திருப்புகழ் 648 வருபவர்கள் ஓலை  (கதிர்காமம்)
Thiruppugazh 648 varubavargaLOlai  (kadhirgAmam)
Thiruppugazh - 648 varubavargaLOlai - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தந்த தனதனன தான தந்த
     தனதனன தான தந்த ...... தனதான

......... பாடல் .........

வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
     மடிபிடிய தாக நின்று ...... தொடர்போது

மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
     வசைகளுட னேதொ டர்ந்து ...... அடைவார்கள்

கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
     கரியபுன லேசொ ரிந்து ...... விடவேதான்

கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
     கடுகிவர வேணு மெந்தன் ...... முனமேதான்

பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
     பழநிதனி லேயி ருந்த ...... குமரேசா

பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
     பதமடியர் காண வந்த ...... கதிர்காமா

அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
     யணிவர் சடை யாளர் தந்த ...... முருகோனே

அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
     மடியர்தமை யாள வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று ...
யமனுடைய ஓலையை எடுத்துக்கொண்டு வருகின்ற காலதூதர்கள்
நாங்கள் யமனுடைய தூதர்கள் எனக் கூறி

மடிபிடிய தாக நின்று தொடர்போது ... மடியில் கை போட்டுப்
பிடிப்பவர்கள் போல நின்று என்னை விடாமல் தொடர்கின்றபோது

மயலதுபொலாத வம்பன் ... (என்னைப் பற்றி) இவன் மயக்கமுடைய
பொல்லாத வம்புக்காரன் என்றும்,

விரகுடையனாகுமென்று ... வஞ்சனைக்காரன் என்றும்,

வசைகளுடனேதொடர்ந்து அடைவார்கள் ... வசைச் சொற்கள்
கூறி என்னை நெருங்குவார்கள்.

கருவியதனாலெ றிந்து ... ஆயுதங்களினால் என்னைச் சித்திரவதை
செய்து,

சதைகள்தனையே யரிந்து ... என் சதைகளைத் துண்டுதுண்டாகச்
சேதித்து,

கரியபுனலேசொ ரிந்து விடவேதான் ... இரும்பை உருக்கிய கரு
நீரை என் வாயிலே விட்டு,

கழுமுனையி லேயி ரென்று விடுமெனும் ... கழுவின் முனையிலேயே
கிட என்று என்னைக் கிடத்தி,

அ(வ்) வேளை கண்டு ... என்னைத் துன்புறுத்தும் அந்த வேளையில்
என் இடரைக் கண்டு,

கடுகிவர வேணு மெந்தன்முனமேதான் ... அடியேன் முன்
விரைவில் ஓடோடி நீ வந்தருளவேண்டும்.

பரகிரியுலாவு செந்தி மலையினுடனே ... திருப்பரங்குன்றத்திலும்,
திருவுலா இடையறாது நிகழும் திருச்செந்தூரிலுள்ள சந்தன மலையிலும்,

இடும்பன் பழநிதனிலேயிருந்த குமரேசா ... இடும்பனால்*
கொண்டுவரப்பட்ட பழநிமலையிலும் எழுந்தருளிய குமரேசக் கடவுளே,

பதிகள் பல வாயிரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற ...
பல்லாயிரம் திருத்தலங்களிலும், பல கோடி மலைகளிலும் நிலையாக
இருந்து,

பதமடியர் காண வந்த கதிர்காமா ... திருவடியைக் கண்டு
அடியார்கள் நலம்பெற வந்த கதிர்காமனே,

அரவுபிறை பூளை தும்பை ... பாம்பையும், பிறைச் சந்திரனையும்,
பூளை தும்பை மலர்களையும்,

விலுவமொடு தூர்வை கொன்றை ... வில்வத்தையும்,
அருகம்புல்லையும், கொன்றைப்பூவையும்,

அணிவர் சடையாளர் தந்த முருகோனே ... அணிகின்ற சடையர்
சிவபிரான் தந்தருளிய முருகனே,

அரகரசிவாய சம்பு குருபரகு மார ... பாவங்களை நீக்குபவரும்,
சிவாய என்ற மூன்றெழுத்துக்களை உடையவரும், சுகத்தைத்
தருபவருமான சிவனாரின் குருநாதனே,

நம்புமடியர்தமை யாள வந்த பெருமாளே. ... நீயே கதி என்று
நம்பியுள்ள அடியார்களை ஆட்கொள்ள வந்தருளிய பெருமாளே.


* இடும்பன் சூரர்களின் போர்ப் பயிற்சி குரு. சிவ பக்தன். அகத்தியரின்
ஆணைப்படி வடக்கே இருந்த சிவ கிரி, சக்தி கிரி ஆகிய இரு மலைகளையும்
காவடியாகத் தூக்கி பொதிய மலைக்குச் செல்லும் வேளையில் முருகனின்
லீலையால் திருவாவினன்குடியில் பாரம் தாங்காமல் மலைகளைக் கீழே
வைத்தான். முருகன் மலைகளைத் தூக்கமுடியாதபடி செய்து இடும்பனைத்
தண்டாயுதத்தால் தாக்கி அவனுக்கு முக்தி அளித்த இடம் பழநிமலை.
இதிலிருந்துதான் காவடி எடுத்து இடும்பனை வழிபட்டு முருக தரிசனம்
செய்யும் முறை ஏற்பட்டது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1063  pg 1.1064  pg 1.1065  pg 1.1066 
 WIKI_urai Song number: 430 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 648 - varubavargaL Olai (kadhirgAmam)

varubavarga Lolai koNdu namanudaiya dhUtha rendru
     madipidiya dhAga nindru ...... thodarpOdhu

mayaladhupo lAdha vamban viragudaiya nAgu mendru
     vasaigaLuda nEtho darndhu ...... adaivArgaL

karuviyadha nAle Rindhu sadhaigaL thanaiyE arindhu
     kariyapuna lEso rindhu ...... vidavEthAn

kazhumunaiyi lEyi rendru vidumenuma vELai kaNdu
     kadugivara vENu mendhan ...... munamEthAn

paragiriyu lAvu sendhi malaiyinuda nEyi dumban
     pazhanithani lEyi rundha ...... kumarEsA

padhigaLpala Ayi rangaL malaigaLvegu kOdi nindra
     padhamadiyar kANa vandha ...... kadhirkAmA

aravupiRai pULai thumbai viluvamodu thUrvai kondrai
     aNivar sadai yALar thandha ...... murugOnE

araharasi vAya sambu guruparaku mAra nambum
     adiyarthamai yALa vandha ...... perumALE.

......... Meaning .........

varubavarga Lolai koNdu: They come with a message from Death-God;

namanudaiya dhUtha rendru: saying that they are His messengers,

madipidiya dhAga nindru thodarpOdhu: they catch hold of my waist firmly and follow me;

mayaladhupo lAdha vamban viragudaiya nAgu mendru: they call me a deluded and wicked aggressor and the most devious fellow;

vasaigaLuda nEtho darndhu adaivArgaL: and heap curses on me as they chase me.

karuviyadha nAle Rindhu sadhaigaL thanaiyE arindhu: They torture me with their weapons and slash my flesh into pieces.

kariyapuna lEso rindhu vidavEthAn: They pour black-hot molten iron into my mouth.

kazhumunaiyi lEyi rendru vidumenum: They condemn me to suffer at the tip of the gallows.

avELai kaNdu kadugivara vENu mendhan munamEthAn: At that very moment, You must come rushing to my aid.

paragiriyu lAvu sendhi malaiyinudanE: You are in ThirupparangkundRam and at the Sandal Mount near ThiruchchendhUr where You always majestically stroll about,

idumban pazhanithani lEyi rundha kumarEsA: and also at Pazhani Hill which was brought by Idumban*, Oh Lord KumaresA!

padhigaLpala Ayi rangaL malaigaLvegu kOdi nindra: You dwell at thousands of abodes and prevail over millions of mountains!

padhamadiyar kANa vandha kadhirkAmA: Your lotus feet are sought by Your devotees at KadhirgAmam!

aravupiRai pULai thumbai viluvamodu thUrvai kondrai: He wears the serpent, crescent moon, pULai (Indian laburnum) and thumbai (leucas) flowers, vilvam (bael) leaves, aRugam (cynodon) grass and kondRai (Indian laburnum) flowers upon

aNivar sadai yALar thandha murugOnE: His tresses; He is Lord SivA who kindly delivered You, Oh MurugA!

araharasi vAya sambu guruparakumAra: Oh KumarA, You are the Master of SivA who removes sins, who has the famous three letters SivAya for Himself and who gives solace to all!

nambum adiyarthamai yALa vandha perumALE.: Those devotees who trust You completely are taken charge of by You, Oh Great One!


* Idumban was the master of archery for SUran. He was also a devotee of Lord SivA. Once Sage Agasthya asked him to bring two mounts Sivagiri and Sakthigiri from the North to Podhigai in the South. He dangled the two mounts as Kavadi over his shoulders and proceeded south. When he reached ThiruvAvinankudi, he kept the mounts down to take a break when Lord Murugan played a game with him. The mounts became too heavy to be lifted. In the ensuing war, Murugan killed Idumban and liberated his soul. Since then, the mounts became Pazhani Hills. The custom of taking Kavadi by devotees (with dangling offerings) thus came into vogue.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 648 varubavargaL Olai - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]