திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 614 எங்கேனும் ஒருவர் (தென்சேரிகிரி) Thiruppugazh 614 engkEnumoruvar (thensErigiri) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தான தனதனன தந்தான தனதனன தந்தான தனதனன ...... தனதான ......... பாடல் ......... எங்கேனு மொருவர்வர அங்கேக ணினிதுகொடு இங்கேவ ருனதுமயல் ...... தரியாரென் றிந்தாவெ னினியஇதழ் தந்தேனை யுறமருவ என்றாசை குழையவிழி ...... யிணையாடித் தங்காம லவருடைய வுண்டான பொருளுயிர்கள் சந்தேக மறவெபறி ...... கொளுமானார் சங்கீத கலவிநல மென்றோது முததிவிட தண்பாரு முனதருளை ...... யருள்வாயே சங்கோடு திகிரியது கொண்டேயு நிரைபிறகு சந்தாரும் வெதிருகுழ ...... லதுவூதித் தன்காதல் தனையுகள என்றேழு மடவியர்கள் தங்கூறை கொடுமரமி ...... லதுவேறுஞ் சிங்கார அரிமருக பங்கேரு கனுமருள சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச் செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு தென்சேரி கிரியில்வரு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... எங்கேனும் ஒருவர் வர அங்கே கண் இனிது கொடு ... எங்கேயாவது ஒருவர் வரக் கண்டால் அங்கே கண் கொண்டு இனிமையாகப் பார்த்து, இங்கு ஏவர் உனது மயல் தரியார் என்று ... இங்கு யார் தான் உன் மீது மோகம் கொள்ள மாட்டார்கள் என்று கூறி, இந்தா என் இனிய இதழ் தந்தேன் எனை உற மருவ என்று ஆசை குழைய ... இதோ என்னுடைய இனிமையான வாயிதழ் கொடுக்கின்றேன், என்னைப் பொருந்தித் தழுவுவாயாக என்று ஆசை மொழிகளை மனம் குழையக் கூறி, விழி இணை ஆடித் தங்காமல் அவருடைய உண்டான பொருள் உயிர்கள் சந்தேகம் அறவெ பறி கொளும் மானார் ... இரண்டு கண்களையும் உருட்டி அசைத்து, சற்றும் தயங்காமல் வந்தவர்களிடம் உள்ளதான பொருளையும், உயிரையும் சந்தேகம் இல்லாமல் அபகரித்துக் கொள்ளும், மான் போன்ற விலை மகளிருடைய சங்கீத கலவி நலம் என்று ஓதும் உததி விட ... சங்கீதமும் சேர்க்கையும் நித்யசுகம் தரும் என்று எண்ணி மூழ்குகின்ற காமக் கடலினின்று நான் கரை ஏறுவதற்கு, தண்பு ஆரும் உனது அருளை அருள்வாயே ... குளிர்ச்சி பொருந்திய உனது திருவருளைத் தந்து அருள்வாயாக. சங்கோடு திகிரி அது கொண்டு ஏயு(ம்) நிரை பிறகு சந்து ஆரும் வெதிர் உரு குழல் அது ஊதி ... சங்கும் சக்கரமும் கைகளின் ஏந்தியவனும், பொருந்திய பசுக் கூட்டங்களின் பின்னே (கண்ணனாகச்) சென்று தொளைகள் நிரம்பிய, மூங்கில் புல்லாங்குழலை ஊதியவனும், தன் காதல் தனை உகள என்று ஏழு மடவியர்கள் தம் கூறை கொடு மரமில் அது ஏறும் சிங்கார அரி மருக ... தம் மேல் கொண்ட ஆசையை கடக்க மனம் எழுச்சியைக் கொண்ட பெண்களின் ஆடையை எடுத்துக் கொண்டு (குருந்த) மரத்தின் மேல் ஏறியவனும், அழகிய உருவம் கொண்டவனுமாகிய திருமாலின் மருகனே, பங்கேருகனும் மருள சென்று ஏயும் அமரருடை சிறை மீள செண்டு ஆடி அசுரர்களை ... தாமரை மலரில் வாழும் பிரமனும் மயங்கி அச்சமுற, சென்று முறையிட்ட தேவர்களுடைய சிறையை நீக்கி, அசுரர்களைச் சிதற அடித்து, ஒன்றாக அடியர் தொழும் தென் சேரி கிரியில் வரும் பெருமாளே. ... யாவரும் ஒன்று கூடி அடியார்கள் அனைவரும் தொழுது வணங்க, தென் சேரி கிரியில்* வீற்றிருக்கும் பெருமாளே. |
* செஞ்சேரிமலை என்று இப்போது வழங்கப்படும் இத்தலம் கோயமுத்தூர் மாவட்டத்தில் பல்லடத்துக்கு தெற்கே 12 மைலில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.985 pg 1.986 pg 1.987 pg 1.988 WIKI_urai Song number: 396 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 614 - engkEnum oruvar (thensErigiri) engEnu moruvarvara angEka Ninithukodu ingEva runathumayal ...... thariyAren RinthAve niniyaithazh thanthEnai yuRamaruva enRAsai kuzhaiyavizhi ...... yiNaiyAdith thangAma lavarudaiya vuNdAna poruLuyirkaL santhEka maRavepaRi ...... koLumAnAr sangeetha kalavinala menROthu muthathivida thaNpAru munatharuLai ...... yaruLvAyE sangOdu thikiriyathu koNdEyu niraipiRaku santhArum vethirukuzha ...... lathuvUthith thankAthal thanaiyukaLa enREzhu madaviyarkaL thamkURai kodumarami ...... lathuvERum singAra arimaruka pangEru kanumaruLa senREyum amararudai ...... siRaimeeLac cheNdAdi asurarkaLai onRAka adiyarthozhu thensEri kiriyilvaru ...... perumALE. ......... Meaning ......... engEnum oruvar vara angE kaN inithu kodu: When a man comes from anywhere, they set their enticing eyes on him; ingu Evar unathu mayal thariyAr enRu: saying that no one could resist the passion for him, inthA en iniya ithazh thanthEn enai uRa maruva enRu Asai kuzhaiya: with a melting heart and craving words, they offer their sweet lips provoking him to hug them tightly; vizhi iNai Adith thangAmal avarudaiya uNdAna poruL uyirkaL santhEkam aRave paRi koLum mAnAr sangeetha kalavi nalam enRu Othum uthathi vida: rolling their eyes playfully, they grab all his belongings and life in an unhesitating way without a shadow of doubt; thinking that their music and the union with these deer-like whores would be blissful for ever, I have been immersed in a sea of passion; to get me out of that sea, thaNpu Arum unathu aruLai aruLvAyE: kindly bestow upon me Your grace that is filled with cool comfort! sangOdu thikiri athu koNdu Eyu(m) nirai piRaku santhu Arum vethir uru kuzhal athu Uthi: He holds in His hands the conch-shell and the disc; walking behind the herds of cows that He (coming as KrishNa) tends, He plays the bamboo flute which is filled with holes; than kAthal thanai ukaLa enRu Ezhu madaviyarkaL tham kURai kodu maramil athu ERum singAra ari maruka: to conquer their love for Him, He stole the robes of young women emotionally involved with Him and climbed to the top of the (kuruntha) tree; He has a handsome body; and You are the nephew of that Lord VishNu! pangErukanum maruLa senRu Eyum amararudai siRai meeLac cheNdu Adi asurarkaLai: Lord BrahmA seated on the lotus was terrified when You set free all those celestials who sought refuge by shattering the demons; onRAka adiyar thozhum then sEri kiriyil varum perumALE.: as all Your devotees gather together in Your worship, You are seated in ThensEri Giri*, Oh Great One! |
* SenchErimalai is the present name of this town in Coimbatore District, located 12 miles south of Palladam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |