பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/632

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாக்கம்.) திருப்புகழ் உரை 73 காக்கைகளுக்கும், நாய்களுக்கும், கழுகுகளுக்கும், பேய்களுக்கும் (அக்கமான) (உணவுத் தானியமான (அல்லது கண்ணான அருகான) உடல் (இது காட்டத்தில்) சுடுகாட்டில் பெரு நெருப்பிற் சேரும்படி - (வானில்) ஆகாயத்தை அளாவினதாயுள்ள (அல்லது) வலிமை கொண்டதான். கூர்மை கொண்டதான சூலாயுதத்தை உடைய எமன் அந்த சூலத்தாற் குத்தி (எனது) ஆவியைக் (கொடு போ) கொண்டுபோகின்ற துக்கமான ஒரு குறையை (குறைபாட்டை) உடைய என்னை-(நீ) - (கூப்பிட்டு) உன் அருகே அழைத்து, (உசா அருளி)..உசாவுதல் அருளி. விசாரித்துத் திருவருள் பாலித்துத் (பாடும்படியான) வாக்கை எனக்கு (இட்டு) அருளி, (நாமமொழி கோக்கைக்கு) உன் திருநாமங்களை சொற்களிற் (பாடலாக) அமைத்துக் கோப்பதற்கு வேண்டிய நூல் அறிவைத் தந்தருளுக. போருக்கு இளைக்காத யமனைப்போல குத்தி..... வேலினால்) எதிர்த்து வந்த அசுரர்கள் ஒடிப்போய்த் திசைதோறும் இறக்கும்படி கூரிய வேலினால் - குத்தி) - பூவைச் சித்தர்களும் தேவர்களும் மழைபோலத் (தூர்க்க) மிகப்பொழியச் சண்டைசெய்து, போற்றி வணங்கினவர். களாகிய தேவர்களுடைய சிறையை விட்டவனே! (பாரில்) (பூமியில்) (கொற்ற நிறு) வெற்றி தருகின்ற திருநீற்றை அணிகின்ற சிவபிரானுக்கு மிக்க ஞானத்திற் சிறந்தவனாய் (ஞான சம்பந்தனாய்ப், பத்தியை நன்கு வளர்க்க வல்ல (மொழிகளை)ப் பாடல்களைச் சொன்ன செல்வனே! (அல்லது - சிவபிரானுக்கு மிக்க ஞான மூர்த்தியாய் பத்தியை வளர்க்கவல்ல (உபதேச) மொழிகளைக் கூறின குருமூர்த்தியாம் செல்வனே!) பாமாலைகளால் (இயலர்) இயற்றமிழ் வல்ல புலவர்கள் (நோக்கைக்கு) விரும்பிப் பார்ப்பதற்கு வேல் ஏந்தி சிறந்த பாக்கம் என்னும் தலத்தில் வீற்றிருக்க வல்ல பெருமாளே! (நாமமொழி கோக்கைக்கு நூலறிவு தருவாயே)