பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/964

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - கொல்லிமலை திருப்புகழ் உரை 491 ஏமாற்றும் பொருட்டு, பொய் வழியை யோசிக்கலுற்றும், (பொன்) இல்லாமையை நினைத்து இரக்கமுற்றும் . இவ்வாறு மனம் நைந்து வருந்துதல் தக்கதாமோ (தகாது என்றபடி); முழு உண்மையைச் சொன்ன செட்டியாக (கலாம்செய்த புலவர்கள்) உறுதிப் பொருளை அறிந்து கொள்ள முழுதும் நன்மையே (பெருக) வந்தவனே! முத்துநிற வல்லி, அழகிய சித்ரநிற வல்லி, முத்திதர வல்ல விண்ணுலக வல்லியாம் தேவசேனையின் மணவாளனே! பட்டம் மன்னு அ வல்லி (வழியில் அமைக்கப்பட்டிருந்த மோகினிப் பென்) மட்டம் மன்னு அ வல்லி (மது மயக்கம் போல) மயக்கம் தரும் மோகினிப் பெண் ஆகிய " கொல்லிப் பாவை" இருக்கும் நெருங்கிய கொல்லிமலை நாடனே! அல்லது மட்ட மன்னவல்லி பட்ட பட்டமன்னவல்லி துன்னு கொல்லி மலைநாடா என அந்வயப்படுத்தி, மதுபோல மயக்கவல்ல பெண்ணாம் கொல்லிப் பாவை பட்ட வள்ளி அழகுக்கு முன் நம் அழகு எந்த மூலை என்று கண்டு கொண்டு கொல்லிப் பாவை தோல்வியுற்ற, பட்ட மன்னவல்லி - அழகு முதலிய உயர்ந்த செல்வங்கள் நிறைந்த வல்லி (வள்ளி நாயகி) நெருங்கி அணையும் மலை நாடனே, கொல்லிமலை நாடனே! (முன்பக்கத் தொடர்ச்சி) திரிபுரத்தைச் செற்றவனும், கொல்லிச் செழும் பாவையும் நகைக்கக் கற்ற தெல்லாம் இந்த நகை கண்டேயோ" (சித்திரமடல்) (நற்றிணை - 185) மன்னு அ வல்லி என்றது . (மன்னுதல் நிலை பெற்றிருத்தல்) இத் கொல்லிப்பாவை - காற்று, மழை, இடி, பூகம்பம் முதலிய இடையூறுகளால் தனது உருக் கெடாமல் என்றும் தன் இயல்பு கெடா திருப்பது. இதனைத் கொல்லித் தெய்வம். கால் பொருது இடிப்பினும், ற கடுகினும், உருமுடன்று எறியினும், ஊறு பல தோன்றினும் பெரு நிலங் கிளரினும் திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவை" என்றதனால் அறிகின்றோம். (நற்றிணை - 201)