திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 673 கனவாலங் கூர்விழி (திருவாலங்காடு) Thiruppugazh 673 kanavAlangkUrvizhi (thiruvAlangkadu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதானந் தானன தானன தனதானந் தானன தானன தனதானந் தானன தானன ...... தனதான ......... பாடல் ......... கனவாலங் கூர்விழி மாதர்கள் மனசாலஞ் சால்பழி காரிகள் கனபோகம் போருக மாமிணை ...... முலைமீதே கசிவாருங் கீறுகி ளாலுறு வசைகாணுங் காளிம வீணிகள் களிகூரும் பேயமு தூணிடு ...... கசுமாலர் மனவேலங் கீலக லாவிகள் மயமாயங் கீதவி நோதிகள் மருளாருங் காதலர் மேல்விழு ...... மகளீர்வில் மதிமாடம் வானிகழ் வார்மிசை மகிழ்கூரும் பாழ்மன மாமுன மலர்பேணுந் தாளுன வேயரு ...... ளருளாயோ தனதானந் தானன தானன எனவேதங் கூறுசொல் மீறளி ததைசேர்தண் பூமண மாலிகை ...... யணிமார்பா தகரேறங் காரச மேவிய குகவீரம் பாகும ராமிகு தகைசாலன் பாரடி யார்மகிழ் ...... பெருவாழ்வே தினமாமன் பாபுன மேவிய தனிமானின் தோளுட னாடிய தினைமாவின் பாவுயர் தேவர்கள் ...... தலைவாமா திகழ்வேடங் காளியொ டாடிய ஜெகதீசங் கேசந டேசுரர் திருவாலங் காடினில் வீறிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கன ஆலம் கூர் விழி மாதர்கள் மன சாலம் சால் பழிகாரிகள் ... பெருத்த, கொடிய விஷம் மிக்குள்ள கண்களை உடைய விலைமாதர்கள், மனத்தில் வஞ்சனையுடன் பசப்பி நடிப்பு வண்ணம் மிகுந்த பழிகாரிகள். கன போக அம்போருகம் ஆம் இணை முலை மீதே கசிவு ஆரும் கீறுகி(ள்)ளால் உறு வசை காணும் காளிம வீணிகள் ... மிகுந்த போக சுகத்தைத் தரக் கூடியதும், தாமரை மொட்டுக்கு ஒப்பதானதுமான மார்பின் மீதே அன்பு மிகுதிக்கு அடையாளமாக கீறல்களாலும் கிள்ளுதலின் குறிகளாலும் பழிப்புக்கு இடம் தரும் களிம்பைத் தடவும் வீணிகள். களி கூறும் பேய் அமுது ஊண் இடு கசுமாலர் மனம் ஏல் அம் கீல(க) கலாவிகள் மயமாயம் கீத விநோதிகள் ... ஆவேசத்தைத் தருகின்ற, தீய வெறித் தன்மையைக் கொடுக்கும் மாமிச உணவைத் தருகின்ற, அசுத்தர்கள். மனத்தில் பொருந்திய சூழ்ச்சி நிறைந்த அழகிய தந்திரவாதிகள், மாயம் நிறைந்த இசையில் இன்பம் கொள்பவர்கள். மருள் ஆரும் காதலர் மேல் விழு(ம்) மகளீர் வில் மதி மாடம் வான் நிகழ்வார் மிசை மகிழ் கூரும் பாழ் மனமாம் ... காம மயக்கம் நிறைந்த காதல் செய்பவர்கள். தம் மீது மோகம் கொண்டு வந்தவர்கள் மேலே விழுகின்ற பொது மகளிர். ஒளி பொருந்திய மேல் மாடம் உள்ள (உப்பரிகை உள்ள) வீடுகளில் நிலவையும் வானத்தையும் அளாவி விளங்க இருப்பவர்கள் மீது மகிழ்ச்சி நிரம்பக் கொள்ளும் பாழான மனம் இது. உன மலர் பேணும் தாள் உ(ன்)னவே அருள் அருளாயோ ... உன்னுடைய தாமரை மலரை ஒத்த திருவடியை தியானிக்கவே உனது திருவருளைப் பாலிக்க மாட்டாயோ? தனதானந் தானன தானன என வேதம் கூறு சொல் மீறு அளி ததை சேர் தண் பூ மண மாலிகை அணி மார்பா ... தனதானந் தானன தானன என்று வேதம் ஓதுவோரது சொல்லொலியினும் மிகுந்ததான ஒலியுடன் வண்டுகள் நிறைந்து சேர்ந்துள்ள குளிர்ந்த பூக்களாலான நறு மணம் கொண்ட மாலைகளை அணிந்த மார்பனே, தகர் ஏறு அங்கு ஆர் அசம் மேவிய குக வீர அம்பா குமரா மிகு தகை சால் அன்பார் அடியார் மகிழ் பெரு வாழ்வே ... நொறுங்குதலும் அழிவும் அப்போது நிறையச் செய்த ஆட்டின் மேல் வாகனமாக ஏறி அமர்ந்த குக வீரனே, தேவி பார்வதியின் குமாரனே, மிக்க மேம்பாடு நிறைந்த அடியார்கள் மகிழ்கின்ற பெரும் செல்வமே, தினம் ஆம் அன்பா(ய்) புன(ம்) மேவிய தனி மானின் தோள் உடன் ஆடிய தினை மா இன்பா உயர் தேவர்கள் தலை வாமா ... தினந்தோறும் உன் மீது கொண்ட அன்புடன் தினைப் புனத்தில் இருந்த ஒப்பற்ற மான் போன்ற (வள்ளியின்) தோளுடன் விளையாடியவனே, தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தேவர்களின் தலைவனான அழகனே, திகழ் வேடம் காளியொடு ஆடிய ஜெகதீச சங்க(மே)ச நடேசுரர் திருவாலங்காடினில் வீறிய பெருமாளே. ... திகழ்கின்ற வேடத்துடன் காளியுடன் நடனம் ஆடின உலகத்துக்கு ஈசனும் சங்க மேசனும் ஆகிய நடேசப் பெருமானுடைய தலமாகிய திருவாலங்காட்டில்* விளங்கி நிற்கும் பெருமாளே. |
* திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.615 pg 2.616 pg 2.617 pg 2.618 pg 2.619 pg 2.620 WIKI_urai Song number: 677 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 673 - kanavAlang kUrvizhi (ThiruvAlangkAdu) kanavAlang kUrvizhi mAtharkaL manasAlanj chAlpazhi kArikaL kanapOkam pOruka mAmiNai ...... mulaimeethE kasivArung keeRuki LAluRu vasaikANung kALima veeNikaL kaLikUrum pEyamu thUNidu ...... kasumAlar manavElang keelaka lAvikaL mayamAyan geethavi nOthikaL maruLArung kAthalar mElvizhu ...... makaLeervil mathimAdam vAnikazh vArmisai makizhkUrum pAzhmana mAmuna malarpENun thALuna vEyaru ...... LaruLAyO thanathAnan thAnana thAnana enavEthang kURusol meeRaLi thathaisErthaN pUmaNa mAlikai ...... yaNimArpA thakarERang kArasa mEviya gukaveeram pAkuma rAmiku thakaisAlan pAradi yArmakizh ...... peruvAzhvE thinamAman pApuna mEviya thanimAnin thOLuda nAdiya thinaimAvin pAvuyar thEvarkaL ...... thalaivAmA thikazhvEdang kALiyo dAdiya jekatheesang kEsana dEsurar thiruvAlang kAdinil veeRiya ...... perumALE. ......... Meaning ......... kana Alam kUr vizhi mAtharkaL mana sAlam sAl pazhikArikaL: These whores have large eyes filled with deadly poison; they are vengeful, but play-act jovially, hiding treacherous thoughts in their mind; kana pOka ampOrukam Am iNai mulai meethE kasivu Arum keeRuki(L)LAl uRu vasai kANum kALima veeNikaL: on top of their bosom, that give carnal bliss and look like lotus buds, they deliberately make nail-marks and pinch-marks as a token of their abundant love and suppress those marks by applying balms lest they are jeered at; they are such useless people; kaLi kURum pEy amuthu UN idu kasumAlar manam El am keela(ka) kalAvikaL mayamAyam geetha vinOthikaL: they serve as food highly provocative meat, that gives rise to cruel and violent thoughts; they are such dirty women; they are beautiful tricksters, concealing all vicious thoughts in their mind; they resort to magical music and revel in it; maruL Arum kAthalar mEl vizhu(m) makaLeer vil mathi mAdam vAn nikazhvAr misai makizh kUrum pAzh manamAm: they make love filled with dizzy passion; these whores simply fall all over their zealous suitors; on the well-lit terrace of their houses, they lay flirting with the moon and the open sky; my wretched mind gets elated thinking of these whores! una malar pENum thAL u(n)navE aruL aruLAyO: will You not graciously bless me with the thought of meditating on Your lotus feet? thanathAnan thAnana thAnana ena vEtham kURu sol meeRu aLi thathai sEr thaN pU maNa mAlikai aNi mArpA: Louder than the sound "thanathAnan thAnana thAnana" made by the chanters of the Scriptures, the beetles hum swarming around the cool and fragrant flowers in the garlands worn on Your chest, Oh Lord! thakar ERu angu Ar asam mEviya guka veera ampA kumarA miku thakai sAl anpAr adiyAr makizh peru vAzhvE: You mounted the goat as Your vehicle when it had gone about knocking and destroying a lot of things previously, Oh valorous GuhA! You are the son of PArvathi, Oh KumarA! You are the greatest treasure of those elated and famous devotees of Yours, Oh Lord! thinam Am anpA(y) puna(m) mEviya thani mAnin thOL udan Adiya thinai mA inpA uyar thEvarkaL thalai vAmA: In the millet field, she used to shower love on You everyday; and You played with the shoulders of that VaLLi, the matchless deer-like damsel; You tremendously enjoy the meal of millet-flour; and You are the leader of the celestials, Oh Handsome One! thikazh vEdam kALiyodu Adiya jekatheesa sangka(mE)sa nadEsurar thiruvAlangkAdinil veeRiya perumALE.: With His (dancing) attire, and along with KALi (PArvathi), the Lord of this world, SangamEswaran, also known as Lord NadEsan (SivA), danced in this famous place, ThiruvAlangkAdu*, where You are seated prominently, Oh Great One! |
* ThiruvAlankAdu is 37 miles west of Chennai. Of the five holy stages on which Lord SivA danced, here is the Stage of Ruby - Rathnasabhai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |