திருப்புகழ் 670 நிகரில் பஞ்ச  (விரிஞ்சிபுரம்)
Thiruppugazh 670 nigarilpanja  (virinjipuram)
Thiruppugazh - 670 nigarilpanja - virinjipuramSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தந்த தானன தனன தந்த தானன
     தனன தந்த தானன ...... தனதான

......... பாடல் .........

நிகரில் பஞ்ச பூதமு நினையு நெஞ்சு மாவியு
     நெகிழ வந்து நேர்படு ...... மவிரோதம்

நிகழ்த ரும்ப்ர பாகர நிரவ யம்ப ராபர
     நிருப அங்கு மாரவெ ...... ளெனவேதம்

சகர சங்க சாகர மெனமு ழங்கு வாதிகள்
     சமய பஞ்ச பாதக ...... ரறியாத

தனிமை கண்ட தானகிண் கிணிய தண்டை சூழ்வன
     சரண புண்ட ரீகம ...... தருள்வாயே

மகர விம்ப சீகர முகர வங்க வாரிதி
     மறுகி வெந்து வாய்விட ...... நெடுவான

வழிதி றந்து சேனையு மெதிர்ம லைந்த சூரனு
     மடிய இந்தி ராதியர் ...... குடியேறச்

சிகர துங்க மால்வரை தகர வென்றி வேல்விடு
     சிறுவ சந்த்ர சேகரர் ...... பெருவாழ்வே

திசைதொ றும்ப்ர பூபதி திசைமு கன்ப ராவிய
     திருவி ரிஞ்சை மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

நிகரில் பஞ்ச பூதமு ... ஒப்பில்லாத ஐந்து பூதங்களும்,

நினையு நெஞ்சும் ஆவியு ... நினைக்கும் நெஞ்சும், உயிரும்,

நெகிழ வந்து நேர்படும் அவிரோதம் ... நெகிழும்படி கூடுகின்ற
விரோதமின்மையை

நிகழ் தரும் ப்ரபாகர ... ஏற்படுத்தித் தரும் ஞான சூரியனே,

நிரவயம் பராபர ... அழிவில்லாத மேலான பொருளே,

நிருப அங்குமாரவெளென வேதம் ... அரசனே, அழகிய குமார
வேளே என்று வேதங்கள் முழங்குவதும்,

சகர சங்க சாகரம் என ... சகரர்களால் ஏற்பட்டதும், சங்குகள்
உள்ளதுமான சமுத்திரம் போல

முழங்கு வாதிகள் ... பெருத்த சப்தத்துடன் வாதம் செய்பவராம்

சமய பஞ்ச பாதகர் அறியாத ... சமயவாதிகளான பஞ்சமா
பாதகர்களால் அறியப்படாததும்,

தனிமை கண்டதான ... ஊழிக் காலத்தில் தனித்து நிற்பதும்,

கிண் கிணிய தண்டை சூழ்வன ... கிண்கிணியும் தண்டையும்
சூழ்ந்துள்ளதுமான

சரண புண்டரீகம் அது அருள்வாயே ... திருவடித் தாமரையதனைத்
தந்தருள்வாயாக.

மகர விம்ப சீகர ... மகர மீன்கள் நிறைந்ததும், ஒளி கொண்டதும்,
அலைகள் உள்ளதும்,

முகர வங்க வாரிதி ... ஒலி நிறைந்ததும், கப்பல்கள் செல்வதுமான
கடல்

மறுகி வெந்து வாய்விட ... கலக்கமுற்று, சூடாகி, கொந்தளிக்கவும்,

நெடுவான வழிதிறந்து சேனையும் ... பெரிய ஆகாய* மார்க்கமாக
வந்த சேனைகளும்,

எதிர்மலைந்த சூரனு மடிய ... எதிர்த்துப் போர் செய்த சூரனும்
மாண்டு போக,

இந்தி ராதியர் குடியேற ... இந்திராதி தேவர்கள் மீண்டும்
விண்ணுலகில் குடியேற,

சிகர துங்க மால்வரை தகர ... சிகரங்களை உடைய உயர்ந்த
மந்திரஜால கிரெளஞ்சமலை தகர்ந்துபோக

வென்றி வேல்விடு சிறுவ ... வெற்றி வேலினை விடுத்த சிறுவனே,

சந்த்ர சேகரர் பெருவாழ்வே ... சந்திரனை முடியில் சூடிய
சிவபிரானின் பெருஞ் செல்வமே,

திசைதொறும் ப்ர பூபதி ... திசைகள் தோறும் உள்ள கீர்த்திவாய்ந்த
அரசர்களும்,

திசைமுகன்பராவிய ... நான்முகன் பிரம்மாவும் பரவிப் போற்றிய

திருவிரிஞ்சை மேவிய பெருமாளே. ... திருவிரிஞ்சைத்** தலத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* சூரனது சேனைகள் ஆகாயவழியில் வராமல் தடுக்க முருகன் அண்டவாயிலை
அடைத்தான். சூரன் அம்புகள் ஏவி அவ்வழியைத் திறக்க, சேனைகள் ஆகாய
மார்க்கமாக போருக்கு வந்தன - கந்த புராணம்.


** கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே
காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது.

பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.609  pg 2.610  pg 2.611  pg 2.612 
 WIKI_urai Song number: 674 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 670 - nigaril pancha (virinjipuram)

nigaril pancha bUthamu ninaiyu nenjum Aviyu
     negizha vandhu nErpadum ...... avirOdham

nigazh tharum prabAkara niravayam parApara
     nirupa anku mAraveL ...... enavEdham

sakara sanka sAgaram ena muzhangu vAdhigaL
     samaya pancha pAthakar ...... aRiyAdha

thanimai kaNda dhAna kiNkiNiya thaNdai sUzh vana
     charaNa puNda reekamadh ...... aruLvAyE

makara vimba seekara mukara vanga vAridhi
     maRugi vendhu vAyvida ...... neduvAna

vazhi thiRandhu sEnaiyum edhir malaindha sUranu
     madiya indhi rAdhiyar ...... kudiyEra

sikara thunga mAlvarai thagara vendri vEl vidu
     siRuva chandhra sEkarar peru ...... vAzhvE

dhisai dhoRum prabU pathi dhisai mukan parAviya
     thiru virinjai mEviya ...... perumALE.

......... Meaning .........

nigaril pancha bUthamu ninaiyu nenjum Aviyu: "The five elements which are peerless, the mind with thinking ability and the soul

negizha vandhu nErpadum avirOdham: will all be melting and merging in a state of non-enmity

nigazh tharum prabAkara: by Your Grace, Oh the Radiant Sun of Knowledge!

niravayam parApara nirupa ankumAraveL: You are immortal and supreme, Oh beautiful Lord KumArA!"

enavEdham: - so chant the VEdAs (scriptures) praising It.

sakara sanka sAgaram ena muzhangu vAdhigaL: There are radical religious fanatics who make loud noise like the roaring ocean (founded by SakarAs) which is full of conch shells;

samaya pancha pAthakar aRiyAdha: but those religious debauchees can never know Its value!

thanimai kaNda dhAna: It stands all alone uniquely even when the Universe is about to end.

kiNkiNiya thaNdai sUzh vana: It is adorned by victorious anklet, with lilting beads inside.

charaNa puNda reekamadh aruLvAyE: It is nothing else but Your Lotus Feet; and will You grant It to me?

makara vimba seekara mukara vanga vAridhi: The seas which are full of sharks and fish, bright, with noisy waves, and with a number of ships passing through,

maRugi vendhu vAyvida: simply boiled over and evaporated due to excess heat;

neduvAna vazhi thiRandhu sEnaiyum: the armies of asuras (demons) who came along the wide sky*

edhir malaindha sUranu madiya: and SUran who opposed You fighting in the battlefield, - all died;

indhi rAdhiyar kudiyEra: the DEvAs, led by IndrA, were able to settle in their redeemed heavenly land;

sikara thunga mAlvarai thagara: and the peaks of the magical mountain Krouncha were shattered;

vendri vEl vidu siRuva: all these happened when You let go Your victorious Spear, Oh Young One!

chandhra sEkarar peru vAzhvE: You are the treasure of Lord SivA, who wears the crescent moon on His tresses!

dhisai dhoRum prabU pathi dhisai mukan parAviya: From all directions, the famous kings, DEvAs and BrahmA worship this famous place called

thiru virinjai mEviya perumALE.: Thiruvirinjai**, which is Your abode, Oh Great One!


* When SUran's armies attempted to come clandestinely by the aerial route, Murugan blocked the route.
However, SUran's arrows were able to pierce the block, and the armies entered through the sky - Kandha PurANam.


** Karapuram, now known as Virinjipuram (Thiruvirinjai) is 8 miles west of Katpadi Junction near Vellore. As Virinjan (BrahmA) worshipped Lord SivA here, the place is called Virinjipuram.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 670 nigaril panja - virinjipuram

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]