திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 675 புவிபுனல் காலும் (திருவாலங்காடு) Thiruppugazh 675 puvipunalkAlum (thiruvAlangkadu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த தனதன தானந் தாத்த ...... தனதான ......... பாடல் ......... புவிபுனல் காலுங் காட்டி சிகியொடு வானுஞ் சேர்த்தி புதுமன மானும் பூட்டி ...... யிடையூடே பொறிபுல னீரைந் தாக்கி கருவிகள் நாலுங் காட்டி புகல்வழி நாலைந் தாக்கி ...... வருகாயம் பவவினை நூறுங் காட்டி சுவமதி தானுஞ் சூட்டி பசுபதி பாசங் காட்டி ...... புலமாயப் படிமிசை போவென் றோட்டி அடிமையை நீவந் தேத்தி பரகதி தானுங் காட்டி ...... யருள்வாயே சிவமய ஞானங் கேட்க தவமுநி வோரும் பார்க்க திருநட மாடுங் கூத்தர் ...... முருகோனே திருவளர் மார்பன் போற்ற திசைமுக னாளும் போற்ற ஜெகமொடு வானங் காக்க ...... மயிலேறிக் குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி குதர்வடி வேலங் கோட்டு ...... குமரேசா குவலயம் யாவும் போற்ற பழனையி லாலங் காட்டில் குறமகள் பாதம் போற்று ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... புவிபுனல் காலுங் காட்டி ... மண், நீர், காற்று இவைகளைக் கலந்தும், சிகியொடு வானுஞ் சேர்த்தி ... நெருப்பு, வான் என்ற இரண்டையும் கூடச் சேர்த்தும், புதுமன மானும் பூட்டி ... புதுமை வாய்ந்த மனம் என்ற குதிரையை அதில் பூட்டியும், இடையூடே பொறிபுலன் ஈரைந்தாக்கி ... இவைகளுக்கு இடையே ஐம்பொறிகள், ஐம்புலன்கள் என்ற பத்து இந்திரியங்களையும் இணைத்தும், கருவிகள் நாலுங் காட்டி ... மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என்ற நான்கு கருவிகளைப் பிணைத்தும், புகல்வழி நாலைந் தாக்கி ... சொல்லப்படுகின்ற துவாரங்களாக (வழிகளாக) ஒன்பது வாயில்களை* உண்டுபண்ணியும், வருகாயம் ... இந்த உடல் ஏற்படுத்தப்படுகிறது. பவவினை நூறுங் காட்டி ... (இத்தகைய உடலுக்குக் காரணமான) பாவ வினைகள் பொடிபட்டு அழிதலைக்காட்டி, சுவமதி தானுஞ் சூட்டி ... நல்ல அறிவை எனக்குப் பொருந்தவைத்து, பசுபதி பாசங் காட்டி ... பசு, பதி, பாசம் (உயிர், இறைவன், தளை) என்ற முப்பொருள்களின் இலக்கணங்களை எனக்கு விளக்கி, புலமாயப் படிமிசை போவென்று ஓட்டி ... ஐம்புலன்களும் மாய்ந்து ஒடுங்க இந்தப் பூமிக்குப் போ என்று என்னை விரைவில் அனுப்பிய நீதான், அடிமையை நீவந்து ஏத்தி ... உன் அடிமையாகிய என்னை இப்போது வந்து வாழ்த்தி, பரகதி தானுங் காட்டி யருள்வாயே ... முக்தியையும் அடைவதற்கான வழியைக் காட்டி அருள்வாயாக. சிவமய ஞானங் கேட்க ... சிவமயமான ஞானோபதேசத்தை உலகோர் கேட்டு மகிழவும், தவமுநிவோரும் பார்க்க ... தவம் நிறைந்த முநிவர்கள்** பார்த்து மகிழவும், திருநட மாடுங் கூத்தர் முருகோனே ... திருநடனம் ஆடும் கூத்தபிரான் சிவனின் குழந்தை முருகனே, திருவளர் மார்பன் போற்ற ... லக்ஷ்மியை மார்பில் வைத்த திருமால் போற்றவும், திசைமுகன் நாளும் போற்ற ... நான்கு திசைகளையும் நோக்கும் முகனான பிரமன் நாள்தோறும் போற்றவும், ஜெகமொடு வானங் காக்க மயிலேறி ... மண்ணுலகையும் விண்ணுலகையும் காக்கும் பொருட்டு மயில் மீதேறி, குவடொடு சூரன் தோற்க எழுகடல் சூதந் தாக்கி ... கிரெளஞ்சகிரியுடன் சூரன் தோல்வியுற, ஏழு கடல்களையும், மாமரத்தையும் (சூரனையும்) தாக்கி, குதர்வடி வேல் அங்கு ஓட்டு குமரேசா ... எடுத்த கூரிய வேலினை அங்கு போர்க்களத்தில் செலுத்தின குமரேசனே, குவலயம் யாவும் போற்ற பழனையில் ஆலங் காட்டில் ... உலகெலாம் போற்ற பழையனூரிலும்***, திருவாலங்காட்டிலும் வீற்றிருந்து, குறமகள் பாதம் போற்று பெருமாளே. ... குறமகளாகிய வள்ளியின் பாதம் போற்றுகின்ற பெருமாளே. |
* ஒன்பது துவாரங்கள்: இரு செவிகள், இரு கண்கள், இரு நாசித் துவாரங்கள், ஒரு வாய், இரு கழிவுத் துவாரங்கள். |
** திருவாலங்காட்டில் கார்க்கோடகன், முஞ்சிகேசர் என்ற முநிவர்கள் சிவனின் அருளைப்பெற்று அவரது நடன தரிசனத்தைக் கண்டனர் - திருவாலங்காட்டுப் புராணம். |
*** பழனை என்ற பழையனூர் திருவாலங்காட்டுக்குக் கிழக்கே ஒரு மைலில் உள்ளது. |
திருவாலங்காடு சென்னைக்கு மேற்கே 37 மைலில் உள்ளது. இது நடராஜர் தாண்டவமாடிய பஞ்ச சபைகளில் ஒன்று - ரத்னசபை. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.623 pg 2.624 WIKI_urai Song number: 679 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 675 - puvipunal kAlum (thiruvAlangkAdu) buvipunal kAlung kAtti sikiyodu vAnunj sErththi puthumana mAnum pUtti ...... yidaiyUdE poRipula neerain thAkki karuvikaL nAlung kAtti pukalvazhi nAlain thAkki ...... varukAyam pavavinai nURung kAtti suvamathi thAnunj chUtti pasupathi pAsang kAtti ...... pulamAyap padimisai pOven ROtti adimaiyai neevan thEththi parakathi thAnung kAtti ...... yaruLvAyE sivamaya njAnang kEtka thavamuni vOrum pArkka thirunada mAdung kUththar ...... murukOnE thiruvaLar mArpan pOtRa thisaimuka nALum pOtRa jekamodu vAnang kAkka ...... mayilERik kuvadodu chUran thORka ezhukadal chUthan thAkki kutharvadi vElang kOttu ...... kumarEsA kuvalayam yAvum pOtRa pazhanaiyi lAlang kAttil kuRamakaL pAtham pOtRu ...... perumALE. ......... Meaning ......... buvipunal kAlung kAtti: Earth, water and air were combined; sikiyodu vAnunj sErththi: fire and sky were blended with the mixture; puthumana mAnum pUtti: a brand new mind was fitted; yidaiyUdE poRipulan eerainthAkki: in between, senses and sensory organs, numbering ten, were fastened; karuvikaL nAlung kAtti: four powerful gears, namely, mind, intellect, egotism and willpower, were added; pukalvazhi nAlain thAkki: nine so-called portals* were created; varukAyam: and thus the body was created! pavavinai nURung kAtti: (The causes for birth in this body are) the bad deeds (karma) which must be pulverised. suvamathi thAnunj chUtti: I must possess a good mind that will pursue only the righteous way. pasupathi pAsang kAtti: You must explain to me the significance of Pasu, Pathi and PAsam (the soul in this body, God and attachment). pulamAya: My five senses must be extinguished. padimisai pOven ROtti adimaiyai neevan thEththi: Having driven me to this earth, You must come now to take charge of this slave of Yours, blessing me parakathi thAnung kAtti yaruLvAyE: and showing me the right path to the supreme liberation! sivamaya njAnang kEtka: To disseminate, for the benefit of the world, the True Knowledge of SivA, thavamuni vOrum pArkka: and to bestow His holy vision on the ascetic sages**, thirunada mAdung kUththar murukOnE: Lord SivA danced His Cosmic Dance; You are His child, oh MurugA! thiruvaLar mArpan pOtRa: Vishnu, holding Goddess Lakshmi in His heart, praised; thisaimuka nALum pOtRa: and BrahmA, whose four faces point to the four directions, worshipped You daily; jekamodu vAnang kAkka mayilERi: when You mounted the Peacock to protect this world and the world of the celestials; kuvadodu chUran thORka ezhukadal chUthan thAkki: You conquered Mount Krouncha and defeated SUran; You attacked the seven seas and the mango tree (in which SUran had disguised himself) kutharvadi vElang kOttu kumarEsA: by drawing Your sharp Spear and throwing it in the battlefield, Oh Lord Kumara! kuvalayam yAvum pOtRa pazhanaiyi lAlang kAttil: To the joy of the entire world, You are seated in PazhanaiyUr*** and ThiruvAlankAdu where kuRamakaL pAtham pOtRu perumALE.: You worship the feet of VaLLi, the damsel of the KuRavAs, Oh Great One! |
* The nine portals of the body: two eyes, two ears, two nostrils, a mouth and two excretory organs. |
** In ThiruvAlankAdu, two ascetic sages, namely Karkkodakan and Munjikesar worshipped Lord SivA and were blessed with His dancing vision - ThiruvAlankAttu PurANam. |
*** Pazhanai or PazhaiyanUr is situated one mile east of ThiruvAlankAdu. |
ThiruvAlankAdu is 37 miles west of Chennai. Of the five holy stages on which Lord SivA danced, here is the Stage of Ruby - Rathnasabhai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |