திருப்புகழ் 649 தொடுத்த வாள்  (கதிர்காமம்)
Thiruppugazh 649 thoduththavAL  (kadhirgAmam)
Thiruppugazh - 649 thoduththavAL - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தனத்த தானன
     தனத்த தானன தனத்த தானன
          தனத்த தானன தனத்த தானன ...... தனதான

......... பாடல் .........

தொடுத்த வாளென விழித்து மார்முலை
     யசைத்து மேகலை மறைத்து மூடிகள்
          துடித்து நேர்கலை நெகிழ்த்து மாவியல் ...... கொளுமாதர்

சுகித்த ஹாவென நகைத்து மேல்விழ
     முடித்த வார்குழல் விரித்து மேவிதழ்
          துவர்த்த வாய்சுரு ளடக்கி மால்கொடு ...... வழியேபோய்ப்

படுத்த பாயலி லணைத்து மாமுலை
     பிடித்து மார்பொடு மழுத்தி வாயிதழ்
          கடித்து நாணம தழித்த பாவிகள் ...... வலையாலே

பலித்து நோய்பிணி கிடத்து பாய்மிசை
     வெளுத்து வாய்களு மலத்தி னாயென
          பசித்து தாகமு மெடுத்தி டாவுயி ...... ருழல்வேனோ

வெடுத்த தாடகை சினத்தை யோர்கணை
     விடுத்து யாகமும் நடத்தி யேயொரு
          மிகுத்த வார்சிலை முறித்த மாயவன் ...... மருகோனே

விதித்து ஞாலம தளித்த வேதனை
     யதிர்த்து வோர்முடி கரத்து லாயனல்
          விழித்து காமனை யெரித்த தாதையர் ...... குருநாதா

அடுத்த ஆயிர விடப்ப ணாமுடி
     நடுக்க மாமலை பிளக்க வேகவ
          டரக்கர் மாமுடி பதைக்க வேபொரு ...... மயில்வீரா

அறத்தில் வாழுமை சிறக்க வேயறு
     முகத்தி னோடணி குறத்தி யானையொ
          டருக்கொ ணாமலை தருக்கு லாவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தொடுத்த வாள் என விழித்து மார் முலை அசைத்து மேகலை
மறைத்து மூடிகள்
... செலுத்தப்பட்ட வாளாயுதம் என்று சொல்லும்படி
விழித்து, மார்பிலுள்ள தனத்தை அசைத்து, புடவையைக் கொண்டு
மறைத்து மூடும் மாதர்கள்.

துடித்து நேர் கலை நெகிழ்த்து மா இயல் கொ(ள்)ளு மாதர் ...
துடித்து எதிரே புடவையைத் தளர்த்தி, (ஆண்களின்) நல்ல ஒழுக்கத்தைப்
பறித்துக் கொள்ளுகின்ற விலைமாதர்கள்.

சுகித்த ஹா என நகைத்து மேல் விழ முடித்த வார் குழல்
விரித்துமே இதழ் துவர்த்த வாய் சுருள் அடக்கி மால்
கொ(ண்)டு வழியே போய்
... மகிழ்ச்சியாக ஹா என்று நகைத்து
மேலே விழ, முடித்திருந்த நீண்ட கூந்தலை விரித்து, வாயிதழ் சிவந்த
வாய்க்குள் வெற்றிலைச் சுருளை அடக்கிக்கொண்டு, காம ஆசையைக்
கொடுக்கின்ற அந்த வழியிலே சென்று,

படுத்த பாயலில் அணைத்து மா முலை பிடித்து மார்பொடும்
அழுத்தி வாய் இதழ் கடித்து நாணம் அது அழித்த பாவிகள்
வலையாலே
... படுத்த படுக்கையில் தழுவி, அழகிய தங்கள் மார்பை
மார்போடு அழுத்தி, வாயிதழைக் கடித்து நாணத்தை அழித்த பாவிகளின்
வலையில்

பலித்து நோய் பிணி கிடத்து பாய் மிசை வெளுத்து
வாய்களும் மல(ம்) தின்(னும்) நாய் என பசித்து தாகமும்
எடுத்திடா உயிர் உழல்வேனோ
... உண்டாகிய நோய்ப் பிணியால்
படுக்கை உற்று, பாயில் கிடப்பதால் உடல் வெளுத்து, வாய்களும் மலம்
தின்னும் நாய் போல் நாற்றம் எடுத்து, பசியும் தாகமும் உற்று எடுத்திட்ட
உயிருடன் அலைச்சல் உறுவேனோ?

வெடுத்த தாடகை சினத்தை ஓர் கணை விடுத்து யாகமும்
நடத்தியே ஒரு மிகுத்த வார் சிலை முறித்த மாயவன்
மருகோனே
... வெடுவெடுப்புடன் வந்த தாடகையின் கோபத்தை
ஓர் அம்பைச் செலுத்தி ஒழித்து, (முனிகளின்) யாகத்தை நடத்தியும்,
ஒரு சிறப்பான நீண்ட (சிவதனுசு என்ற) வில்லை முறித்தவரும்
ஆகிய (ராமனாம்) திருமாலின் மருகனே,

விதித்து ஞாலம் அது அளித்த வேதனை அதிர்த்து ஓர் முடி
கரத்து உலா அனல் விழித்து காமனை எரித்த தாதையர்
குருநாதா
... படைத்து உலகத்தைத் தந்த பிரமனைக் கலங்க வைத்து,
(அவனுடைய) ஒரு தலையை தமது கையில் கபாலமாகக் கொண்டு
திரிந்தவரும், நெற்றிக் கண்ணை விழித்து மன்மதனை எரித்தவரும்,
தந்தையுமாகிய சிவபெருமானின் குருநாதனே,

அடுத்த ஆயிர விடப் பணா முடி நடுக்க மா மலை பிளக்கவே
கவடு அரக்கர் மா முடி பதைக்கவே பொரு மயில் வீரா
...
வரிசையாயுள்ள, விஷம் கொண்ட, ஆயிரம் படங்களைக் கொண்ட
ஆதிசேஷன் நடுக்கம் கொள்ளவும், கிரெளஞ்ச மலை பிளவுபட்டுத்
தூளாகவும், வஞ்சக அரக்கர்களின் பெரிய தலைகள் பதைக்கவும்
சண்டை செய்த மயில் வீரனே,

அறத்தில் வாழ் உமை சிறக்கவே அறு முகத்தினோடு அணி
குறத்தி யானையோடு அருக்கொணா மலை தருக்கு உலாவிய
பெருமாளே.
... அறங்களை வளர்த்து வாழ்ந்த உமா தேவியார்
மகிழ்ச்சியுற, ஆறு திருமுகங்களுடன் விளங்கி அழகிய குறத்தியாகிய
வள்ளியுடனும், யானை வளர்த்த தேவயானையோடும்
அருக்கொணாமலை* என்னும் தலத்தில் களிப்புடன் உலாவிய
பெருமாளே.


* அருக்கொணாமலை இலங்கையில் கதிர்காமத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1065  pg 1.1066  pg 1.1067  pg 1.1068 
 WIKI_urai Song number: 431 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 649 - thoduththa vAL (*arukkoNAmalai - kadhirgAmam)

thoduththa vALena vizhiththu mArmulai
     yasaiththu mEkalai maRaiththu mUdikaL
          thudiththu nErkalai nekizhththu mAviyal ...... koLumAthar

sukiththa hAvena nakaiththu mElvizha
     mudiththa vArkuzhal viriththu mEvithazh
          thuvarththa vAysuru Ladakki mAlkodu ...... vazhiyEpOyp

paduththa pAyali laNaiththu mAmulai
     pidiththu mArpodu mazhuththi vAyithazh
          kadiththu nANama thazhiththa pAvikaL ...... valaiyAlE

paliththu nOypiNi kidaththu pAymisai
     veLuththu vAykaLu malaththi nAyena
          pasiththu thAkamu meduththi dAvuyi ...... ruzhalvEnO

veduththa thAdakai sinaththai yOrkaNai
     viduththu yAkamum nadaththi yEyoru
          mikuththa vArsilai muRiththa mAyavan ...... marukOnE

vithiththu njAlama thaLiththa vEthanai
     yathirththu vOrmudi karaththu lAyanal
          vizhiththu kAmanai yeriththa thAthaiyar ...... gurunAthA

aduththa Ayira vidappa NAmudi
     nadukka mAmalai piLakka vEkava
          darakkar mAmudi pathaikka vEporu ...... mayilveerA

aRaththil vAzhumai siRakka vEyaRu
     mukaththi nOdaNi kuRaththi yAnaiyo
          darukko NAmalai tharukku lAviya ...... perumALE.

......... Meaning .........

thoduththa vAL ena vizhiththu mAr mulai asaiththu mEkalai maRaiththu mUdikaL: Their stare is like a powerfully wielded sword; these women shake their bosom provocatively while covering it with their saree;

thudiththu nEr kalai nekizhththu mA iyal ko(L)Lu mAthar: these whores loosen their saree with a deliberate jerk and, with that gesture, steal all good morals (from the men);

sukiththa hA ena nakaiththu mEl vizha mudiththa vAr kuzhal viriththumE ithazh thuvarththa vAy suruL adakki mAl ko(N)du vazhiyE pOy: laughing boisterously and falling all over, letting their long braided hair loose, biting and holding the betel leaves in their reddish mouth, they lead (men) through the path of erotic pleasure;

paduththa pAyalil aNaiththu mA mulai pidiththu mArpodum azhuththi vAy ithazh kadiththu nANam athu azhiththa pAvikaL valaiyAlE: they hug (the men) on the bed in a lying position and press their suitors'chest on their beautiful bosom; they bite the men's lips and destroy any sense of modesty; caught in the web of these sinners,

paliththu nOy piNi kidaththu pAy misai veLuththu vAykaLum mala(m) thin(num) nAy ena pasiththu thAkamum eduththidA uyir uzhalvEnO: I am bed-ridden due to contracted diseases, my body becoming pale from being laid up on the bed indefinitely, my mouth exuding a stench like a dog eating faeces and my body suffering from hunger and thirst; am I destined to roam about barely clinging to my life?

veduththa thAdakai sinaththai Or kaNai viduththu yAkamum nadaththiyE oru mikuththa vAr silai muRiththa mAyavan marukOnE: When the demoness ThAdakai charged seethingly, He wielded a matchless arrow to destroy her anger; He facilitated the proper conduct of the sacrifices (by the sages); He broke the celebrated and tall bow (called SivaDhanush); and You are the nephew of that (RAmA) Lord VishNu!

vithiththu njAlam athu aLiththa vEthanai athirththu Or mudi karaththu ulA anal vizhiththu kAmanai eriththa thAthaiyar gurunAthA: You are the Master of Your Father, Lord SivA, who astounded Brahma, the creator of the world, by snatching one of His heads, holding the skull as a bowl in His hand and roaming about everywhere, and who burnt down Manmathan, God of Love, by emitting fire from His fiery eye on the forehead!

aduththa Ayira vidap paNA mudi nadukka mA malai piLakkavE kavadu arakkar mA mudi pathaikkavE poru mayil veerA: AdhisEshan, the great serpent with a series of poisonous hoods in thousands, shook violently, the mount Krouncha was shattered to pieces and the huge heads of the treacherous demons shuddered when You fought the war, mounting the peacock, Oh Valorous One!

aRaththil vAzh umai siRakkavE aRu mukaththinOdu aNi kuRaththi yAnaiyOdu arukkoNA malai tharukku ulAviya perumALE.: To the immense happiness of UmAdEvi, known for Her benevolent charities, You roamed about with Your six hallowed faces merrily, accompanied by VaLLi, the damsel of the KuRavAs, and DEvayAnai, the maid reared by an elephant, in the hillside of ArukkoNAmalai*, Oh Great One!


* ArukkoNAmalai is in Sri Lanka near the town KathirkAmam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 649 thoduththa vAL - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]