திருப்புகழ் 636 திருமகள் உலாவும்  (கதிர்காமம்)
Thiruppugazh 636 thirumagaLulAvum  (kadhirgAmam)
Thiruppugazh - 636 thirumagaLulAvum - kadhirgAmamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தான தனதனன தான
     தனதனன தானத் ...... தனதான

......... பாடல் .........

திருமகளு லாவு மிருபுயமு ராரி
     திருமருக நாமப் ...... பெருமாள்காண்

செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்
     தெரிதருகு மாரப் ...... பெருமாள்காண்

மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு
     மரகதம யூரப் ...... பெருமாள்காண்

மணிதரளம் வீசி யணியருவி சூழ
     மருவுகதிர் காமப் ...... பெருமாள்காண்

அருவரைகள் நீறு படஅசுரர் மாள
     அமர்பொருத வீரப் ...... பெருமாள்காண்

அரவுபிறை வாரி விரவுசடை வேணி
     அமலர்குரு நாதப் ...... பெருமாள்காண்

இருவினையி லாத தருவினைவி டாத
     இமையவர்கு லேசப் ...... பெருமாள்காண்

இலகுசிலை வேடர் கொடியினதி பார
     இருதனவி நோதப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

திருமகள் உலாவும் இருபுய ... லக்ஷ்மிதேவி விளையாடும் இரண்டு
புயங்களும் உடைய

முராரி திருமருக நாமப் பெருமாள்காண் ... திருமாலின் அழகிய
மருகன் என்ற திருநாமத்தைக் கொண்ட பெருமான் நீதான்.

செகதலமும் வானும் ... மண்ணுலகிலும் விண்ணுலகிலும்

மிகுதிபெறு பாடல் ... மிகவும் போற்றிப் புகழும் (தேவாரப்)
பாடல்களை

தெரிதரு குமாரப் பெருமாள்காண் ... அளித்தருளிய (ஞானசம்பந்த)
குமாரப்பெருமான் நீதான்.

மருவும் அடியார்கள் மனதில்விளையாடு ... வணங்கும்
அடியார்களின் மனதிலே விளையாடும்

மரகதமயூரப் பெருமாள்காண் ... பச்சை மயில் ஏறும் பெருமான்
நீதான்.

மணிதரளம் வீசி யணியருவி சூழ ... மணியையும் முத்தையும் வீசி
அழகிய அருவி* சூழ்ந்து

மருவு கதிர்காமப் பெருமாள்காண் ... விளங்கும் கதிர்காமத்
தலத்துப் பெருமான் நீதான்.

அருவரைகள் நீறு படஅசுரர் மாள ... பெருமலைகள் பொடிபட,
அசுரர்கள் இறக்க

அமர்பொருத வீரப் பெருமாள்காண் ... போர் புரிந்த வீரப்
பெருமான் நீதான்.

அரவுபிறை வாரி விரவுசடை வேணி ... பாம்பு நிலவு, கங்கை
நீர் இவை கலந்த சடையுடைய

அமலர்குரு நாதப் பெருமாள்காண் ... பரிசுத்தமான சிவனுக்கு
குருநாதப்பெருமான் நீதான்.

இருவினையிலாத ... நல்வினை தீவினை என்பதே இல்லாதவர்களும்

தருவினைவி டாத இமையவர் ... கற்பகத் தருவை விட்டு
நீங்காதவர்களுமான தேவர்களின்

குலேசப் பெருமாள்காண் ... குலத்துக்கு அரசன் தேவேந்திரனுக்கும்
பெருமான் நீதான்.

இலகுசிலை வேடர் கொடியின் ... விளங்கும் வில் ஏந்திய வேடர்குலக்
கொடி வள்ளியின்

அதிபார இருதனவிநோதப் பெருமாளே. ... அதிக பாரமான இரு
மார்பிலும் களிக்கும் பெருமாளே.


* அருவி - கதிர்காமத்துக்கு அருகில் மாணிக்க நதியில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.1039  pg 1.1040 
 WIKI_urai Song number: 418 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Singapore B. Subhashini
'சிங்கப்பூர்' செல்வி சுபாஷினி

Singapore B. Subhashini
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Thiru P. Sambandam Gurukkal
திரு சம்பந்தம் குருக்கள்

Thiru P. Sambandam Gurukkal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 636 - thirumagaL ulAvum (kadhirgAmam)

thirumagaL ulAvum irubuya murAri
     thirumaruga nAmap ...... perumALkAN

jegathalamum vAnu migudhipeRu pAdal
     theritharu kumArap ...... perumALkAN

maruvumadi yArgaL manadhil viLaiyAdu
     marakatha mayUrap ...... perumALkAN

maNitharaLam veesi aNiyaruvi sUzha
     maruvu kadhir kAmap ...... perumALkAN

aruvaraigaL neeRu pada asurar mALa
     amarporudha veerap ...... perumALkAN

aravupiRai vAri viravusadai vENi
     amalarguru nAthap ...... perumALkAN

iruvinaiy ilAdha tharuvinai vidAdha
     imaiyavar kulEsap ...... perumALkAN

ilagusilai vEdar kodiyinadhi bAra
     iruthana vinOdhap ...... perumALE.

......... Meaning .........

thirumagaL ulAvum irubuya murAri: Lakshmi embraces both shoulders of Vishnu

thirumaruga nAmap perumALkAN: whose handsome nephew is none but You, Great One!

jegathalamum vAnu migudhipeRu pAdal: The Tamil songs (ThEvAram) most famous in both worlds

theritharu kumArap perumALkAN: were composed by You (as ThirugnAna Sambandhar), Great One!

maruvumadi yArgaL manadhil viLaiyAdu: You play in the hearts of Your devotees worshipping You

marakatha mayUrap perumALkAN: You mount the emerald-green peacock, it's Yours, Great One!

maNitharaLam veesi aNiyaruvi sUzha: Offering pearls and gems are pretty waterfalls*, encircling

maruvu kadhir kAmap perumALkAN: lovely KadhirgAmam, and You are its Lord, Great One!

aruvaraigaL neeRu pada asurar mALa: To demolish huge mountains and to destroy the demons (asuras)

amarporudha veerap perumALkAN: You waged a war, Oh valorous and Great One!

aravupiRai vAri viravusadai vENi: The snake, the crescent moon and the river (Ganga) adorn the tresses

amalarguru nAthap perumALkAN: of the pure one, SivA; You are His Master, Great One!

iruvinaiy ilAdha tharuvinai vidAdha imaiyavar: For the DEvAs, who do not have to suffer the karmas (good and bad deeds) and who would never leave their land (heaven) with its KaRpaga Tree, and for

kulEsap perumALkAN: their Lord, IndrA, You are the Greatest Lord!

ilagusilai vEdar kodiyin: With the damsel, VaLLi, belonging to the tribe of hunters bearing the bow,

adhi bAra iruthana vinOdhap perumALE.: You love to play romantically on her bosom, Oh Great One!


* waterfalls - can be found in the MAnikka River near KadhirgAmam, Southeast Sri LankA.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 636 thirumagaL ulAvum - kadhirgAmam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]