திருப்புகழ் 606 கட்ட மன்னும்  (கொல்லிமலை)
Thiruppugazh 606 kattamannum  (kollimalai)
Thiruppugazh - 606 kattamannum - kollimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
     தத்த தன்ன தய்ய ...... தனதான

......... பாடல் .........

கட்ட மன்னு மள்ளல் கொட்டி பண்ணு மைவர்
     கட்கு மன்னு மில்ல ...... மிதுபேணி

கற்ற விஞ்ஞை சொல்லி யுற்ற வெண்மை யுள்ளு
     கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர்

இட்ட மெங்ங னல்ல கொட்டி யங்ங னல்கி
     யிட்டு பொன்னை யில்லை ...... யெனஏகி

எத்து பொய்ம்மை யுள்ள லுற்று மின்மை யுள்ளி
     யெற்று மிங்ங னைவ ...... தியல்போதான்

முட்ட வுண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
     முட்ட நன்மை விள்ள ...... வருவோனே

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
     முத்தி விண்ண வல்லி ...... மணவாளா

பட்ட மன்ன வல்லி மட்ட மன்ன வல்லி
     பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா

பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
     பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் ஐவர்கட்கு மன்னும்
இல்லம் இது பேணி
... கஷ்டங்கள் நிறைந்த சேறு போன்றதும், கொடு
கொட்டி என்னும் ஆடல்போலக் கூத்தாட்டி வைத்து ஐம்புலன்களுக்கும்
இருப்பான வீடு ஆகியதுமான இந்த உடலை விரும்பி,

கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள் உகக்க எண்ணி ...
நான் கற்ற வித்தைகளைச் சொல்லி, சுலபமாக நிறைவேறும் என்று
மனதில் நினைத்து, மகிழலாம் எனக் கருதி

முல்லை நகை மாதர் இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி ... முல்லை
மலர் போன்ற பற்களை உடைய விலைமாதர்களின் விருப்பத்துக்கு
அப்படியே இணங்கி, நல்ல பொருள்களை எல்லாம் கொட்டிக் கொடுத்து,

அங்ஙன் நல்கி இட்டு பொன்னை இல்லை என ஏகி ...
அவர்களிடம் கொடுத்த பின்னர், மேலும் கொடுப்பதற்குப் பொருள்
இல்லை என்று சொல்லி வெளி வந்து,

எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி எற்றும்
இங்ஙன் நைவது இயல்போ தான்
... ஏமாற்றும் பொருட்டு பொய்
வழிகளை யோசிக்கலுற்றும், பொன் இல்லாமையை நினைத்து
இரக்கமுற்றும், இவ்வாறு மனம் வருந்துதல் தக்கதாமோ?

முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள முட்ட
நன்மை விள்ள வருவோனே
... முழு உண்மையைச் சொன்ன ருத்திர
சன்மன்* என்னும் செட்டியாக அவதரித்து, சண்டையிட்ட புலவர்கள்
உறுதிப் பொருளை அறிந்துகொள்ள, முழுவதும் சமாதானம்
விளையும்படியாக வந்தவனே,

முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி முத்தி விண்ண
வல்லி மணவாளா
... முத்து நிற வல்லிக் கொடி போன்றவளும்,
அழகிய சித்ர நிற வல்லியும், முக்தி தரவல்ல விண்ணுலக வல்லியுமான
தேவயானையின் மணவாளனே,

பட்டம் மன்னு அ(வ்) வல்லி மட்ட மன்ன வல்லிவ பட்ட
துன்னு கொல்லி மலை நாடா
... வழியில் அமைக்கப்பட்டிருந்த
மோகினிப் பெண், மது மயக்கம் போல மயக்கம் தரும் மோகினிப் பெண்**
ஆகிய கொல்லிப் பாவை இருக்கும் நெருங்கிய காடு அடர்ந்த கொல்லி
மலை*** நாடனே,

பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை
வல்ல பெருமாளே.
... பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி
இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச்
செலுத்த வல்ல பெருமாளே.


* மதுரையில் 49 சங்கப்புலவர்கள் இறையனார் அகப் பொருளுக்கு உரை
எழுதினர். சிறந்த உரை எது என்பதில் விவாதம் ஏற்பட, மதுரை செட்டி குலத்தில்
ஊமைப்பிள்ளை ருத்திரஜன்மன் என்ற பெயரில் அவதரித்த முருகன் அனைவரது
உரையையும் கேட்டு, நக்கீரன், கபிலன், பரணன் ஆகிய புலவர்களின் உரைகளைக்
கேட்கும்போது மட்டும் வியப்பையும், கண்ணீரையும் காட்ட, இம் மூவரின் உரையே
உண்மைப் பொருள் என்று புலவர்கள் உணர்ந்து கலகம் தீர்த்தனர்.
- திருவிளையாடல் புராணம்.


** இது கொல்லி மலையில் உள்ள ஒரு பெண்வடிவப் பதுமை. மோகினி வடிவம்
உடையது. முனிவர்களைத் துன்புறுத்த வரும் அசுரர்கள் அப்பாவையின்
நகையைக் கண்டு மயங்கி உயிர் விடும்படி தேவ தச்சன் ஆக்கி வைத்தது.


*** கொல்லிமலைக்குச் சதுரகிரி என்றும் பெயர் உண்டு. நாமக்கல் அருகே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.961  pg 1.962  pg 1.963  pg 1.964  pg 1.965  pg 1.966 
 WIKI_urai Song number: 388 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 606 - katta mannum (kollimalai)

katta mannu maLLal kotti paNNu maivar
     katku mannu milla ...... mithupENi

katRa vinjnjai solli yutRa veNmai yuLLu
     kakka eNNi mullai ...... nakaimAthar

itta mengnga nalla kotti yangnga nalki
     yittu ponnai yillai ...... yenaEki

eththu poymmai yuLLa lutRu minmai yuLLi
     yetRu mingnga naiva ...... thiyalpOthAn

mutta vuNmai sollu chetti thiNmai koLLa
     mutta nanmai viLLa ...... varuvOnE

muththu vaNNa valli cithra vaNNa valli
     muththi viNNa valli ...... maNavALA

patta manna valli matta manna valli
     patta thunnu kolli ...... malainAdA

pacchai vanni yalli secchai cenni yuLLa
     pacchai manjnjai valla ...... perumALE.

......... Meaning .........

katta mannum aLLal kotti paNNum aivarkatku mannum illam ithu pENi: It is a sludge full of miseries; it is the house for the five senses which are stage-managed to dance to the rhythm of the "kodokotti" dance; nurturing this body,

katRa vinjnjai solli utRa eNmai uL ukakka eNNi: I narrated all the tricks that I learnt for enjoyment in the easy way with a desire to revel;

mullai nakai mAthar ittam engngan nalla kotti: I yielded to the avarice of the whores who had neat rows of teeth like the jasmine flowers and showered on them many valuable gifts;

angngan nalki ittu ponnai illai ena Eki: having parted with all my belongings, I departed saying that I had no more gold to give them;

eththu poymmai uLLal utRum inmai uLLi etRum ingngan naivathu iyalpO thAn: then I used to think of ways of deceiving them and rue over my inability to afford them; was all this anguish justified at all?

mutta uNmai sollu chetti thiNmai koLLa mutta nanmai viLLa varuvOnE: You came as Rudra Sanman* into the chetti family to reveal the whole truth and to establish peace among the quarelling poets, Oh Lord!

muththu vaNNa valli sithra vaNNa valli muththi viNNa valli maNavALA: You are the consort of DEvayAnai who is like a creeper of the hue of pearl, with picturesome beauty and who belongs to the celestial world with an ability to offer liberation!

pattam mannu a(v) valli matta manna valli patta thunnu kolli malai nAdA: You belong to the dense forest of Kollimalai** where an enchantress*** greets one on the road, who is so beautiful as to inebriate the seer!

pacchai vanni alli secchai cenni uLLa pacchai manjnjai valla perumALE.: You adorn Your head with the green flowers of vanni, alli and vetchai, and You are the Lord capable of mounting and driving the green peacock, Oh Great One!


* Once, in Madhurai, 49 poet-stalwarts of Tamil Sangam wrote interpretation for the work of Lord SivA. To resolve the dispute among them about whose work was the best, Murugan came to Madhurai as a mute and dumb boy Rudrasanman, born in the lineage of Chettis, and listened to all the interpretations. Only when He heard the works of Nakkeerar, Kapilan and BaraNan, He showed so much awe with tears in His eyes that the poets realised which were the best ones and resolved their dispute - ThiruviLaiyAdal PurANam.


** Kollimalai is now known as Chathuragiri, situated near NAmakkal.


*** This refers to a statue of an enchantress erected in Kollimalai. It was erected by the celestial architect, Devathachchan, to ward off the demons who came to disrupt the penance of the sages. A mere look at the statue could inebriate the seer and kill him.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 606 katta mannum - kollimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]