திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 678 கார்க்கு ஒத்த மேனி (பாக்கம்) Thiruppugazh 678 kArkkuoththamEni (pAkkam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தாத்தத்த தானதன தாத்தத்த தானதன தாத்தத்த தானதன ...... தனதான ......... பாடல் ......... கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி காய்த்தொட்டொ ணாதவுரு ...... ஒருகோடி காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல் காட்டத்தி னீளெரியி ...... லுறவானிற் கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடு போத்துக்க மானகுறை ...... யுடையேனைக் கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழி கோக்கைக்கு நூலறிவு ...... தருவாயே போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர் போய்த்திக்கெ லாமடிய ...... வடிவேலாற் பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருது போற்றிச்செய் வார்சிறையை ...... விடுவோனே பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபர னாய்ப்பத்தி கூர்மொழிகள் ...... பகர்வாழ்வே பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர் பாக்கத்தில் மேவவல ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கார்க்கு ஒத்த மேனி கடல் போல் சுற்றமான வழி காய்த்து ஒட்டொணாத உரு ... கருமேகத்துக்கு நிகரான உடல் நிறத்தை உடைய கடல் போலப் பரந்த சுற்றத்தார்கள் பொருந்திய இடத்திலே பிறந்து தோன்றி, நிலைத்து நிற்காத வடிவம் இந்த உடல் ஆகும். ஒரு கோடி காக்கைக்கு நாய் கழுகு பேய்க்கு அக்கமான உடல் ... ஒரு கோடிக் கணக்கான காக்கைகளுக்கும் நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் உணவுத் தானியமாக ஆகப்போவது இந்த உடல். காட்டத்தில் நீள் எரியில் உற வானில் கூர்ப்பித்த சூல(ன்) அதனால் குத்தி ஆவி கொடு போத் துக்கமான குறை உடையேனை ... சுடுகாட்டில் பெரு நெருப்பில் சேரும்படி, ஆகாயத்தில் இருந்து கூர்மை கொண்ட சூலாயுதத்தை உடைய யமன் சூலத்தால் என்னைக் குத்தி என் ஆவியைக் கொண்டு போகின்ற துக்கமான ஒரு குறைபாட்டை உடைய என்னை, கூப்பிட்டு உசா அருளி வாக்கிட்டு நாமம் மொழி கோக்கைக்கு நூல் அறிவு தருவாயே ... அருகே அழைத்து, விசாரித்துத் திருவருள் பாலித்து, (உன்னைப் பாடும்படியான) வாக்கை எனக்கு அருளி, உன் திரு நாமங்களைச் சொற்களில் பாடலாக அமைப்பதற்கு வேண்டிய நூல் அறிவைத் தந்து அருளுக. போர்க்கு எய்த்திடா மறலி போல் குத்தி மேவு அசுரர் போயத் திக்கெலாம் மடிய ... சண்டைக்குச் சளைக்காத யமனைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் கூடிப் போய் திசை தோறும் இறக்கும்படியாக, வடி வேலால் பூச் சித்தர் தேவர் மழை போல் துர்க்கவே பொருது ... கூரிய வேலினால் குத்தி, சித்தர்களும் தேவர்களும் மழை போல பூக்களை (போர்க்களத்தில்) மிகப் பொழிய உக்கிரமாகச் சண்டை செய்து, போற்றிச் செய்வார் சிறையை விடுவோனே ... போற்றி வணங்கும் தேவர்களுடைய சிறையை நீக்கியவனே, பாரக் கொற்ற நீறு புனைவார்க்கு ஒக்க ஞான பரனாய்ப் பத்தி கூர் மொழிகள் பகர் வாழ்வே ... பூமியில் வெற்றி தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபெருமானுக்கு, மிக்க ஞானத்தில் சிறந்தவனாக, பக்தியை நன்கு வளர்க்க வல்ல உபதேச மொழிகளைக் கூறிய குரு மூர்த்தியாகிய செல்வமே, பாக் கொத்தினால் இயலர் நோக்கைக்கு ... பாமாலைகளால் இயற்றமிழ் வல்ல புலவர்கள் விரும்பிப் பார்ப்பதற்காக, வேல் கொடு உயர் பாக்கத்தில் மேவ வல பெருமாளே. ... வேல் ஏந்தி, சிறந்த பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்க வல்ல பெருமாளே. |
* பாக்கம், சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர் ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.629 pg 2.630 pg 2.631 pg 2.632 WIKI_urai Song number: 682 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 678 - kArkku oththa mEni (pAkkam) kArkkoththa mEnikadal pORchutRa mAnavazhi kAyththotto NAthavuru ...... orukOdi kAkkaikku nAykazhuku pEykkakka mAnavudal kAttaththi neeLeriyi ...... luRavAniR kUrppiththa cUlanatha nARkuththi yAvikodu pOththukka mAnakuRai ...... yudaiyEnaik kUppittu sAvaruLi vAkkittu nAmamozhi kOkkaikku nUlaRivu ...... tharuvAyE pOrkkeyththi dAmaRali pORkuththi mEvasurar pOyththikke lAmadiya ...... vadivElAR pUcchiththar thEvarmazhai pOtRurkka vEporuthu pOtRicchey vArsiRaiyai ...... viduvOnE pArkkotRa neeRupunai vArkkokka njAnapara nAyppaththi kUrmozhikaL ...... pakarvAzhvE pAkkoththi nAliyalar nOkkaikku vElkoduyar pAkkaththil mEvavala ...... perumALE. ......... Meaning ......... kArkku oththa mEni kadal pOl sutRamAna vazhi kAyththu ottoNAtha uru: This body, born among a vast multitude of relatives, and spread like a sea having the hue of the dark cloud, is of an ephemeral (temporary) form. oru kOdi kAkkaikku nAy kazhuku pEykku akkamAna udal: The body is eventually going to be the prey of a million crows, dogs, eagles and devils. kAttaththil neeL eriyil uRa vAnil kUrppiththa cUla(n) athanAl kuththi Avi kodu pOth thukkamAna kuRai udaiyEnai: I suffer from a miserable flaw, namely, my body is to be consigned to big fire in the cremation ground as my life is snatched by a sharp trident wielded on me by Yaman, the Lord of Death, from the skies; kUppittu usA aruLi vAkkittu nAmam mozhi kOkkaikku nUl aRivu tharuvAyE: kindly call me to Your side, make inquiries of concern and bestow Your grace upon me granting the power of diction to sing Your glory and the knowledge to compose songs with words containing Your holy names! pOrkku eyththidA maRali pOl kuththi mEvu asurar pOyath thikkelAm madiya: They confronted like the indefatigable Yaman (God of Death); You drove all those demons together dying in all the directions; vadi vElAl pUc chiththar thEvar mazhai pOl thurkkavE poruthu: You pierced them with the sharp spear and fought fiercely while the sidhdhAs and the celestials showered flowers abundantly (on the battlefield); pOtRic cheyvAr siRaiyai viduvOnE: and You liberated the worshipping celestials from their prisons! pArak kotRa neeRu punaivArkku okka njAna paranAyp paththi kUr mozhikaL pakar vAzhvE: He is Lord SivA wearing the holy ash that confers success on all in the earth; You taught Him, as the wisest and most knowledgeable teacher, such devotional words that enhance the religious fervour, Oh my Treasure and Great Master! pAk koththinAl iyalar nOkkaikku: For the benefit of joyful vision to poets capable of adorning You with garlands of songs in literary Tamil, vEl kodu uyar pAkkaththil mEva vala perumALE.: You came to be seated in this exalted place, PAkkam*, holding the spear in Your hand, Oh Great One! |
* PAkkam is located on the route from Chennai to ArakkONam, 3 miles from ThinnanUr Railway Station. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |