பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1040

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கதிர்காமம் திருப்புகழ் உரை 567 கதிர்காமம் 4.18 இலக்குமிதேவி விளையாடும் இரண்டு திருப்புயங்களை உட்ைய முராரி (திருமாலின்) அழகிய மருகன் என்னும் திருநாமத்தை உடைய பெருமான் நீ மண்ணுலகிலும் விண்ணுலகிலும் மிக்க பொலிவு பெறு பாடல்கள்ை (அல்லது மண்ணுலகோரும் விண்ணுலகோரும் மிகவும் போற்றிப் கழும் பாடல்களை) (தேவாரப் பாடல்களை) தேருே குமாரப் பெருமான் நீ. (உனது திருவடியைச்) சார்ந்த அடியார்களின் மனதில் விளையாடும் பச்சைமயில் (ஏ றும்) பெருமான் நீ மணியையும் முத்தையும் வீசி அழகிய அருவி சூழ்ந்து விளங்கும் கதிர்காமத் தலத்துப் பெருமான் நீ. பெரிய மலைகள் (கிரெளஞ்சம், ஏழுகிரி) இவை களெல்லாம் பொடிபட அசுரர்கள் இறக்கப், போர் புரிந்த வீரப் பெருமான் நீ பாம்பு, நிலவு, கங்கை நீர் இவை கலந்துள்ள பெருஞ் சடையை உடைய மலம் குற்றம்) இல்லாதவராம் சிவனுடைய குருநாதப் பெருமான் நீ.

  1. இருவினை (நல்வினை தீவினை) என்பது இல்லாதவர் களும் கற்பக விருட்சங்களை விட்டு நீங்காதவர்களுமான தேவர் குலத்துராசன் தேவேந்திரனுக்கும் பெருமான் நீ. o விளங்கும் வில் ஏந்திய வேடர்மகள் (வள்ளியின்) அதிக பாரமுள்ள இரண்டு கொங்கைகளிலும் களிகூரும் பெருமாளே.

(முன் பக்கத் தொடர்ச்சி) tசடைவேணி 'அடவிகாடே என்பது போல ஒரு பொருள் இரட்டைச் சொல். மிகுதி குறிக்கும்.

  1. இருவினை யிலாத பொருளினை விடாத இருவினையிலாத திருவினை விடாத' - என்றும் பாடங்கள்.