திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 674 பொன்றா மன்று (திருவாலங்காடு) Thiruppugazh 674 pondRAmandRu (thiruvAlangkadu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தானந் தாத்தம் தனதன தந்தானந் தாத்தம் தனதன தந்தானந் தாத்தம் தனதன ...... தனதான ......... பாடல் ......... பொன்றாமன் றாக்கும் புதல்வரும் நன்றாமன் றார்க்கின் றுறுதுணை பொன்றானென் றாட்டம் பெருகிய ...... புவியூடே பொங்காவெங் கூற்றம் பொதிதரு சிங்காரஞ் சேர்த்திங் குயரிய புன்கூடொன் றாய்க்கொண் டுறைதரு ...... முயிர்கோல நின்றானின் றேத்தும் படிநினை வுந்தானும் போச்சென் றுயர்வற நிந்தாகும் பேச்சென் பதுபட ...... நிகழாமுன் நெஞ்சாலஞ் சாற்பொங் கியவினை விஞ்சாதென் பாற்சென் றகலிட நின்தாள்தந் தாட்கொண் டருள்தர ...... நினைவாயே குன்றால்விண் டாழ்க்குங் குடைகொடு கன்றாமுன் காத்துங் குவலய முண்டார்கொண் டாட்டம் பெருகிய ...... மருகோனே கொந்தார்பைந் தார்த்திண் குயகுற மின்தாள்சிந் தாச்சிந் தையில்மயல் கொண்டேசென் றாட்கொண் டருளென ...... மொழிவோனே அன்றாலங் காட்டண் டருமுய நின்றாடுங் கூத்தன் திருவருள் அங்காகும் பாட்டின் பயனினை ...... யருள்வாழ்வே அன்பால்நின் தாட்கும் பிடுபவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பொன்றா மன்று ஆக்கும் புதல்வரும் நன்று ஆம் அன்று ... அழிவில்லாத வகையில் சபையிலே புகழைப் பெருக்கும் மக்களும் கூட நல்லபடியாக நிலைத்த செல்வம் ஆகார். ஆர்க்கு இன்று உறுதுணை பொன் தான் என்று ஆட்டம் பெருகிய புவியூடே ... யாவருக்கும் இன்று உற்ற துணையாக கருதப்படும் பொருட்செல்வமும் கூட அவ்வாறே நிலையற்றது என்னும் இந்தக் கூத்தாட்டம் நிறைந்த புவி வாழ்க்கையில், பொங்கா வெம் கூற்றம் பொதிதரு ... கோபித்து வரும் கொடிய யமன் உயிரைக் கொண்டுபோக மறைந்து நிற்கும்போது, சிங்காரம் சேர்த்து இங்கு உயரிய புன்கூடு ஒன்றாய்க் கொண்டு உறைதரும் உயிர்கோல நின்றான் ... நன்கு அலங்காரம் செய்துகொண்டதான மேம்பட்டு நிற்கும் புன்மையான கூடாகிய உடலைக் கொண்டு, அதனுள் இருக்கின்ற உயிர் இடம் கொள்ளுமாறு இங்கு இவன் நிற்கின்றான், இன்று ஏத்தும் படி நினைவும் தானும் போச்சு என்று ... இன்று உன்னைப் புகழ்ந்து துதிக்கும்படியான நினைவுகூட இவனிடம் இல்லாமல் போய்விட்டது என்று, உயர்வு அற நிந்தாகும் பேச்சு என்பது பட நிகழாமுன் ... மேன்மையற்ற நிந்தனையான பேச்சு என்பது ஏற்பட்டுப் பரவுதற்கு முன்பாக, நெஞ்சால் அஞ்சால் பொங்கிய வினை விஞ்சாது என்பால் சென்று அகலிட ... மனத்தாலும், ஐம்பொறிகளாலும் உண்டாகிப் பெருகும் வினையானது அதிகப்படாமல் என்னிடத்திலிருந்து விட்டு நீங்க, நின்தாள் தந்து ஆட்கொண்டு அருள்தர நினைவாயே ... உன் திருவடிகளைத் தந்து அடியேனை ஆட்கொண்டு திருவருளைத் தர நினைந்தருள வேண்டுகிறேன். குன்றால் விண் தாழ்க்குங் குடைகொடு கன்று ஆமுன் காத்தும் ... (கோவர்த்தன) மலையை மேகங்களைத் தடுக்கும் குடையாகக் கொண்டு, கன்றுகளையும் பசுக்களையும் முன்னாள் காத்தவரும், குவலயம் உண்டார் கொண் டாட்டம் பெருகிய மருகோனே ... பூமியை உண்டவருமான திருமாலின் பாராட்டுதலை வெகுவாகப் பெற்ற மருகனே, கொந்தார் பைந் தார்த் திண் குய குறமின் தாள் சிந்தாச் சிந்தையில் மயல் கொண்டே ... பூங்கொத்து நிறைந்த பசுமையான மாலையைத் தரித்துள்ள, திண்ணிய மார்பகங்கள் உடைய வள்ளியாம் குறப் பெண்ணிண் நீங்காத மனத்தில் மயக்கம் கொண்டே, சென்று ஆட்கொண்டு அருளென மொழிவோனே ... அவளிடம் போய் என்னை ஆட்கொண்டு அருள்வாயாக என்று கூறியவனே, அன்று ஆலங் காட்டு அண்டரும் உ(ய்)ய நின்றாடுங் கூத்தன் ... அன்று திருவாலங்காட்டில்*, தேவர்களும் பிழைப்பதற்காக, நின்று நடனம் புரிந்த சிவபெருமானது திருவருள் அங்காகும் பாட்டின் பயனினை அருள்வாழ்வே ... திருவருள் அங்கு கூடும்படியான (தேவாரத்) திருப்பதிகங்களின் பயனை (திருஞானசம்பந்தராக வந்து) அருளிச்செய்த செல்வமே, அன்பால் நின் தாள் கும்பிடுபவர் தம் பாவந் தீர்த்து ... அன்பினால் உன்னுடைய திருவடிகளை வணங்குபவரின் பாவத்தைத் தீர்த்து, அம் புவியிடை அஞ்சா நெஞ்சு ஆக்கந் தரவல பெருமாளே. ... இப்பூமியில் அவர்களுக்கு அஞ்சாத நெஞ்சத்தையும், செல்வங்களையும் தரவல்ல பெருமாளே. |
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.619 pg 2.620 pg 2.621 pg 2.622 WIKI_urai Song number: 678 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 674 - pondRA mandRu (thiruvAlangkAdu) ponRAman RAkkum puthalvarum nanRAman RArkkin RuRuthuNai ponRAnen RAttam perukiya ...... puviyUdE pongAveng kUtRam pothitharu singAranj sErththing kuyariya punkUdon RAykkoN duRaitharu ...... muyirkOla ninRAnin REththum padininai vunthAnum pOcchen RuyarvaRa ninthAkum pEcchen pathupada ...... nikazhAmun nenjAlanj cARpong kiyavinai vinjAthen pARchen Rakalida ninthALthan thAtkoN daruLthara ...... ninaivAyE kunRAlviN dAzhkkung kudaikodu kanRAmun kAththung kuvalaya muNdArkoN dAttam perukiya ...... marukOnE konthArpain thArththiN kuyakuRa minthALsin thAcchin thaiyilmayal koNdEsen RAtkoN daruLena ...... mozhivOnE anRAlang kAttaN darumuya ninRAdung kUththan thiruvaruL angAkum pAttin payaninai ...... yaruLvAzhvE anpAlnin thAtkum pidupavar thampAvan theerththam puviyidai anjAnenj cAkkan tharavala ...... perumALE. ......... Meaning ......... ponRA manRu Akkum puthalvarum nanRu Am anRu: Even the sons who uplift the fame in a congregation in an indelible manner cannot be deemed indestructible assets. Arkku inRu uRuthuNai pon thAn enRu Attam perukiya puviyUdE: In this earthly life of tumultous commotion, where material wealth is considered today as the best succour for all, pongA vem kUtRam pothitharu: when the angry and evil God of Death (Yaman) is lurking to snatch the life away, singAram sErththu ingu uyariya punkUdu onRAyk koNdu uRaitharum uyirkOla ninRAn: "this chap is staying put here, fully donned, holding his life inside the so-called lofty body which is nothing but a base shell; inRu Eththum padi ninaivum thAnum pOcchu enRu: today, he does not even remember to worship You, singing Your glory" - so speak others uyarvu aRa ninthAkum pEcchu enpathu pada nikazhAmun: in a disreputable and scandal-mongering tone; before such scandal spreads, nenjAl anjAl pongiya vinai vinjAthu enpAl senRu akalida: to dispel the proliferating deeds that stem from the mind and the five sensory organs, ninthAL thanthu AtkoNdu aruLthara ninaivAyE: kindly consider granting Your hallowed feet and taking charge of me! kunRAl viN thAzhkkung kudaikodu kanRu Amun kAththum: Once, He lifted the Mount (Govardhan) like an umbrella and protected the calves and the cows; kuvalayam uNdAr koN dAttam perukiya marukOnE: He gulped down the earth; and You are the greatly admired nephew of that Lord VishNu! konthAr pain thArth thiN kuya kuRamin thAL sinthAc cinthaiyil mayal koNdE: You were charmed by the unswerving mind of VaLLi, the damsel of the KuRavAs, who donned her firm bosom with fresh garland of flower bunches; senRu AtkoNdu aruLena mozhivOnE: and You went beseeching her to graciously take charge of You! anRu Alang kAttu aNdarum u(y)ya ninRAdung kUththan: Once, the great cosmic dancer, Lord SivA, danced at ThiruvAlangkAdu* for uplifting even the celestials; thiruvaruL angAkum pAttin payaninai aruLvAzhvE: You came (as ThirugnAna Sambandhar) to sanctify that place with Divine Grace by explaining the good effects of those hymns (thEvAram), Oh our Treasure! anpAl nin thAL kumpidupavar tham pAvan theerththu: You eradicate the sins of all those devotees who worship Your feet with love; am puviyidai anjA nenju Akkan tharavala perumALE.: and You are able to bless them with fearless heart and prosperity on this earth, Oh Great One! |
* ThiruvAlankAdu is 37 miles west of Chennai. Of the five holy stages on which Lord SivA danced, here is the Stage of Ruby - Rathnasabhai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |