திருப்புகழ் 650 விலைக்கு மேனியில்  (திருக்கோணமலை)
Thiruppugazh 650 vilaikkumEniyil  (thirukkONamalai)
Thiruppugazh - 650 vilaikkumEniyil - thirukkONamalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தனத்தான தானன
     தனத்த தானன தனத்தான தானன
          தனத்த தானன தனத்தான தானன ...... தனதான

......... பாடல் .........

விலைக்கு மேனியி லணிக்கோவை மேகலை
     தரித்த வாடையு மணிப்பூணு மாகவெ
          மினுக்கு மாதர்க ளிடக்காம மூழ்கியெ ...... மயலூறி

மிகுத்த காமிய னெனப்பாரு ளோரெதிர்
     நகைக்க வேயுட லெடுத்தேவி யாகுல
          வெறுப்ப தாகியெ யுழைத்தேவி டாய்படு ...... கொடியேனைக்

கலக்க மாகவெ மலக்கூடி லேமிகு
     பிணிக்கு ளாகியெ தவிக்காம லேயுனை
          கவிக்கு ளாய்சொலி கடைத்தேற வேசெயு ...... மொருவாழ்வே

கதிக்கு நாதனி யுனைத்தேடி யேபுக
     ழுரைக்கு நாயெனை யருட்பார்வை யாகவெ
          கழற்கு ளாகவெ சிறப்பான தாயருள் ...... தரவேணும்

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர்
     திருக்கு மாரனெ முகத்தாறு தேசிக
          வடிப்ப மாதொரு குறப்பாவை யாள்மகிழ் ...... தருவேளே

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர்
     அகத்ய மாமுநி யிடைக்காடர் கீரனும்
          வகுத்த பாவினில் பொருட்கோல மாய்வரு ...... முருகோனே

நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்
     திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர
          நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் ...... வருவோனே

நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ
     யெடுத்த வேல்கொடு பொடித்தூள தாஎறி
          நினைத்த காரிய மநுக்கூல மேபுரி ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

விலைக்கு மேனியில் அணிக் கோவை மேகலை தரித்த
ஆடையும் மணி பூணும் ஆகவெ
... தக்க விலை பெறும் பொருட்டு,
உடலில் அழகிய வடங்களும், இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து,
ஆடையுடனும் ரத்தின ஆபரணங்களுடனும்

மினுக்கு மாதர்கள் இடக் காமம் மூழ்கியே மயல் ஊறி ...
மினுக்குகின்ற விலைமாதர்களிடம் காம மயக்கில் மூழ்கி, மோகத்தில்
அழுந்தி,

மிகுத்த காமியன் என பார் உ(ள்)ளோர் எதிர் நகைக்கவே
உடல் எடுத்தே
... பெரிய காம லோலன் என்று உலகில் உள்ளவர்கள்
என் எதிரே சிரிப்பதற்காகவே இந்த உடலை எடுத்து,

வியாகுல வெறுப்பு அதாகியெ உழைத்தே விடாய் படு
கொடியேனை
... துன்பமும் வெறுப்பும் கொண்டு உழைத்து களைப்புக்
கொள்ளும் கொடியவனாகிய என்னை,

கலக்கமாகவே மலக் கூடிலே மிகு பிணிக்குள் ஆகியே
தவிக்காமலே
... கலக்க நெஞ்சினனாய், (ஆணவம், கன்மம், மாயை
என்ற) மும்மலக் கூடாகிய இந்த உடலில் நிரம்ப நோய்களுக்குள்ளாகி
தவிக்க வைக்காமல்,

உனை கவிக்கு(ள்)ளாய் சொ(ல்)லி கடைத்தேறவே செயும்
ஒரு வாழ்வே
... உன்னை பாட்டில் அமைத்து ஈடேறச் செய்யும்
ஒப்பற்ற அருள் செல்வமாகிய வாழ்வைத் தந்து,

கதிக்கு நாதன் நி (நீ) உனைத் தேடியே புகழ் உரைக்கு
நாயெனை அருள் பார்வையாகவெ
... நற்கதியை தருகின்ற நாதன்
நீ, உன்னைத் தேடி உனது திருப்புகழை உரைக்கும் நாய் போன்ற
சிறியேனை உன் அருள் பார்வையால்

கழற்குள் ஆகவே சிறப்பான தாய் அருள் தரவேணும் ... உன்
திருவடியைக் கூடுவதற்காகவே சிறந்ததான தாய் அன்பை எனக்கு
அருள் புரிய வேண்டும்.

மலைக்கு நாயக சிவக்காமி நாயகர் திரு குமாரன் என
முகத்து ஆறு தேசிக
... எல்ல மலைகளுக்கும் தலைவனே, சிவகாமி
அம்மையின் தலைவராகிய சிவபெருமானின் அழகிய குமாரனே, ஆறு
திரு முகங்களை உடைய குருமூர்த்தியே,

வடிப்ப மாது ஒரு குறப் பாவையாள் மகிழ் தரு வேளே ...
வடிவழகுள்ள மாதாகிய குறப் பெண் வள்ளி மகிழும் வேளே,

வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி
இடைக் காடர் கீரனும் வகுத்த பாவினில் பொருள் கோலமாய்
வரு முருகோனே
... வசிஷ்டர், காசியப்பர், தவத்தில் சிறந்த யோகிகள்,
அகத்திய மாமுனிவர், இடைக்காடர், நக்கீரர் ஆகியோர் அமைத்த
பாடல்களில் பொருள் உருவாய் வரும் முருகோனே,

நிலைக்கு நான் மறை மகத்தான பூசுரர் திருக்கொணா மலை
தலத்து
... அழியாது நிலைத்து நிற்கும் நான்கு வேதங்களைப் பயின்ற
சிறந்த அந்தணர்கள் திருக்கோணமலை* என்னும் தலத்தில்

ஆரு(ம்) கோபுர நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில்
வருவோனே
... விளங்கும் கோபுர நிலையின் வாசலில் கிளிப்பாடு பூதி
என்னும் இடத்தில் எழுந்தருளி வருபவனே,

நிகழ்த்தும் ஏழ் பவ கடல் சூறையாகவே எடுத்த வேல்
கொ(ண்)டு பொடி தூளதா எறி
... நிகழ்கின்ற ஏழு பிறப்பு என்னும்
கடல் வற்றிப் போய் அழிய, திருக்கரத்தில் எடுத்த வேலைக் கொண்டு
(பகைவர்களைப்) பொடிப்பொடியாகப் போகும்படிச் செலுத்தி,

நினைத்த காரியம் அநு(க்) கூலமே புரி பெருமாளே. ...
நினைத்த காரியங்களெல்லாம் நன்மையாகக் கைகூடும்படி அருளும்
பெருமாளே.


* திருக்கோணமலை இலங்கையில் உள்ளது. தட்சிண கயிலாயங்கள் மூன்று
- திருக்காளத்தி, திருச்சிராப்பள்ளி, திருக்கோணமலை. கிளிப்பாடு பூதி என்பது
திருக்கோணமலைக் கோயில் கோபுர நிலையில் உள்ள ஓரிடத்துக்குப் பெயர்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1067  pg 1.1068  pg 1.1069  pg 1.1070  pg 1.1071  pg 1.1072 
 WIKI_urai Song number: 432 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 650 - vilaikku mEniyil (thirukkONamalai)

vilaikku mEniyi laNikkOvai mEkalai
     thariththa vAdaiyu maNippUNu mAkave
          minukku mAtharka LidakkAma mUzhkiye ...... mayalURi

mikuththa kAmiya nenappAru LOrethir
     nakaikka vEyuda leduththEvi yAkula
          veRuppa thAkiye yuzhaiththEvi dAypadu ...... kodiyEnaik

kalakka mAkave malakkUdi lEmiku
     piNikku LAkiye thavikkAma lEyunai
          kavikku LAysoli kadaiththERa vEseyu ...... moruvAzhvE

kathikku nAthani yunaiththEdi yEpuka
     zhuraikku nAyenai yarutpArvai yAkave
          kazhaRku LAkave siRappAna thAyaruL ...... tharavENum

malaikku nAyaka sivakkAmi nAyakar
     thirukku mArane mukaththARu thEsika
          vadippa mAthoru kuRappAvai yALmakizh ...... tharuvELE

vasittar kAsipar thavaththAna yOkiyar
     akathya mAmuni yidaikkAdar keeranum
          vakuththa pAvinil porutkOla mAyvaru ...... murukOnE

nilaikku nAnmaRai makaththAna pUsurar
     thirukko NAmalai thalaththAru kOpura
          nilaikkuL vAyinil kiLippAdu pUthiyil ...... varuvOnE

nikazhththu mEzhpava kadaRcURai yAkave
     yeduththa vElkodu podiththULa thAeRi
          ninaiththa kAriya manukkUla mEpuri ...... perumALE.

......... Meaning .........

vilaikku mEniyil aNik kOvai mEkalai thariththa Adaiyum maNi pUNum Akave: In order to obtain the best price, they wear beautiful bangles, chains and waistbands on their body; with outfits and ornaments of gems

minukku mAtharkaL idak kAmam mUzhkiyE mayal URi: these whores show off in a flashy way; being immersed in a delusory passion for them,

mikuththa kAmiyan ena pAr u(L)LOr ethir nakaikkavE udal eduththE: I have been branded as a passionate maniac by the people of this world; the purpose of my birth in this body is to be the laughing stock;

viyAkula veRuppu athAkiye uzhaiththE vidAy padu kodiyEnai: I toil a lot and get tired, feeling miserable and hating myself; I am a very wicked person;

kalakkamAkavE malak kUdilE miku piNikkuL AkiyE thavikkAmalE: without confusing my mind any further, and saving me from many a debilitating disease that afflict this body which is nothing but a cage for the three slags (namely, arrogance, karma and delusion),

unai kavikku(L)LAy so(l)li kadaiththERavE seyum oru vAzhvE: kindly grant me a life that attains matchless and blissful salvation by praising You in my songs;

kathikku nAthan ni(nee) unaith thEdiyE pukazh uraikku nAyenai aruL pArvaiyAkave kazhaRkuL AkavE siRappAnathAy aruL tharavENum: You are the Lord who dispenses the righteous destiny to me; I, the lowly dog, seek to sing Your Glory, and You should kindly bless me, with a mother's great love, so that I could attain Your hallowed feet!

malaikku nAyaka sivakkAmi nAyakar thiru kumAran ena mukaththu ARu thEsika: You are the Lord of all mountains! You are the handsome son of Lord SivA, the consort of DEvi SivagAmi (PArvathi)! You are the Great Master, with six hallowed faces!

vadippa mAthu oru kuRap pAvaiyAL makizh tharu vELE: You are the Lord elating the exquisitely beautiful damsel, VaLLi, of the KuRavAs!

vasittar kAsipar thavaththAna yOkiyar akathya mA muni idaik kAdar keeranum vakuththa pAvinil poruL kOlamAy varu murukOnE: Oh MurugA, You pervade as the inner meaning of the poems composed by Vasishtar, KAsyapar, other Yogis who have excelled in penance, the great sage Agasthyar, IdaikkAdar and Nakkeerar!

nilaikku nAn maRai makaththAna pUsurar thirukkoNA malai thalaththu: This place ThirukkONamalai* has many great brahmins living here, who have mastered the imperishable four vEdAs;

Aru(m) kOpura nilaikkuL vAyinil kiLippAdu pUthiyil varuvOnE: there is a prominent gateway known as KiLippAdu PUthi which is Your seat in the temple tower!

nikazhththum Ezh pava kadal cURaiyAkavE eduththa vEl ko(N)du podi thULathA eRi: The spear in Your hallowed hand is capable of drying up the sea of seven existing births and destroying the enemies into pieces;

ninaiththa kAriyam anu(k)kUlamE puri perumALE.: when You graciously bless, all wishes are realised beneficially, Oh Great One!


* ThirukkONamalai is in Sri LankA. There are three KailAshes in the South, namely, ThirukkAalaththi, ThiruchirAppaLLi and ThirukkONamalai. In the last-mentioned town's temple tower, there is a gateway known as KiLippAdu PUthi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 650 vilaikku mEniyil - thirukkONamalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]