திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 647 முதிரு மாரவாரம் (கதிர்காமம்) Thiruppugazh 647 mudhirumAravAram (kadhirgAmam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தான தான தத்த தனன தான தான தத்த தனன தான தான தத்த ...... தனதான ......... பாடல் ......... முதிரு மார வார நட்பொ டிலகு மார வார மெற்றி முனியு மார வார முற்ற ...... கடலாலே முடிவி லாத தோர்வ டக்கி லெரியு மால மார்பி டத்து முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே வெதிரி லாயர் வாயில் வைத்து மதுர ராக நீடி சைக்கும் வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே விளையு மோக போக முற்றி அளவி லாத காதல் பெற்ற விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும் கதிர காம மாந கர்க்கு ளெதிரி லாத வேல்த ரித்த கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா கயலு லாம்வி லோச னத்தி களப மார்ப யோத ரத்தி ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா அதிர வீசி யாடும் வெற்றி விடையி லேறு மீசர் கற்க அரிய ஞான வாச கத்தை ...... யருள்வோனே அகில லோக மீது சுற்றி யசுரர் லோக நீறெ ழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முதிரு(ம்) மாரவாரம் நட்பொடு இலகும் ஆர் அவ் ஆரம் எற்றி முனியும் ஆரவாரம் உற்ற கடலாலே ... மன்மதனுக்கு உரிய அன்பு முதிர்ந்த நட்புடன் விளங்கும் கடலாலும் (ஏனெனில் மன்மதனும், கடலும் இவளிடம் பிணங்கி உள்ளனர்), நிறைந்த அந்த முத்துக்களை வீசிக் கோபிக்கும் (அலைகளின்) பேரொலி பொருந்திய கடல் ஓசையாலும், முடிவு இ(ல்)லாதது ஓர் வடக்கில் எரியும் ஆலம் ஆர்பு இடத்து முழுகி ஏறி மேல் எறிக்கு(ம்) நிலவாலே ... அழிவு இல்லாததாய், ஒப்பற்ற (கடலின்) வடக்குப் பக்கத்தில் (ஊழித் தீயாகிய) வடவா முகாக்கினி போல் எரிவதாய், விஷம் நிறைந்து தோன்றிய இடமாகிய கடலில் முழுகி, விண்ணில் ஏறி கிரணங்களை மேலே வீசும் நிலவினாலும், வெதிரில் ஆயர் வாயில் வைத்து மதுர ராகம் நீடு இசைக்கும் ... மூங்கிலில் இடையர்கள் வாயை வைத்து இனிமையான ராகங்களை நெடு நேரம் வாசித்து எழுப்பும் இசையின் ஒலியினாலும், வினை விடாத தாயருக்கும் அழியாதே ... தமது (வசை கூறும்) தொழிலை விடாது செய்யும் தாய்மார்களினாலும் அழிவில்லாமல், விளையு(ம்) மோக போக(ம்) முற்றி அளவிலாத காதல் பெற்ற விகட மாதை நீ அணைக்க வர வேணும் ... உண்டாகும் காம போகமே நிரம்பி அளவு கடந்த ஆசை கொண்டுள்ள இந்த அழகிய பெண்ணை நீ தழுவ வந்தருள வேண்டும். கதிரகாம மா நகர்க்குள் எதிர் இலாத வேல் தரித்த கடவுளே கலாப சித்ர மயில் வீரா ... கதிர்காமம் என்னும் பெரிய ஊருக்குள் ஒப்பில்லாத வேலாயுதத்தைத் தரித்த கடவுளே, தோகை அழகு வாய்ந்த மயில் வீரனே, கயல் உலாம் விலோசனத்தி களபம் ஆர் பயோதரத்தி ககனம் மேவுவாள் ஒருத்தி மணவாளா ... கயல் மீன் போன்ற கண்களை உடையவள், கலவைச் சாந்து அணிந்த மார்பை உடையவள், விண்ணுலகத்தில் வீற்றிருந்தவள் ஆகிய ஒப்பற்றவளாகிய தேவயானையின் கணவனே, அதிர வீசி ஆடும் வெற்றி விடையில் ஏறும் ஈசர் கற்க அரிய ஞான வாசகத்தை அருள்வோனே ... அதிரும்படியாக காலை வீசி நடனம் ஆடுகின்றவரும், வெற்றி வாய்ந்த (நந்தி) ரிஷபத்தின் மேல் ஏறுபவரும் ஆகிய சிவபெருமான் அறியும்படி, அருமையான ஞான உபதேசத்தை அவருக்கு அருளியவனே, அகில லோகம் மீது சுற்றி அசுரர் லோகம் நீறு எழுப்பி அமரர் லோகம் வாழ வைத்த பெருமாளே. ... எல்லா உலகங்களின் மீதும் உலவி வலம் வந்து, அசுரர் உலகத்தைப் பொடியாக்கி, தேவலோகத்தை வாழ வைத்த பெருமாளே. |
இப்பாடலின் ஒவ்வொரு அடியின் பிற் பாகங்கள் ஒன்று சேர, பிறிதொரு பாடல் அமைகின்றதைக் காணலாம்: முனியு மார வார முற்ற ...... கடலாலே முழுகி யேறி மேலெ றிக்கு ...... நிலவாலே வினைவி டாத தாய ருக்கு ...... மழியாதே விகட மாதை நீய ணைக்க ...... வரவேணும் கடவு ளேக லாப சித்ர ...... மயில்வீரா ககன மேவு வாளொ ருத்தி ...... மணவாளா அரிய ஞான வாசகத்தை ...... யருள்வோனே அமரர் லோகம் வாழ வைத்த ...... பெருமாளே. |
இப்பாடல் அகத்துறையில் 'நாயக நாயகி' பாவத்தில், முருகனைப் பிரிந்த தலைவிக்காக அவளது செவிலித் தாய் பாடியது. மன்மதன், கடல் அலைகள், நிலவு, குழல் ஓசை, மாதர்களின் வசைப் பேச்சு - இவை தலைவியின் பிரிவுத்துயரைக் கூட்டுவன. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.1061 pg 1.1062 pg 1.1063 pg 1.1064 WIKI_urai Song number: 429 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 647 - mudhiru mAravAram (kadhirgAmam) muthiru mAra vAra natpo dilaku mAra vAra metRi muniyu mAra vAra mutRa ...... kadalAlE mudivi lAtha thOrva dakki leriyu mAla mArpi daththu muzhuki yERi mEle Rikku ...... nilavAlE vethiri lAyar vAyil vaiththu mathura rAka needi saikkum vinaivi dAtha thAya rukku ...... mazhiyAthE viLaiyu mOka pOka mutRi aLavi lAtha kAthal petRa vikada mAthai neeya Naikka ...... varavENum kathira kAma mAna karkku Lethiri lAtha vEltha riththa kadavu LEka lApa sithra ...... mayilveerA kayalu lAmvi lOsa naththi kaLapa mArpa yOtha raththi kakana mEvu vALo ruththi ...... maNavALA athira veesi yAdum vetRi vidaiyi lERu meesar kaRka ariya njAna vAsa kaththai ...... yaruLvOnE akila lOka meethu sutRi yasurar lOka neeRe zhuppi amarar lOkam vAzha vaiththa ...... perumALE. ......... Meaning ......... muthiru(m) mAravAram natpodu ilakum Ar av Aram etRi muniyum AravAram utRa kadalAlE: The sea has a matured friendship (towards her) comparable to that of Manmathan (God of Love) - (as both Manmathan and the sea are equally harassing her); in spite of the roaring sea with its angry waves lashing out on the shore tossing those wholesome pearls, mudivu i(l)lAthathu Or vadakkil eriyum Alam Arpu idaththu muzhuki ERi mEl eRikku(m) nilavAlE: in spite of the rays of the moon that has climbed up the sky after dipping into the poisonous sea and burning like the ceaseless fire, vadavA mukAgni (the inferno that spreads from the north pole on the doom's day at the end of the aeon), vethiril Ayar vAyil vaiththu mathura rAkam needu isaikkum: in spite of the sound of melodious music emanating from the bamboo flutes on whose holes the shepherd boys place their lips and play for a long time, vinai vidAtha thAyarukkum azhiyAthE: and despite the continuous scandal-mongering of women folk, she remains undaunted; viLaiyu(m) mOka pOka(m) mutRi aLavilAtha kAthal petRa vikada mAthai nee aNaikka vara vENum: she is filled with a limitless desire due to overwhelming passion for You; and You must come to hug this beautiful girl! kathirakAma mA nakarkkuL ethir ilAtha vEl thariththa kadavuLE kalApa sithra mayil veerA: You are seated in this large town, KadhirgAmam, holding in Your hand the matchless spear, Oh Lord! You are the brave one mounting the peacock with a beautiful plume! kayal ulAm vilOsanaththi kaLapam Ar payOtharaththi kakanam mEvuvAL oruththi maNavALA: She has eyes that look like kayal fish; she smears the paste of sandalwood powder on her bosom; she reigns in the celestial land; and You are the consort of that unique DEvayAnai! athira veesi Adum vetRi vidaiyil ERum eesar kaRka ariya njAna vAsakaththai aruLvOnE: He dances swinging his feet with a rhythmic beat of rumbling sound; He mounts the triumphant bull (Nandi); and making that Lord SivA learn the rare lesson on True Knowledge, You graciously preached to Him! akila lOkam meethu sutRi asurar lOkam neeRu ezhuppi amarar lOkam vAzha vaiththa perumALE.: You flew around all the worlds; You annihilated the land of the demons and brought prosperity to the celestial land, Oh Great One! |
If all even numbered lines of this song are set in a sequence, another song is obtained as follows: muniyu mAra vAra mutRa ...... kadalAlE muzhuki yERi mEle Rikku ...... nilavAlE vinaivi dAtha thAya rukku ...... mazhiyAthE vikada mAthai neeya Naikka ...... varavENum kadavu LEka lApa sithra ...... mayilveerA kakana mEvu vALo ruththi ...... maNavALA ariya njAna vAsakaththai ...... yaruLvOnE amarar lOkam vAzha vaiththa ...... perumALE. |
This song has been written in the Nayaka-Nayaki BhAva where the poet assumes the role of the foster-mother portraying the pangs of separation of the heroine from Lord Murugan. The Love God, the wavy seas, the moonlight, the music from the flute and the scandal-mongering women are some of the sources which aggravate the agony of separation from the Lord. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |