திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 668 ஒருவரைச் சிறுமனை (விரிஞ்சிபுரம்*) Thiruppugazh 668 oruvaraichchiRumanai (virinjipuram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் தனதனத் ...... தனதான ......... பாடல் ......... ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத் தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட் டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட் ...... டதனாலே ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட் டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட் டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச் ...... செயுமானார் தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச் சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத் தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத் ...... திரிவேனைச் சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத் தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற் சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட் ...... டருவாயே குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத் தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக் கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத் ...... திடும்வேலா குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற் சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக் கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப் ...... புணர்வோனே கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப் பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக் கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத் ...... திடுவோனே கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக் கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற் கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஒருவரைச் சிறு மனைச் சயன மெத்தையினில் வைத்து ஒருவரைத் தமது அலைக் கடையினில் சுழல விட்டு ஒருவரைப் பரபரப்பொடு தெருத் திரிய விட்டு ... ஒருவரை சிறு வீட்டின் படுக்கை மெத்தையில் படுக்க வைத்து, ஒருவரைத் தம் வீட்டு வாசலில் மனக் குழப்பத்தோடு சுழலவிட்டு, இன்னொருவரை மிகுந்த பரபரப்போடு வீதியில் அலையும்படியாக விட்டு, அதனாலே ஒருவருக்கு ஒருவர் சக்களமையில் சருவ விட்டு உருவு பத்திரம் எடுத்து அறையில் மல் புரிய விட்டு உயிர் பிழைப்பது கருத்து அளவில் உச்சிதம் என செ(ய்)யும் மானார் ... அத்தகையச் செயலாலே ஒருவருக்கு ஒருவர் போட்டிப் பகைமையில் போராட விட்டு, வாளை உருவி எடுத்து அறையில் மல் யுத்தம் செய்யும்படி வைத்து, உயிர் பிழைப்பதே யோசித்துப் பார்க்கில் தக்கது என்று எண்ணச் செய்கின்ற பொது மகளிர் தரும் மயல் ப்ரமை தனில் தவ நெறிக்கு அயல் என சரியையில் கிரியையில் தவமும் அற்று எனது கை தனம் அவத்தினில் இறைத்து எவரும் உற்று இகழ்வுற திரிவேனை ... தருகின்ற காம இச்சை மயக்கத்தினால் தவ வழிக்கு மாறுபட்டவனாகி, சரியை மார்க்கத்திலும், கிரியை மார்க்கத்திலும்* செய்வதற்குள்ள தவ ஒழுக்கம் இல்லாது போய், எனது கையிலிருந்த பொருளை வீணாகச் செலவழித்து, ஊரில் உள்ள யாவரும் இழித்துப் பேசும்படி திரிகின்ற என்னை, சகல துக்கமும் அற சகல சற் குணம் வர தரணியில் புகழ் பெற தகைமை பெற்று உனது பொன் சரணம் எப்பொழுது நட்பொடு நினைந்திட அருள் தருவாயே ... எல்லா வித துக்கங்களும் நீங்கவும், எல்லா வித நற் குணங்களும் கூடவும், பூமியில் நான் புகழ் அடையவும், மதிப்பைப் பெற்று உன்னுடைய அழகிய திருவடிகளை எப்போதும் அன்புடன் நான் நினைக்கும்படி உனது திருவருளைத் தந்தருள்க. குரு மொழி தவம் உடை புலவரை சிறையில் வைத்து அறவும் உக்கிரம் விளைத்திடும் அரக்கரை முழு கொடிய துர்க்குண அவத்தரை முதல் துரிசு அறுத்திடும் வேலா ... தங்களுடைய குருவான பிரஹஸ்பதி சொன்ன சொற்படி தவநெறியில் இருந்த தேவர்களை சிறைப்படுத்தி மிகவும் கொடுமை செய்து வந்த அசுரர்களை, முற்றிலும் கொடிய கெட்ட குணமுடைய வீணர்களை, முன்பு அவர்கள் செய்த குற்றங்களுக்காக அறுத்து எறிந்த வேலாயுதனே, குயில் மொழி கயல் விழி துகிர் இதழ் சிலை நுதல் சசி முகத்து இள நகை கன குழல் தன கிரி கொடி இடை பிடி நடை குற மகள் திருவினை புணர்வோனே ... குயில் போன்ற மொழியையும், கயல் மீன் போன்ற கண்களையும், பவளம் போன்ற வாயிதழையும், வில் போன்ற நெற்றியையும், சந்திரன் போன்ற முகத்தையும், புன்னகையையும், கரு மேகம் போன்ற கூந்தலையும், மலை போன்ற மார்பகங்களையும், கொடி போன்ற இடையையும், பெண் யானை போன்ற நடையையும் கொண்ட குற மகளாகிய வள்ளியை அணைபவனே, கருது சட் சமயிகட்கு அமைவுற கிறி உடை பறி தலை சமணரை குல முதல் பொடிபட கலகமிட்டு உடல் உயிர் கழுவின் உச்சியினில் வைத்திடுவோனே ... ஆராய்ச்சி செய்துள்ள ஆறு சமயத்து அறிஞரையும் வீழ்த்தும் தந்திரம் உடையவர்களும், மயிர் பறிபடும் தலையருமான சமணர்களின் குலம் முன்பு பொடிபட்டு ஒடுங்க, வாதப் போர் செய்து அவர்களின் உயிருள்ள உடலை கழு முனையில் (திருஞானசம்பந்தராக வந்து) வைத்திட்டவனே, கமுகினின் குலை அற கதலியின் கனி உக கழையின் முத்து உதிர கயல் குதித்து உலவு நல் கன வயல் திகழ் திரு கரபுரத்து அறுமுக பெருமாளே. ... கமுக மரத்தின் குலை தன் மீது விழுதலால் வாழை மரத்தினின்றும் பழங்கள் விழ, (அந்தப் பழங்கள் தன் மீது விழும் அதிர்ச்சியால்) கரும்பினின்றும் முத்துக்கள் விழ, கயல் மீன்கள் விளையாடும் நல்ல பெருமை வாய்ந்த வயல்கள் திகழ்கின்ற திருக்கரபுரம்** என்ற பெயருள்ள விரிஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் ஆறுமுகப் பெருமாளே. |
* நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு: 1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'. 2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'. 3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'. 4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. . . . சிவஞான சித்தியார் சூத்திரம். |
** கரபுரம் என்ற திருவிரிஞ்சைத் தலம் (விரிஞ்சிபுரம்) வேலூருக்கு மேற்கே காட்பாடியிலிருந்து 8 மைல் தொலைவில் உள்ளது. பிரமன் பூஜித்ததால் விரிஞ்சன்புரம் ஆகி, விரிஞ்சிபுரம் என்று பெயர் மருவிற்று. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.603 pg 2.604 pg 2.605 pg 2.606 pg 2.607 pg 2.608 WIKI_urai Song number: 672 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 668 - oruvaraich chiRumanai (karapuram - virinjipuram*) oruvaraic chiRumanaic chayanameth thaiyinilvaith thoruvaraith thamathalaik kadaiyiniR chuzhalavit toruvaraip paraparap podutheruth thiriyavit ...... tathanAlE oruvaruk koruvarsak kaLamaiyiR charuvavit turuvupath thirameduth thaRaiyinmaR puriyavit tuyirpizhaip pathukaruth thaLaviluc chithamenac ...... cheyumAnAr tharumayaR pramaithanit RavaneRik kayalenac chariyaiyiR kiriyaiyit Ravamumat Renathukaith thanamavath thiniliRaith thevarumut RikazhvuRath ...... thirivEnaic chakalathuk kamumaRac chakalasaR kuNamvarath tharaNiyiR pukazhpeRath thakaimaipet RunathupoR charaNamep pozhuthunat poduninaith thidaarut ...... taruvAyE kurumozhith thavamudaip pulavaraic chiRaiyilvaith thaRavumuk kiramviLaith thidumarak karaimuzhuk kodiyathurk kuNaavath tharaimuthat RurisaRuth ...... thidumvElA kuyilmozhik kayalvizhith thukirithazhc chilainuthaR sasimukath thiLanakaik kanakuzhat Ranakirik kodiyidaip pidinadaik kuRamakat tiruvinaip ...... puNarvOnE karuthusat samayikat kamaivuRak kiRiyudaip paRithalaic chamaNaraik kulamuthaR podipadak kalakamit tudaluyirk kazhuvinuc chiyinilvaith ...... thiduvOnE kamukiniR kulaiyaRak kathaliyiR kaniyukak kazhaiyinmuth thamuthirak kayalkuthith thulavunaR kanavayat Rikazhthiruk karapurath thaRumukap ...... perumALE. ......... Meaning ......... oruvaraic chiRu manaic chayana meththaiyinil vaiththu oruvaraith thamathu alaik kadaiyinil chuzhala vittu oruvaraip paraparappodu theruth thiriya vittu: They will let one suitor recline on the mattress in the bed in their little house while another suitor will be left stranded at the gate of their house in a state of dilemma. Yet another suitor will be on the street roaming here and there with a lot of anxiety. athanAlE oruvarukku oruvar sakkaLamaiyil charuva vittu uruvu paththiram eduththu aRaiyil mal puriya vittu uyir pizhaippathu karuththu aLavil ucchitham ena se(y)yum mAnAr: Because of these acts, they play one suitor against the other creating jealousy and rancour, sometimes drawing the sword from the sheath and sometimes wrestling in their room. Some suitors, on a second thought, are grateful to have been spared their lives; such thoughts are caused by these whores. tharum mayal pramai thanil thava neRikku ayal ena chariyaiyil kiriyaiyil thavamum atRu enathu kai thanam avaththinil iRaiththu evarum utRu ikazhvuRa thirivEnai: Because of the passionate desires aroused by them, I trangressed the righteous path of penance, lacking the discipline to perform the sariyai and kiriyai* functions and forsaking good conduct; and I squandered away all my savings in wasteful expenses and became the laughing stock of the town, jeered at by one and all. chakala thukkamum aRa chakala saR kuNam vara tharaNiyil pukazh peRa thakaimai petRu unathu pon charaNam eppozhuthu natpodu ninainthida aruL tharuvAyE: To remove all kinds of miseries that afflict me and to enable me to acquire all the virtues along with fame in this world, I have to earn my respect by contemplating with love, Your hallowed feet at all times; for that, kindly bless me graciously, Oh Lord! kuru mozhi thavam udai pulavarai siRaiyil vaiththu aRavum ukkiram viLaiththidum arakkarai muzhu kodiya thurkkuNa avaththarai muthal thurisu aRuththidum vElA: The demons imprisoned and tortured the celestials who used to implicitly follow the word of their Master Brahaspathi and remained in the right path. Those demons were a total waste possessing utterly vicious attributes, and they were punished for their earlier crimes by being severed by Your spear, Oh Lord! kuyil mozhi kayal vizhi thukir ithazh chilai nuthal sasi mukaththu iLa nakai kana kuzhal thana kiri kodi idai pidi nadai kuRa makaL thiruvinai puNarvOnE: She has a speech sweet like that of the cuckoo; eyes like the kayal fish; lips like the coral; forehead like a bow; and face like the moon. She wears a broad smile; Her hair is like the dark cloud; Her breasts are mountain-like; Her waist is slender like the creeper; Her gait is like that of the she-elephant; and She is VaLLi, the damsel of the KuRavAs, and You hug her tightly, Oh Lord! karuthu sat samayikatku amaivuRa kiRi udai paRi thalai chamaNarai kula muthal podipada kalakamittu udal uyir kazhuvin ucchiyinil vaiththiduvOnE: Those chamaNAS possessed the treachery that could knock down research scholars of the six religions; they were notorious in plucking the hair off their head; their entire lineage was smashed and decimated when You conquered them in debates and sent their bodies alive to the sharp gallows (coming as ThirugnAna Sambandhar), Oh Lord! kamukinin kulai aRa kathaliyin kani uka kazhaiyin muththu uthira kayal kuthiththu ulavu nal kana vayal thikazh thiru karapuraththu aRumuka perumALE.: Bunches of betelnuts fall from the trees on plantain trees knocking down clusters of plantain fruits which in turn shake the sugarcanes felling pearls on the waterfront in the fields where kayal fish jump about playing in this town, Thirukkarapuram (Virinjipuram); and You are seated here, Oh Six-faced Lord, the Great One! |
* The four methods of worship are: 1. sariyai: Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'. 2. kiriyai: Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'. 3. yOgam: Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'. 4. gnAnam: Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'. |
** Karapuram, now known as Virinjipuram (Thiruvirinjai) is 8 miles west of Katpadi Junction near Vellore. As Virinjan (BrahmA) worshipped Lord SivA here, the place is called Virinjipuram. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |