திருப்புகழ் 679 பாற்றுக் கணங்கள்  (பாக்கம்)
Thiruppugazh 679 pAtRukkaNangkaL  (pAkkam)
Thiruppugazh - 679 pAtRukkaNangkaL - pAkkamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்த
     தாத்தத் தனந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
     நோக்கிச் சுமந்து கொண்டு ...... பதிதோறும்

பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்து
     ஏக்கற் றுநின்று நின்று ...... தளராதே

வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டு
     கீர்த்தித் துநின்ப தங்க ...... ளடியேனும்

வேட்டுக் கலந்தி ருந்து ஈட்டைக் கடந்து நின்ற
     வீட்டிற் புகுந்தி ருந்து ...... மகிழ்வேனோ

மாற்றற் றபொன்து லங்கு வாட்சக் கிரந்தெ ரிந்து
     வாய்ப்புற் றமைந்த சங்கு ...... தடிசாப

மாற்பொற் கலந்து லங்க நாட்டச் சுதன்ப ணிந்து
     வார்க்கைத் தலங்க ளென்று ...... திரைமோதும்

பாற்சொற் றடம்பு குந்து வேற்கட் சினம்பொ ருந்து
     பாய்க்குட் டுயின்ற வன்றன் ...... மருகோனே

பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம்ப டிந்த
     பாக்கத் தமர்ந்தி ருந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட்டிடும் குரம்பை நோக்கிச்
சுமந்து கொண்டு
... பருந்துகளின் கூட்டங்கள் உண்டு வயிறு
நிறைந்து ஏப்பமிடுவதற்கு இடமான இந்த உடல் கூட்டை விரும்பிச்
சுமந்து கொண்டு,

பதி தோறும் பார்த்துத் திரிந்து உழன்று ஆக்கத்தையும்
தெரிந்து ஏக்கற்று நின்று நின்று தளராதே
... ஊர்கள் தோறும்
சுற்றிப் பார்த்தும், திரிந்தும், அலைச்சல் உற்றும், செல்வத்துக்கு
வழியைத் தேடியும் இளைத்து வாடி, அங்கங்கு நின்று தளராமல்,

வேற்றுப் புலன்கள் ஐந்தும் ஓட்டிப் புகழ்ந்து கொண்டு
கீர்த்தித்து நின் பதங்கள் அடியேனும் வேட்டு
... மாறாக
நிற்கின்ற ஐம்புலன்களையும் அப்புறப்படுத்தி (ஒருமைப்பட்ட
மனத்தினனாய்) உன்னைப் புகழ்ந்து கொண்டு, உன் திருப்புகழையே
பாடிப் பாடி உனது திருவடிகளை அடியேனாகிய நானும் விரும்பி,

கலந்து இருந்து ஈட்டைக் கடந்து நின்ற வீட்டில் புகுந்து
இருந்து மகிழ்வேனோ
... உன்னோடு கலந்திருந்து
வருத்தங்களைக் கடந்து நின்ற மோட்ச வீட்டில் புகுந்து இருந்து
மகிழ்ச்சி உறுவேனோ?

மாற்று அற்ற பொன் துலங்கு வாள் சக்கிரம் தெரிந்து
வாய்ப்பு உற்று அமைந்த சங்கு தடி சாப(ம்) மால் பொன்
கலம் துலங்க நாட்டு அச்சுதன்
... உரை மாற்றுக் கடந்த பொன்
விளங்கும் (நாந்தகம் என்னும்) வாளும், (சுதர்சனம் என்னும்) சக்கரமும்,
தெரிந்து பொருந்த அமைந்த (பாஞ்சஜன்யம் என்னும்) சங்கமும்,
(கெளமோதகி என்னும்) தண்டமும், (சாரங்கம் என்னும்) வில்லும்,
அழகிய பொன் ஆபரணங்களும் விளங்கும்படியாக நிலையாக
வைத்துள்ள திருமாலை,

பணிந்து வார்க் கைத்தலங்கள் என்று திரை மோதும் பால்
சொல் தடம் புகுந்து வேல் கண் சினம் பொருந்து பாய்க்குள்
துயின்றவன் தன் மருகோனே
... வணங்குகின்ற நீண்ட கைகள்
என்று சொல்லும்படி அலைகள் மோதுகின்ற பால் என்று
சொல்லும்படியான திருப்பாற் கடலில் இடம் கொண்டு, வேல் போன்ற
கூரிய கண்ணையும் கோபத்தையும் கொண்ட பாயான ஆதிசேஷன்
என்னும் பாம்பணையில் துயில் கொண்டவனாகிய திருமாலின் மருகனே,

பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்த பாக்கத்து
அமர்ந்திருந்த பெருமாளே.
... கமுக மரப் பாக்கையும்
கரும்புகளையும் கெண்டை மீன்கள் தாக்கி விட்டுத் தடாகத்தில் படிகின்ற
பாக்கம்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் வழியில் தின்னனூர்
ரயில் நிலையத்துக்கு 3 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.633  pg 2.634 
 WIKI_urai Song number: 683 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 679 - pAtRuk kaNangkaL (pAkkam)

pAtRuk kaNangaL thinRu thEkkit tidumku rampai
     nOkkic chumanthu koNdu ...... pathithORum

pArththuth thirinthu zhanRu Akkath thaiyunthe rinthu
     Ekkat RuninRu ninRu ...... thaLarAthE

vEtRup pulanka Lainthu mOttip pukazhnthu koNdu
     keerththith thuninpa thanga ...... LadiyEnum

vEttuk kalanthi runthu eettaik kadanthu ninRa
     veettiR pukunthi runthu ...... makizhvEnO

mAtRat Raponthu langu vAtchak kiranthe rinthu
     vAypput Ramaintha sangu ...... thadisApa

mARpoR kalanthu langa nAttac chuthanpa Ninthu
     vArkkaith thalanga LenRu ...... thiraimOthum

pARsot Radampu kunthu vERkat sinampo runthu
     pAykkut tuyinRa vanRan ...... marukOnE

pAkkuk karumpai keNdai thAkkith thadampa dintha
     pAkkath thamarnthi runtha ...... perumALE.

......... Meaning .........

pAtRuk kaNangaL thinRu thEkkittidum kurampai nOkkic chumanthu koNdu: I have been willingly carrying this burden of my body to be eventually devoured by a bunch of vultures that would belch after their stomach is filled;

pathi thORum pArththuth thirinthu uzhanRu Akkaththaiyum therinthu EkkatRu ninRu ninRu thaLarAthE: I have been visiting many towns, roaming about and getting exhausted in search of ways to amass wealth; I do not wish to stand here and there, weakened and depressed;

vEtRup pulankaL ainthum Ottip pukazhnthu koNdu keerththiththu nin pathangaL adiyEnum vEttu: instead, I wish to get rid of my five sensory organs that remain constantly hostile, praise You (with a resolute mind) and repeatedly sing the songs of Your glory; this humble slave, namely myself, ardently seeks Your hallowed feet

kalanthu irunthu eettaik kadanthu ninRa veettil pukunthu irunthu makizhvEnO: and wishes to unite with You and to enter the blissful heaven that is beyond all sorrows; will I have the pleasure of remaining in that state of bliss?

mAtRu atRa pon thulangu vAL sakkiram therinthu vAyppu utRu amaintha sangu thadi sApa(m) mAl pon kalam thulanga nAttu acchuthan: He is Lord VishNu holding the sword (NAnthakam) made in unblemished and refined gold, the disc (Sudharsanam), the aptly fitting conch-shell (PAnchajanyam), the mace (KoumOthaki) and the bow (SArangam) and wearing the indestructible and beautiful golden ornaments;

paNinthu vArk kaiththalangaL enRu thirai mOthum pAl sol thadam pukunthu vEl kaN sinam porunthu pAykkuL thuyinRavan than marukOnE: the waves that lash the shore of the ocean, filled with milk, look like the prostrating long arms that worship that Lord; in that milky ocean, He chose for His bed the Serpent AdhisEshan, with spear like sharp and fiery eyes; He is the slumbering Lord VishNu, and You are His nephew, Oh Lord!

pAkkuk karumpai keNdai thAkkith thadam padintha pAkkaththu amarnthiruntha perumALE.: The kendai fish in this place leap to attack the tall betelnut trees and the sugarcanes and then settle into the pond; this is PAkkam*, Your abode, Oh Great One!


* This place is located 3 miles from ThinnanUr railway station on the Chennai-ArakkONam route.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 679 pAtRuk kaNangkaL - pAkkam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]