திருப்புகழ் 672 மருவும் அஞ்சு  (விரிஞ்சிபுரம்)
Thiruppugazh 672 maruvumanju  (virinjipuram)
Thiruppugazh - 672 maruvumanju - virinjipuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்த தான தனன தந்த தான
     தனன தந்த தான ...... தனதான

......... பாடல் .........

மருவு மஞ்சு பூத முரிமை வந்தி டாது
     மலமி தென்று போட ...... அறியாது

மயல்கொ ளிந்த வாழ்வு அமையு மெந்த நாளும்
     வகையில் வந்தி ராத ...... அடியேனும்

உருகி யன்பி னோடு உனைநி னைந்து நாளும்
     உலக மென்று பேச ......அறியாத

உருவ மொன்றி லாத பருவம் வந்து சேர
     உபய துங்க பாத ...... மருள்வாயே

அரிவி ரிஞ்சர் தேட அரிய தம்பி ரானும்
     அடிப ணிந்து பேசி ...... கடையூடே

அருளு கென்ற போது பொருளி தென்று காண
     அருளு மைந்த ஆதி ...... குருநாதா

திரியு மும்பர் நீடு கிரிபி ளந்து சூரர்
     செருவ டங்க வேலை ...... விடுவோனே

செயல மைந்த வேத தொனிமு ழங்கு வீதி
     திருவி ரிஞ்சை மேவு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மருவும் அஞ்சு பூதம் உரிமை வந்திடாது ... பொருந்திய மண், நீர்,
தீ, காற்று, வெளி என்ற ஐந்து பூதங்களுக்குச் சொந்தம் ஆகாத வண்ணம்

மலமி தென்று போட அறியாது ... இந்த உடலை அழுக்கு என்று
உதறிப் போடத் தெரியாமல்

மயல்கொள் இந்த வாழ்வு அமையும் ... மயக்கம் நிறைந்த இந்த
வாழ்வு போதுமே என்று

எந்த நாளும் வகையில் வந்திராத அடியேனும் ... எப்போதும்
அவ்வெண்ணம் நன்கு மனத்தில் தோன்றாத நானும்,

உருகி யன்பினோடு உனைநினைந்து நாளும் ... உள்ளம் உருகி
அன்போடு தினமும் உன்னை நினைத்து,

உலக மென்று பேச அறியாத ... உலக விஷயங்களைப் பேசும்
பேச்சே பேச அறியாத

உருவ மொன்றிலாத பருவம் வந்து சேர ... இவ்வடிவம்தான் இது
என்ற கூற இயலாத நிலையை நான் அடைய

உபய துங்க பாதமருள்வாயே ... உன் இரண்டு பரிசுத்தமான
பாதங்களை எனக்கு நீ தந்தருள்வாயாக.

அரிவிரிஞ்சர் தேட அரிய தம்பிரானும் ... திருமாலும் பிரமனும்
தேடுதற்கு அரியவரான தம்பிரான் சிவபிரானும்

அடிப ணிந்து பேசி ... உனது திருவடிகளில் பணிந்து பேசி,

கடையூடே அருளு கென்ற போது ... இறுதியில் அந்தப் பிரணவப்
பொருளை எனக்கு அருள்க என்று கேட்க

பொருளி தென்று காண ... இதுதான் பொருள் என்று அவர்
உணரும்படியாக

அருளு மைந்த ஆதி குருநாதா ... உபதேசித்து அருளிய குமரனே,
அந்த ஆதிசிவனுக்கும் குருநாதனே,

திரியு மும்பர் நீடு கிரிபிளந்து ... சூரன் செல்லும் இடமெல்லாம்
திரியும் விண் அளாவிய நீண்ட ஏழு மலைகளையும் பிளந்து,

சூரர் செருவடங்க வேலை விடுவோனே ... அசுரர்களின் போர்
ஒடுங்குமாறு வேலாயுதத்தைச் செலுத்தியவனே,

செயல மைந்த வேத தொனிமுழங்கு வீதி ... ஒழுங்காக ஓதப்படும்
வேதத்தின் ஒலி முழங்கும் வீதியைக் கொண்ட

திருவி ரிஞ்சை மேவு பெருமாளே. ... திரிவிரிஞ்சைத் தலத்தில்*
வீற்றிருக்கும் பெருமாளே.


* கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே
காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.

பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.613  pg 2.614  pg 2.615  pg 2.616 
 WIKI_urai Song number: 676 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 672 - maruvum anju (virinjipuram)

maruvu manju bUtha murimai vandhi dAdhu
     malami dhendru pOda ...... aRiyAdhu

mayalkoL indha vAzhvu amaiyum endha nALum
     vagaiyil vandhi rAdha ...... adiyEnum

urugi anbi nOdu unaini naindhu nALum
     ulaga mendru pEsa ...... aRiyAdha

uruvam ondri lAdha paruvam vandhu sEra
     ubaya thunga pAdham ...... aruLvAyE

ari virinjar thEda ariya thambi rAnum
     adi paNindhu pEsi ...... kadaiyUdE

aruLu gendra pOdhu poruLi dhendru kANa
     aruLu maindha Adhi ...... gurunAthA

thiriyum umbar needu giri piLandhu sUrar
     seruv adanga vElai ...... viduvOnE

seyala maindha vEdha dhoni muzhangu veedhi
     thiru virinjai mEvu ...... perumALE.

......... Meaning .........

maruvu manju bUtha murimai vandhi dAdhu: "This body does not belong to the five elements (earth, fire, air, water and cosmos);

malami dhendru pOda aRiyAdhu: this is nothing but scum; and I must give it up" - This thought never occurs to me.

mayalkoL indha vAzhvu amaiyum endha nALum vagaiyil vandhi rAdha: "Enough of this delusive life" - again, this thought never forms clearly in my mind any day.

adiyEnum urugi anbi nOdu unaininaindhu nALum: I want to melt everyday in the loving thoughts of You,

ulaga mendru pEsa aRiyAdha: without talking about material worldly matters,

uruvam ondri lAdha paruvam vandhu sEra: and reach a stage at which I do not see You in any particular form;

ubaya thunga pAdham aruLvAyE: in order that I do so, please bless me with Your two holy feet.

ari virinjar thEda ariya thambi rAnum: He is a great master, beyond the reach of Vishnu and BrahmA;

adi paNindhu pEsi kadaiyUdE aruLu gendra pOdhu: that SivA prostrated at Your feet and ultimately requested to teach Him the significance of OM, the PraNava ManthrA;

poruLi dhendru kANa aruLu maindha: then, You showed Him its precise meaning graciously, Oh Young One,

Adhi gurunAthA: You are the foremost Master!

thiriyum umbar needu giri piLandhu: The seven mounts of of SUran, rising up to the sky, used to travel wherever he went; they were shattered to pieces;

sUrar seruv adanga vElai viduvOnE: and the war of the demons was conquered when You wielded the spear!

seyala maindha vEdha dhoni muzhangu veedhi: The harmonious sound of the VedA chanting reverberates in the streets of

thiru virinjai mEvu perumALE.: this lovely town, Virinjipuram*, which is Your abode, Oh Great One!


* Karapuram, now known as Virinjipuram (Thiruvirinjai) is 8 miles west of Katpadi Junction near Vellore. As Virinjan (BrahmA) worshipped Lord SivA here, the place is called Virinjipuram.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 672 maruvum anju - virinjipuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]