திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 616 ஐங்கரனை (கொங்கணகிரி) Thiruppugazh 616 aingkaranai (kongkaNagiri) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன தந்ததன தத்ததன ...... தனதான ......... பாடல் ......... ஐங்கரனை யொத்தமன மைம்புலம கற்றிவள ரந்திபக லற்றநினை ...... வருள்வாயே அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்தியுனை அன்பொடுது திக்கமன ...... மருள்வாயே தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற சந்திரவெ ளிக்குவழி ...... யருள்வாயே தண்டிகைக னப்பவுசு எண்டிசைம திக்கவளர் சம்ப்ரமவி தத்துடனெ ...... யருள்வாயே மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமன முன்றனைநி னைத்தமைய ...... அருள்வாயே மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி வந்தணைய புத்தியினை ...... யருள்வாயே கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையி லப்பரருள் கொண்டுஉட லுற்றபொரு ...... ளருள்வாயே குஞ்சரமு கற்கிளைய கந்தனென வெற்றிபெறு கொங்கணகி ரிக்குள்வளர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஐங்கரனை ஒத்த மனம் ... ஐந்து கரங்களை உடைய விநாயகரைப் போன்ற மனமும் (மனோவேகத்துக்கு விநாயகர் அகிலத்தையும் எளிதாக வலம் வந்த வேகத்தைத் தான் ஒப்பிட முடியும்) ஐம்புலம் அகற்றி ... ஐந்து புலன்களாகிய சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவற்றை விலக்கி, அடக்கி வளர் அந்தி பகல் அற்ற நினைவு ... இடைவிடாமல் வளரும் இரவு, பகல், இவை இல்லாமல் போகும் நினைவினை அருள்வாயே ... அருள் புரிவாயாக. அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் ... இந்தப் பூமியில் பெருகி வளரும் செந்தமிழால் வழுத்தியுனை அன்பொடு துதிக்க ... போற்றி, உன்னை அன்புடனே துதிக்க மனம் அருள்வாயே ... மன நிலையை அருள் புரிவாயாக. தங்கிய தவத் துணர்வு தந்து ... நிலைபெற்ற தவநிலை உணர்ச்சியைக் கொடுத்து அடிமை முத்தி பெற ... உந்தன் அடிமையாகிய நான் முக்திநிலை பெறவேண்டி சந்திர வெளிக்கு வழி அருள்வாயே ... சந்திர வெளியைக் காணும்படியான யோகநிலை மார்க்கத்தைக் காட்டி அருள் புரிவாயாக. தண்டிகை ககனப்பவுசு ... பல்லக்கு, பெருமை, கெளரவம் இவைகளை எண்டிசை மதிக்க ... எட்டு திக்கிலும் உள்ளோரெல்லாம் மதிக்கும்படியாக வளர் சம்ப்ரம விதத்துடனே அருள்வாயே ... ஓங்கும் சிறப்பு வகையில் அருள்வாயாக மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்றமனம் ... மாதர்கள் தரும் இன்பமே மிக்க இனிமையான சுகம் என்றிருந்த என் மனம் உன்றனை நினைத் தமைய அருள்வாயே ... உன்னையே நினைத்த நிலையாய் அமைதிபெற அருள்வாயாக மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி ... நாட்டுக் காவலர்கள் இரவும் பகலும் மக்களை சுபமாக காக்கும் முறைகளை அறியவேண்டி வந்தணைய புத்தியினை அருள்வாயே ... என்னை வந்தடைந்து கேட்க, அவர்களுக்கு அருளும் புத்தியினை நீ எனக்கு அருள்வாயாக. கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் ... கொங்கு நாட்டில் உயிர் மீளப்பெற்று வளர்ந்த தென்கரை நாட்டில் (திருப்புக்கொளியூரில்*) அப்பரருள் கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே ... (அவிநாசி என்னும்) சிவபெருமான் அருள்பெற்று (* முதலை உண்ட பாலனது உடலில் மீண்டும் உயிர் பொருந்திய) ரகசியப் பொருளை எனக்கு அருள் புரிவாயாக. குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றி பெறு ... யானைமுகப் பெருமானுக்கு இளையவனாம் கந்தன் என்ற வெற்றிப் புகழ் பெற்ற கொங்கண கிரிக்குள் வளர் பெருமாளே. ... கொங்கணகிரி என்னும் மலையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* கொங்கணகிரி கோவை மாவட்டம் சோமனூருக்கு அருகே உள்ளது. |
திருப்புக்கொளியூர் ஏரியில் குளிக்கச் சென்ற பாலகனை ஒரு முதலை உண்டது. பிறகு ஓராண்டு கழித்து அங்கு சென்ற சுந்தரமூர்த்தி நாயனார், வற்றிய ஏரியின் கரையில் அவிநாசியின் மேல் பதிகம் பாட, ஏரி நீர் நிரம்பி, முதலை வந்து கரையில் பாலகனை ஓராண்டு வளர்ச்சியுடன் உயிரோடு உமிழ்ந்தது. இந்த ரகசியப் பொருளை எனக்கும் அருள்க என்று அருணகிரியார் வேண்டுகிறார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.989 pg 1.990 pg 1.991 pg 1.992 pg 1.993 pg 1.994 WIKI_urai Song number: 398 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) பாடல் ரா - 1 song R1 பாடல் ரா - 2 song R2 | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
திருமதி காந்திமதி சந்தானம் Mrs Kanthimathy Santhanam பாடகர் பக்கத்திற்கு to singer's page |
திருமதி வே. மாலதி, சென்னை Mrs. Malathi Velayudhan, Chennai பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 616 - aingkaranai (kongkanagiri) ainkaranai oththa manam aimpulam agatri vaLar andhi pagal atra ninaiv ...... aruLvAyE ambuvi thanakkuL vaLar senthamizh vazhuththi yunai anbodu thudhikka manam ...... aruLvAyE thangiya thavath thuNarvu thandhadimai muththi peRa chandhira veLikku vazhi ...... aruLvAyE thaNdigai ganappavusu eNdisai madhikka vaLar sambrama vidhath thudanE ...... aruLvAyE mangaiyar sugaththai vegu ingidhamenutra manam undhanai ninaith thamaiya ...... aruLvAyE maNdali karap pagalum vandha suba rakshai puri vandhaNaiya budhdhiyinai ...... aruLvAyE kongiluyir petru vaLar then karaiyil appararuL koNdu udalutra poruL ...... aruLvAyE kunjara mugaRkiLaiya kandhanena vetri peRu kongaNa girikkuL vaLar ...... perumALE. ......... Meaning ......... ainkaranai oththa manam: A mind that is as fast as GanEshA, God with five hands (GanEshA went around the Universe in the fastest way), aimpulam agatri: mastery over the five perceptory senses, vaLar andhi pagal atra ninaivu: and a thought process beyond the endless cycle of day and night aruLvAyE: bless me with these! ambuvi thanakkuL vaLar senthamizh: In beautiful Tamil, which greatly flourishes in this world, vazhuththi yunai anbodu thudhikka manam aruLvAyE: (I should sing) Your praise with love. thangiya thavath thuNarvu thand(hu): You should bless me with the requisite meditating mind adimai muththi peRa: so that this humble slave of Yours may attain salvation chandhira veLikku vazhi aruLvAyE: and transcend the cosmos of the moon (through yOgA). thaNdigai ganappavusu: (I request You to give me) a palanquin, dignity and respect eNdisai madhikka vaLar sambrama vidhath thudanE aruLvAyE: from people in all eight directions, with increasing awe and admiration. mangaiyar sugaththai vegu ingidhamenutra manam: My mind, which has immersed itself in the sensual gratifications offered by women, unRanai ninaith thamaiya aruLvAyE: should be made to concentrate only on You and to remain there in peace. maNdali karap pagalum vandha: Day and night, state leaders come to me seeking suba rakshai puri vandhaNaiya: ways and means of protecting the people and ensuring their welfare; budhdhiyinai aruLvAyE: You have to give me the necessary wisdom to guide them. kongiluyir petru vaLar then karaiyil: In Kongunadu, a miracle happened when a dead boy regained his life* (after he was devoured by a crocodile) appararuL koNdu udalutra poruL aruLvAyE: through the compassion of SivA (AvinAsi), when the body also grew; teach me the secret of this miracle* kunjara mugaRkiLaiya kandhanena vetri peRu: You, the younger brother of the elephant-headed GanEshA, famous as the victorious Kanda kongaNa girikkuL vaLar perumALE.: You prosper in Kongkanagiri, Oh Great One! |
* Kongkanagiri is in Coimbatore district, four miles from Somanur. |
Once, a little boy went to take a dip in the nearby lake at ThiruppukkoLiyur and was eaten alive by a crocodile. After a year, SundharamUrthy NAyanAr, one of the Four Great Saivites, came to the barren lake and heard about the death of the boy. He sang AvinAsi Pathikam whereupon the lake was filled with water. The crocodile came to the bank of the lake and spat the boy alive, with one year's growth in the body too! AruNagirinAthar asks MurugA to teach him the secret of this miracle. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |