பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1039

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5ᏮᏮ முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கதிர்காமம் (இஃது ஈழ நாட்டில் (இலங்கைத்திவில்) தென்கிழக்குப் பாகத்தில் உள்ளது. மாணிக்க கங்கை என்னும் நதிக்கன்ரயில் உள்ளது. இலங்கை அரசு மாத்தரை புகைவண்டி நிலையத்தி லிருந்து வடகிழக்கு சுமார் 80 மைல். தனுக்கோடி வரை புகைவண்டி, தனுக்கோடியிலிருந்து தலைமன்னார் வரை கப்பல்; தலைமன்னாரிலிருந்து கொழும்பு காலி - வழியாக மாத்தரைவரை (இலங்கைப்) புகைவண்டி மாத்தரையிலிருந் திசமார (72 மைல்) பேருந்து வண்டி, சமாரவிலிருந்து கதிர் காமம் 12 மைல் - காட்டுப்பாதை - மாட்டு வண்டி போகும்.) 418. துதி தனதனன தான தனதனன தான தனதனன தானத் தனதான திருமக ளுலாவு மிருபுய முராரி திருமருக நாம்ப் பெருமாள்கானன். செகதலமும் வானு மிகுதிபெறு பாடல் தெரிதரு குமாரப் பெருமாள்கானன்; மருவுமடி யார்கள் மனதில்விளை யாடு மரகதம யூரப் பெருமாள்காண். மணிதரளம் விசி யணியருவி சூழ மருவுகதிர் காமப் பெருமாள்கானன்; அருவரைகள் நீறு படஅசுரர் மாள அமர்பொருத வீரப் பெருமாள்காண். அரவுபிறை வாரி விரவுtசடை வேணி அமலர்குரு நாதப் பெருமாள்கானன்; #இருவினையி லாத தருவினைவி டாத இமையவர்கு லேசப் பெருமாள்கானன். இலகுசிலை வேடர் கொடியினதி பார இருதனவி நோதப் பெருமாளே. (1) “அருவி - கதிர்காமத்துக்கு அருகில் உள்ள மாணிக்க நதியைக் குறிக்கும். (அடுத்த பக்கம் பார்க்க)