அடியாராகிய) எம்மவருக்கு ஏற்ற
நடனவகைகள் செய்யும்

மயிலின் முதுகில்வரும் ... மயிலின் முதுகின் மேல் வருகின்றவனே,

இமைய மகள்குமர எமதீச ... இமயராஜன் மகள் பார்வதி பெற்ற
குமரா, எம் இறைவனே,

இயலி னியல் ... தகுதி வாய்ந்துள்ள

மயிலை நகரில் இனிதுறையும் ... திருமயிலை* நகரிலே இன்பமாக
வாழும்

எமது பரகுரவ பெருமாளே. ... எங்கள் மேலான குருதேவப்
பெருமாளே.


* திருமயிலை (மயிலாப்பூர்) தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின்
மையத்தில் இருக்கிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.655  pg 2.656  pg 2.657  pg 2.658 
 WIKI_urai Song number: 692 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 688 - amarumamarinil (thirumayilai)

amarum amarinil adhikan ayanum ari
     avarum veruva varum ...... athikALam

adhanai athakaraNa vidhana paripuraNa
     amaiya navar karaNa ...... akilEsa

nimira aruL charaNa nipidam adhena una
     nimira samira maya ...... niyamAya

nimida madhanil uNavala siva suthavara
     ninadhu padhavithara ...... varu vAyE

samara samara sura asura vidhara para
     saradha viratha ayil ...... viduvOnE

thagurtha thagurtha thigu thigurtha thigurtha thigu
     tharara rarara riri ...... thagurthAdha

emara natana vidha mayilin mudhugil varum
     imaiya magaL kumara ...... emadheesa

iyalin iyal mayilai nagaril inidhuRaiyum
     emadhu paragurava ...... perumALE.

......... Meaning .........

amarum amarinil adhikan ayanum ari: IndrA, the Chief of the Celestials, BrahmA, Vishnu

avarum veruva varum athikALam: and others were scared when the deadly poison came (out of the milky ocean).

adhanai athakaraNa vidhana: (To escape the poison, they prayed) - "Oh Destroyer of our mental agony,

paripuraNa amaiya navar karaNa akilEsa: You reside in the serene hearts of people who possess complete tranquility, Oh Lord of this Universe;

nimira aruL charaNa: To help us to rise on our feet, You must grant us Your holy feet; and

nipidam adhena: the poison is closing in on us" (- so all DEvAs prayed to Lord SivA).

una nimira samira maya: When their pleas reached Him, with the speed of whirlwind,

niyamAya: and vowing to protect those who surrendered,

nimida madhanil: in just a moment,

uNavala siva: SivA swallowed that poison!

suthavara: You are that SivA's great son!

ninadhu padhavithara varu vAyE: You must come to take us into Your fold in Your Great Kingdom!

samara samara sura asura vidhara para: At the asuras who were enemies of the pious DEvAs

saradha viratha ayil viduvOnE: You threw the powerful Spear which is a symbol of truth!

thagurtha thagurtha thigu thigurtha thigurtha thigu tharara rarara riri thagur thA dha: (To the sound of the same meter)

emara natana vidha mayilin mudhugil varum: Your Peacock dances to please us, Your devotees, in many ways, and You go about mounted on the Peacock.

imaiya magaL kumara emadheesa: You are our Lord Kumaresa, son of PArvathi, who Herself is the daughter of King HimavAn.

iyalin iyal mayilai nagaril inidhuRaiyum: Your cosy residence is in the most fitting place, Thirumayilai* and

emadhu paragurava perumALE.: You are our Supreme Master, Oh Great One!


* Thirumayilai is Mylapore, in the heart of the city of Chennai.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 688 amarum amarar - thirumayilai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]