திருப்புகழ் 667 சேல் ஆலம்  (வேலூர்)
Thiruppugazh 667 sElAlam  (vElUr)
Thiruppugazh - 667 sElAlam - vElUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தந்த தந்த தானான தந்த தந்த
     தானான தந்த தந்த ...... தனதான

......... பாடல் .........

சேலால மொன்று செங்கண் வேலாலும் வென்று மைந்தர்
     சீர்வாழ்வு சிந்தை பொன்ற ...... முதல்நாடித்

தேன்மேவு செஞ்சொ லின்சொல் தானோதி வந்த ணைந்து
     தீராத துன்ப இன்ப ...... முறுமாதர்

கோலாக லங்கள் கண்டு மாலாகி நின்ற னன்பு
     கூராமல் மங்கி யங்க ...... மழியாதே

கோள்கோடி பொன்ற வென்று நாடோறு நின்றி யங்கு
     கூர்வாய்மை கொண்டி றைஞ்ச ...... அருள்தாராய்

மாலாலு ழன்ற ணங்கை யார்மாம தன்க ரும்பின்
     வாகோட ழிந்தொ டுங்க ...... முதல்நாடி

வாழ்வான கந்த முந்த மாறாகி வந்த டர்ந்த
     மாசூரர் குன்ற வென்றி ...... மயிலேறீ

மேலாகு மொன்ற மைந்த மேனாடர் நின்றி ரங்க
     வேலாலெ றிந்து குன்றை ...... மலைவோனே

வேய்போல வுந்தி ரண்ட தோள்மாதர் வந்தி றைஞ்சு
     வேலூர்வி ளங்க வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சேல் ஆலம் ஒன்றும் செம் கண் வேலாலும் வென்று மைந்தர் ...
சேல் மீன் போலவும், ஆலகால விஷம் போலவும் உள்ள தம் செவ்விய
கண்ணாகிய வேலாலும் ஆண்களை வென்று,

சீர் வாழ்வு சிந்தை பொன்ற முதல் நாடி ... அவர்களுடைய சீரும்
நல் வாழ்வும் மனமும் குலைந்து அழியும்படி முதலிலேயே திட்டமிட்டு,

தேன் மேவும் செம் சொல் இன் சொல் தான் ஓதி வந்து
அணைந்து
... தேன் போன்றதும், செம்மை வாய்ந்ததும், இனியதுமாகிய
சொற்களையே பேசிக்கொண்டு வந்து அணைந்து,

தீராத துன்ப(ம்) இன்பம் உறு மாதர் கோலாகலங்கள் கண்டு
மாலாகி
... முடிவு இல்லாத துன்பத்தையும் இன்பத்தையும்
ஏற்படுத்துகின்ற விலைமாதர்களின் ஆடம்பரங்களைப் பார்த்து காம
மயக்கம் கொண்டவனாய்,

நின்றன் அன்பு கூராமல் மங்கி அங்கம் அழியாதே ... உன்
மீது அன்பு பெருகாமல், பொலிவு குன்றி, உடல் அழிந்து போகாமல்,

கோள் கோடி பொன்ற வென்று ... இடையூறுகள் கோடிக்
கணக்கானவைகள் வரினும் அவை அழிந்து போகும்படி வென்று,

நாள் தோறும் நின்று இயங்கும் கூர் வாய்மை கொண்டு
இறைஞ்ச அருள் தாராய்
... தினமும் ஒழுக்க வழியில் செல்வதான
சிறந்த உண்மைப் பக்தியை மேற்கொண்டு வணங்கும்படியாக உனது
திருவருளைத் தந்தருளுக.

மாலால் உழன்று அணங்கை ஆர் மா மதன் ... (இன்னது செய்வது
என்று தெரியாத) மயக்கத்தால் மனம் அலைப்புண்டு வருத்தத்தை
நிரம்பக் கொண்ட சிறந்த மன்மதன்

கரும்பின் வாகோடு அழிந்து ஒடுங்க முதல் நாடி வாழ்வான
கந்த
... கையில் கொண்ட கரும்பு வில்லின் அழகுடன் அழிந்து ஒடுங்க,
முன்பு நாடி அவனை எரித்த சிவ பெருமானின் செல்வப் புதல்வனான
கந்தனே,

முந்த மாறாகி வந்து அடர்ந்த மா சூரர் குன்ற வென்றி மயில்
ஏறீ
... முற்பட்டு, பகைமை பூண்டு வந்து நெருங்கி எதிர்த்த பெரிய
சூராதிகள் அடங்க வெற்றி மயிலின் மேல் ஏறியவனே,

மேலாகும் ஒன்று அமைந்த மேல் நாடர் நின்று இரங்க
வேலால் எறிந்து குன்றை மலைவோனே
... மேலான பரம்
பொருளின் தியானம் பொருந்திய விண்ணோர்கள் நின்று பரிதாபித்து
வேண்ட, வேலாயுதத்தைச் செலுத்தி கிரெளஞ்ச மலையை எதிர்த்து
அழித்தவனே,

வேய் போலவும் திரண்ட தோள் மாதர் வந்து இறைஞ்சு
வேலூர் விளங்க வந்த பெருமாளே.
... பச்சை மூங்கில் போல
திரட்சி உள்ள தோள்களை உடைய மாதர்கள் வந்து வணங்க, வேலூர்
விளங்கும்படி வந்து வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.601  pg 2.602  pg 2.603  pg 2.604 
 WIKI_urai Song number: 671 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 667 - sEl Alam (vElUr)

sElAla monRu sengaN vElAlum venRu mainthar
     seervAzhvu sinthai ponRa ...... muthalnAdith

thEnmEvu senjco linsol thAnOthi vantha Nainthu
     theerAtha thunpa inpa ...... muRumAthar

kOlAka langaL kaNdu mAlAki ninRa nanpu
     kUrAmal mangi yanga ...... mazhiyAthE

kOLkOdi ponRa venRu nAdORu ninRi yangu
     kUrvAymai koNdi Rainja ...... aruLthArAy

mAlAlu zhanRa Nangai yArmAma thanka rumpin
     vAkOda zhintho dunga ...... muthalnAdi

vAzhvAna kantha muntha mARAki vantha darntha
     mAcUrar kunRa venRi ...... mayilERee

mElAku monRa maintha mEnAdar ninRi ranga
     vElAle Rinthu kunRai ...... malaivOnE

vEypOla vunthi raNda thOLmAthar vanthi Rainju
     vElUrvi Langa vantha ...... perumALE.

......... Meaning .........

sEl Alam onRum sem kaN vElAlum venRu mainthar: They have one eye looking like the sEl fish and the other like poisonous venom; with their spear-like beautiful reddish eyes, they conquer men;

seer vAzhvu sinthai ponRa muthal nAdi: they preplan to ruin their wealth, lives and hearts;

thEn mEvum sem sol in sol thAn Othi vanthu aNainthu: their speech is sweet like honey, and with well-chosen words, they come forward to hug;

theerAtha thunpa(m) inpam uRu mAthar kOlAkalangaL kaNdu mAlAki: I have been enamoured of the posh display of these whores who are capable of offering endless misery and delusory bliss;

ninRan anpu kUrAmal mangi angam azhiyAthE: I do not show my love to You, and in order to arrest the loss of my gleam and the deterioration and destruction of my body,

kOL kOdi ponRa venRu: to face up to, and conquer, millions of obstacles that confront me,

nAL thORum ninRu iyangum kUr vAymai koNdu iRainjsa aruL thArAy: and in order that I follow everyday the righteous path of true devotion, kindly bless me to worship You.

mAlAl uzhanRu aNangai Ar mA mathan: The great Manmathan (God of Love) was totally perplexed, and roaming about aimlessly;

karumpin vAkOdu azhinthu odunga muthal nadi vAzhvAna kantha: as also the beauty of his sugarcane bow, he perished when Lord SivA went after him and burnt him down; You are that SivA's Treasure, Oh KanthA!

muntha mARAki vanthu adarntha mA cUrar kunRa venRi mayil ERee: Once, when the hostile and mighty demons accosted You within a close range, You mounted the peacock and subdued them all!

mElAkum onRu amaintha mEl nAdar ninRu iranga vElAl eRinthu kunRai malaivOnE: Acceding to the moving entreaty of the celestials who always contemplate upon the Supreme and Primordial Substance, You wielded the spear and destroyed the Mount Krouncha, Oh Lord!

vEy pOlavum thiraNda thOL mAthar vanthu iRainju vElUr viLanga vantha perumALE.: Many women with bamboo-like robust shoulders assemble here to offer worship, and You have chosen Your abode in this worthy place, VElUr, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 667 sEl Alam - vElUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]