பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/996

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . தீர்த்த மலை திருப்புகழ் உரை 523 உலகையே ஆட்டி வைப்பவராகிய கூத்தப்பிரான் (சிவன்) வடக்கில் உள்ள மேருமலையை வருத்திச் சிலையாக வளைத்து, அதில் வாசுகி என்னும் பாம்பை (நாணாகக்) கட்டி திரிபுரத்தைத் தீயில் மூட்டி (வேவச் செய்து), யமனுடைய கருத்து அழியும்படி காலை நீட்டி (அவனை உதைத்துத் தள்ளி), மன்மதனுடைய உடலை சாம்பலாகும்படி ஆக்கித் (தக்கனுடைய) யாகத்தைக் குலைத்து, (அந்த) யாகத்தை நடத்தின தக்கன் என்பவனுக்கு ஆட்டின் முகத்தைப் பொருந்த வைத்து, மறை மகளாம் சரசுவதிக்கு கேடு (காயம்) உண்டாகும்படி வாட்டின உமை கணவன் (சிவன்) அருளிய பாலனே! "வாழ்க அந்தணர்" என்னும் திருப்பாசுரம் எழுதின ஏட்டை" வைகையாற்று வெள்ளத்தில் எதிர் ஏறு ஒட்டியும், நெருப்பில் இட்ட ஏடு பச்சை நிறத்துடன் விளங்கும்படி காட்டியும், சமணரைக் கோபித்துக் கழுவேற வைத்தருளின குருநாதனே! பரிசுத்தனே! என் மனம் விருப்புடன் உன்னை ஏத்தும்ப (நீ) திருவருளைப் பாலித்து என்னைக் கண்பார்த்தருளுதி, தீர்த்த மலை நகரில் வீற்றிருக்கும் பெருமாளே! இந்திராணி. யின் மகள் தேவசேனைக்குப் பெருமாளே! (நோக்கி அருளுதி) (முன் பக்கத் தொடர்ச்சி) கூட்டியவா பாடி யுந்தீபற" - திருவாசகம் - திருவுந்தியார். $ மறைமகள், சரசுவதி - "வேத முதல்வி" (பிங்கலம்) - எழுதா மறையும் ... அன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்' (சகலகலாவல்லிமாலை - 6) மறைமகள் வடுவுற்றது: வாக்குறு தேவி தன்னை மற்றவர் தம்மை வாளால் மூக்கொடு குயமும் கொய்தான்" - (கந்த புரா - யாக சங்.22) " நாமகள் நாசி சிரம் பிரமன் பட" - திருவுந்தியார் 13. "திருஞானசம்பந்தர் சமணரொடு வாது செய்தது. பாட்டு 181 பார்க்க tt ஏட்டை - விருப்பம்