பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/604

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரிஞ்சிபுரம்) திருப்புகழ் உரை 45 செல்வப் புதல்வனான கந்தனே! முற்பட்டுப் பகைமை பூண்டு வந்து நெருங்கி எதிர்த்த பெரிய சூராதிகள் அடங்க வெற்றி மயில்மேல் ஏறியவனே! மேலான (ஒன்று) - மேலான (எண்ணம் ஒன்று) பரம்பொருளின் தியானம் (அமைந்த) பொருந்திய மேனாடர்) விண்ணோர் நின்று பரிதபித்து வேண்ட வேலாயுதத்தைச் செலுத்திக் கிரெளஞ்ச மலையை எதிர்த்தழித்தவனே! (பச்சை) மூங்கில்போலத் திரட்சியுள்ள தோள்களை உடைய மாதர்கள் வந்து வணங்கும் (பெருமாளே!) வேலூர் விளங்கும்படி வந்து வீற்றிருக்கும் பெருமாளே! (இறைஞ்ச அருள்தாராய்) விரிஞ்சிபுரம்’ (கரபுரி) 672. (தம்மிடம் வந்த) ஒருவரைத் (தங்களது) சிறிய வீட்டில் உள்ள படுக்கை மெத்தையில் இருக்கவைத்து, ஒருவரைத் தங்களுடைய கடைத்தலை வாசலில் (புறக்கடையில்) மனக்குழப்பத்துடன் சுழலவைத்து, ஒருவரை (வேகத்துடன்) ஆத்திரத்துடன் தெருவில் ಸಿ.) (அத்தகைய) செய்கைகளாலே

  • (கரம்) கழுதை முகமுள்ள அசுரராஜன் பூசித்த தலமாதலின் கரபுரி எனப் பெயர் வந்தது: "நிருதர் தங்குலத் துதித்தனன் கரனெனும் நிருதன்....சூலபாணியாம் வழித்துணை மருந்தைத் தொழுதான்" விரிஞ்சிபுரத்துச் சிவபிரான் திருநாமம் வழித்துணை நாதர்' (திருவிரிஞ்சைப் புராணம் - கரபுரிச் சருக்கம்)

(விரிஞ்சன்) - பிரமன் பூசித்ததால் விரிஞ்சன் புரம்' ஆயிற்று: "கரபுரி யெனும்பதி விரிஞ்சைப் பெயர்படைத்து பிரமனுஞ் சிவகதி பெற்றான்" திருவிரிஞ்சைப் புராணம் - விரிஞ்சைப்புரி சருக்கம்) 'பூவிலுறையுந் தேவன் மாமுனி கரன்துாய பூசை புரியும் பாதனார். ஆரணி விரிஞ்சேசனார்" - விரிஞ்சை பிள்ளைத்தமிழ் - 20.