திருப்புகழ் 617 பாட்டில் உருகிலை  (தீர்த்தமலை)
Thiruppugazh 617 pAttilurugilai  (theerththamalai)
Thiruppugazh - 617 pAttilurugilai - theerththamalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்த தனதன தாத்த தனதன
     தாத்த தனதன தாத்த தனதன
          தாத்த தனதன தாத்த தனதன ...... தனதான

......... பாடல் .........

பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
     கூற்று வருவழி பார்த்து முருகிலை
          பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம்

பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
     நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
          பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் ...... வழிபோக

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
     யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
          பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ...... னிதுகேளாய்

வாக்கு முனதுள நோக்கு மருளுவ
     னேத்த புகழடி யார்க்கு மெளியனை
          வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ

ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
     பூட்டி திரிபுர மூட்டி மறலியி
          னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய்

ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
     யாட்டின் முகமதை நாட்டி மறைமக
          ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா

சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
     ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
          சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா

தீர்த்த எனதக மேட்டை யுடனினை
     ஏத்த அருளுட னோக்கி அருளுதி
          தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாட்டி லுருகிலை ... மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து
உருகுதல் இல்லை,

கேட்டு முருகிலை ... பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும்
உருகுதல் இல்லை,

கூற்று வருவழி பார்த்து முருகிலை ... யமன் வரும் வழியைக்
கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை,

பாட்டை யநுதினம் ஏற்றும் அறிகிலை ... கஷ்டங்களை தினமும்
அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை,

தினமானம் பாப்பணியன் அருள் வீட்டை விழைகிலை ...
நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ
இன்பத்தை விரும்புவதும் இல்லை,

நாக்கின் நுனிகொடு ஏத்த அறிகிலை ... நுனி நாக்காலாவது
இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை,

பாழ்த்த பிறவியில் ஏற்ற மனது ... பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே
மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே,

நல் வழிபோக மாட்டம் எனுகிறை ... நீ நல்ல வழியிலே
போகமாட்டேன் என்று சொல்கிறாய்.

கூட்டை விடுகிலை ... உடல் சிறையாகிய இந்தக் கூட்டை
விடுகின்றதாக நீ இல்லை,

ஏட்டின் விதிவழி யோட்டம் அறிகிலை ... ஏட்டில் உனக்கென
எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது
என்று நீ அறிகின்றிலை,

பார்த்தும் இனியொரு வார்த்தை அறைகுவன் இதுகேளாய் ...
உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி
உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் - இதை நீ கேட்பாயாக.

வாக்கும் உனதுள நோக்கும் அருளுவன் ஏத்த புகழ் ...
அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும்
உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான்.

அடியார்க்கும் எளியனை வாழ்த்த ... அடியார்களுக்கு அவன்
வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால்

இருவினை நீக்கு முருகனை மருவாயோ ... நல்வினை தீவினை
இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக.

ஆட்டி வடவரை வாட்டி ... உலகையே ஆட்டி வைப்பவரான
சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து,

அரவொடு பூட்டி திரிபுர மூட்டி ... வாசுகி என்ற பாம்பை நாணாகக்
கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி,

மறலியின் ஆட்டம்அற சரண் நீட்டி ... யமனுடைய ஆணவம்
அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி,

மதனுடல் திருநீறாய் ஆக்கி ... மன்மதனுடைய உடலைச்
சாம்பலாகும்படி எரித்து

மகமதை வீட்டி யொருவனை ஆட்டின் முகமதை நாட்டி ...
தக்ஷனின்* யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின்
தலையை அவனது உடலின் மீது பொருத்தி,

மறைமகளார்க்கும் வடுவுற வாட்டும் ... வேதவல்லி சரஸ்வதி
தேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும்,

உமையவன் அருள்பாலா ... உமாதேவியின் கணவருமான
சிவபிரான் அருளிய பாலனே,

சீட்டை யெழுதி வையாற்றி லெதிருற ஓட்டி ... திருப்பாசுரம்
எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக
ஓட்டியும்,

அழல்பசை காட்டி சமணரை ... நெருப்பிலே இட்ட ஏடு பச்சை
நிறத்துடன் விளங்கும்படி காட்டியும்,

சீற்ற மொடுகழு வேற்ற ... (வாது செய்து தோற்ற) சமணர்களைக்
கோபித்துக் கழுவேற வைத்தும்,

அருளிய குருநாதா ... அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த)
குருநாதனே,

தீர்த்த எனதகம் ஏட்டையுடன் நினை ... பரிசுத்தனே, என் மனம்
விருப்பத்துடன் உன்னை

ஏத்த அருளுட னோக்கி அருளுதி ... துதிக்கும்படி நீ
திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும்.

தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் பெருமாளே. ... தீர்த்தமலை**
நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள்
தேவயானையின் பெருமாளே.


* தக்ஷன் சிவபிரானின் மாமனார். சிவனையும் தன் மகள் தாக்ஷாயணியையும்
மிகவும் அவமதித்து தக்ஷன் செய்த யாகத்தை சிவபிரான் வீரபத்திரர் உருவத்தில்
வந்து அழித்து, தக்ஷனைக் கொன்று, ஆட்டுத்தலையை அவனது உடலில்
பொருத்தினார். யாகத்துக்கு வந்த சரஸ்வதியின் முகத்தில் கோபத்துடன்
காயம் ஏற்படுத்தினார் - கந்த புராணம்.


** தீர்த்தமலை சேலம் மாவட்டத்தில் மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து
வடகிழக்கில் 17 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.993  pg 1.994  pg 1.995  pg 1.996 
 WIKI_urai Song number: 399 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Mrs. Malathi Velayudhan, Chennai
திருமதி வே. மாலதி, சென்னை

Mrs. Malathi Velayudhan, Chennai
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 617 - pAttil urugilai (theerththamalai)

pAttil urugilai kEttum urugilai
     kUtru varuvazhi pArththum urugilai
          pAttai anudhinam Etrum aRigilai ...... dhinamAnam

pAppa NiyanaruL veettai vizhaigilai
     nAkki nunikodu Eththa aRigilai
          pAzhththa piRaviyil Etra manadhu nal ...... vazhipOga

mAtta menugiRai kUttai vidugilai
     Ettin vidhivazhi Ottam aRigilai
          pArththum iniyoru vArththai aRaiguvan ...... idhukELAy

vAkkum unadhuLa nOkkum aruLuvan
     Eththa pugazh adiyArkkum eLiyanai
          vAzhththa iruvinai neekku muruganai ...... maruvAyO

Atti vadavarai vAtti aravodu
     pUtti thiripura mUtti maraliyin
          Atta maRa saraneetti madhanudal ...... thiruneeRAy

Akki magamadhai veetti oruvanai
     Attin mugamadhai nAtti maRaimagaL
          Arkkum vaduvuRa vAttum umaiyavan ...... aruLbAlA

seettai yezhudhi vaiyAtril edhiruRa
     Otti azhalpasai kAtti samaNarai
          seetram odu kazhuvEtra aruLiya ...... gurunAthA

theerththa enadhagam Ettai udan ninai
     Eththa aruLudan nOkki aruLudhi
          theerththa malai nagar kAththa sasimagaL ...... perumALE.

......... Meaning .........

pAttil urugilai: Oh my mind, You do not melt down on realising the meanings of the songs.

kEttum urugilai: Even if the meaning is explained, You fail to melt.

kUtru varuvazhi pArththum urugilai: Even on seeing the path through which Yaman (God of Death) is coming, You do not thaw in devotion for the Lord.

pAttai anudhinam Etrum aRgilai: Despite facing all the miseries everyday, You do not realise the truth.

dhinamAnam pAppa NiyanaruL veettai vizhaigilai: Day in and day out, you never seek the blissful liberation granted by Lord SivA who is wearing the snakes on His tresses.

nAkki nunikodu Eththa aRigilai: You do not know to utter words of praise to the Lord even from the tip of your tongue.

pAzhththa piRaviyil Etra manadhu: Having taken many wretched births in this world, oh my mind,

nal vazhipOga mAtta menugiRai: you are not willing to seek the righteous way

kUttai vidugilai: nor are you prepared to relinquish the shell of your body.

Ettin vidhivazhi Ottam aRigilai: You do not also know the path through which destiny, inscribed in the leaf of your fate, is driving you.

pArththum iniyoru vArththai aRaiguvan idhukELAy: I cannot be a mere spectator to your plight. I shall give you a piece of advice, please listen to me.

vAkkum unadhuLa nOkkum aruLuvan Eththa pugazh: He is the one who will grant you graciously the appropriate words to praise His glory and the ability to see His vision.

adiyArkkum eLiyanai: He is easily accessible to His devotees.

vAzhththa iruvinai neekku muruganai maruvAyO: He removes both the good and bad deeds of those who worship Him. He is Lord Murugan, and you must meditate on Him.

Atti vadavarai vAtti aravodu pUtti: He makes the entire universe dance. He bent Meru, the mountain in the north, like a bow and tied the serpent VAsuki as the bow's string.

thiripura mUtti: He set fire to Thiripuram.

maraliyin Atta maRa saraneetti: He subdued the arrogance of Yaman (God of Death) by kicking him with His extended foot.

madhanudal thiruneeRAy Akki: He burnt down the body of Manmathan (God of Love) into ashes.

magamadhai veetti: He devastated the sacrificial rite of Dhakshan*.

oruvanai Attin mugamadhai nAtti: He attached the head of a goat on the body of Dhakshan.

maRaimagaL Arkkum vaduvuRa vAttum: He punished Saraswathi, the Goddess of Scriptures, by inflicting injuries on Her face.

umaiyavan aruLbAlA: He is the consort of UmAdEvi, and You are the son of that Lord SivA!

seettai yezhudhi vaiyAtril edhiruRa Otti: He wrote the sacred ManthrA on a palm-leaf and set it out against the current in River Vaihai;

azhalpasai kAtti: He held against fire the palm-leaf which remained fresh and green without burning;

samaNarai seetram odu kazhuvEtra: with rage, He sent the ChamaNas (who lost in the debate) to the gallows;

aruLiya gurunAthA: and He (ThirugnAna SambandhAr) was none other than You, Oh Great Master!

theerththa enadhagam Ettai udan ninai Eththa: Oh Immaculate One! In order that my mind eagerly pays obeisance to You,

aruLudan nOkki aruLudhi: kindly bless me with compassion!

theerththa malai nagar kAththa sasimagaL perumALE.: You are the protector of this place known as Theerththa Malai**! You are the Lord of DEvayAnai, the daughter of IndrANi, Oh Great One!


* Dhakshan's daughter DhAkshAyani was married to Lord SivA. Arrogant Dhakshan heaped abuses on both SivA and his daughter. In the penance performed by Dhakshan, SivA came as Veerabhadran and devastated the penance, killing Dhakshan. On his headless body, SivA attached a goat's head. In His rage, SivA inflicted injuries on the face of Goddess Saraswathi who came to Dhakshan's penance - Kandha PurANam.


**Theerththa Malai is in SAlem District, 17 miles northeast of Morappur Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 617 pAttil urugilai - theerththamalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]