திருப்புகழ் 669 குலையமயி ரோதி  (விரிஞ்சிபுரம்*)
Thiruppugazh 669 kulaiyamayirOdhi  (virinjipuram)
Thiruppugazh - 669 kulaiyamayirOdhi - virinjipuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தனதனன தான
     தனதனன தான ...... தனதானா

......... பாடல் .........

குலையமயி ரோதி குவியவிழி வீறு
     குருகினிசை பாடி ...... முகமீதே

குறுவியர்வு லாவ அமுதினினி தான
     குதலையுமொ ராறு ...... படவேதான்

பலவிதவி நோத முடனுபய பாத
     பரிபுரமு மாட ...... அணைமீதே

பரிவுதரு மாசை விடமனமொ வாத
     பதகனையு மாள ...... நினைவாயே

சிலைமலைய தான பரமர்தரு பால
     சிகிபரிய தான ...... குமரேசா

திருமதுரை மேவு மமணர்குல மான
     திருடர்கழு வேற ...... வருவோனே

கலின்வடிவ மான அகலிகைபெ ணான
     கமலபத மாயன் ...... மருகோனே

கழனிநெடு வாளை கமுகொடிய மோது
     கரபுரியில் வீறு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குலைய மயிர் ஓதி குவிய விழி வீறு குருகின் இசை பாடி
முக(ம்) மீதே குறு வியர்வு உலாவ
... கூந்தலின் மயிர் குலைந்து
போக, கண்கள் குவிய, விளக்கத்துடன் கோழி முதலிய பறவைகளின்
புட்குரல் இசை பாடி, முகத்தின் மேல் சிறு வியர்வை தோன்ற,

அமுதின் இனிதான குதலையும் ஒர் ஆறு படவே தான் பல
வித விநோதமுடன் உபய பாத பரிபுரமும் ஆட அணை
மீதே
... அமுதம் போல் இனிமை கொண்ட குதலைச் சொற்களும் ஒரு
வழியாக ஆறு போலப் பெருகவே, பல விதமான விநோதங்களுடன்
இரண்டு கால்களிலும் உள்ள சிலம்புகளும் அசைந்து ஒலிக்க
படுக்கையின் மேல் அன்பு எழுகின்ற ஆசையை

பரிவு தரும் ஆசை விட மனம் ஒ(வ்)வாத ப(பா)தகனையும்
ஆள நினைவாயே
... விடுவதற்கு மனம் ஒத்துக் கொள்ளாத இந்தப்
பாதகனையும் ஆண்டருள நினைந்து அருளுவாயாக.

சிலை மலை அதான பரமர் தரு பால சிகி பரியதான
குமரேசா
... வில்லாக மேரு மலையைக் கொண்ட மேலான சிவபெருமான்
ஈன்ற புதல்வனே, மயிலைக் குதிரையாகக் கொண்ட குமரேசனே,

திரு மதுரை மேவும் அமணர் குலமான திருடர் கழு ஏற
வருவோனே
... அழகிய மதுரையில் இருந்த சமணர் குலமான
திருடர்களை கழுவில் ஏற்ற (திருஞானசம்பந்தராக) வந்தவனே,

க(ல்)லின் வடிவமான அகலிகை பெ(ண்)ணான கமல பத
மாயன் மருகோனே
... கல் வடிவமாகக் கிடந்த அகலிகை பெண்ணாக
வரும்படிச் செய்த தாமரை மலர் போன்ற திருவடியை உள்ள திருமாலின்
மருகனே,

கழனி நெடு வாளை கமுகு ஒடிய மோது கர புரியில் வீறு
பெருமாளே.
... கழனியில் இருக்கும் பெரிய வாளை மீன்கள் கமுக மரம்
ஒடிந்து விழும்படி மோதுகின்ற கரபுரமாகிய விரிஞ்சிபுரத்தில்*
வீற்றிருக்கும் பெருமாளே.


* கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே
காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.

பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.607  pg 2.608  pg 2.609  pg 2.610 
 WIKI_urai Song number: 673 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 669 - kulaiyamayi rOdhi (karapuram - virinjipuram*)

thanathanana thAna thanathanana thAna
     thanathanana thAna ...... thanathAnA

......... Song .........

kulaiyamayi rOthi kuviyavizhi veeRu
     kurukinisai pAdi ...... mukameethE

kuRuviyarvu lAva amuthinini thAna
     kuthalaiyumo rARu ...... padavEthAn

palavithavi nOtha mudanupaya pAtha
     paripuramu mAda ...... aNaimeethE

parivutharu mAsai vidamanamo vAtha
     pathakanaiyu mALa ...... ninaivAyE

silaimalaiya thAna paramartharu bAla
     sikipariya thAna ...... kumarEsA

thirumathurai mEvu mamaNarkula mAna
     thirudarkazhu vERa ...... varuvOnE

kalinvadiva mAna akalikaipe NAna
     kamalapatha mAyan ...... marukOnE

kazhaninedu vALai kamukodiya mOthu
     karapuriyil veeRu ...... perumALE.

......... Meaning .........

kulaiya mayir Othi kuviya vizhi veeRu kurukin isai pAdi muka(m) meethE kuRu viyarvu ulAva: Their hair became dishevelled; eyes went droopy; from their throat, clear sounds of cooing by birds like the hen emanated; little beads of perspiration appeared on their face;

amuthin inithAna kuthalaiyum or ARu padavE thAn pala vitha vinOthamudan upaya pAtha paripuramum Ada aNai meethE: like a gushing river, sweet sounds of babbling gushed from their mouth; the anklets on their two legs made strange and clinking noise during their movement; passion mounted while lying on their bed;

parivu tharum Asai vida manam o(v)vAtha pa(a)thakanaiyum ALa ninaivAyE: although I am reluctant to give up the infatuation for those whores, kindly think in terms of accepting this sinner to take into Your gracious hold, Oh Lord!

silai malai athAna paramar tharu pAla siki pariyathAna kumarEsA: You are the son of Lord SivA who used the mount MEru as His bow! Oh Lord KumarA, You have the Peacock as Your horse-like vehicle!

thiru mathurai mEvum amaNar kulamAna thirudar kazhu ERa varuvOnE: You came (as ThirugnAna Sambandhar) to the beautiful city Madhurai and sent the thieving clan of SamaNAs to the gallows!

ka(l)lin vadivamAna akalikai pe(N)NAna kamala patha mAyan marukOnE: He has lotus-like hallowed feet with which He restored the form of woman to AhalyA, who was cursed to be a stone; and You are the nephew of that Lord VishNu!

kazhani nedu vALai kamuku odiya mOthu kara puriyil veeRu perumALE.: The large vALai fish in the paddy-fields in this town, Karapuram (Virinjipuram)*, collide with the tall betelnut trees breaking their branches, and You have an abode in that shrine, Oh Great One!


* Karapuram, now known as Virinjipuram (Thiruvirinjai) is 8 miles west of Katpadi Junction near Vellore. As Virinjan (BrahmA) worshipped Lord SivA here, the place is called Virinjipuram.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 669 kulaiyamayi rOdhi - virinjipuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]