திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 600 அத் துகிரின் நல் (திருச்செங்கோடு) Thiruppugazh 600 aththugirinnal (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தத்த தனதனன தத்த தனதனன தத்த தனதனன ...... தனதான ......... பாடல் ......... அத்து கிரினலத ரத்து அலனவள கத்து வளர்செய்புள ...... கிதபூத ரத்தி ருகமலக ரத்தி தயமுருகி யத்தி யிடனுறையு ...... நெடுமாம ரத்து மலர்கனிய லைத்து வருமிடைத லத்து ரகசிகரி ...... பகராதே யத்தி மலவுடல்ந டத்தி யெரிகொள்நிரை யத்தி னிடையடிமை ...... விழலாமோ தத்து கவனவரி ணத்து வுபநிடவி தத்து முநியுதவு ...... மொழியாறுத் தத்தை நறவையமு தத்தை நிகர்குறவர் தத்தை தழுவியப ...... னிருதோளா தத்து ததிதுரக தத்து மிகுதிதிசர் தத்து மலையவுணர் ...... குலநாகந் தத்த மிசைமரக தத்த மனியமயில் தத்த விடுமமரர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அத் துகிரின் நல் அதரத்து அல் அன அளகத்து ... (விலைமாதரின்) அந்தப் பவளம் போன்ற சிவந்த உதட்டிலும், இருள் போன்ற கூந்தலிலும், வளர் செய் புளகித பூதரத்து இரு கமல கரத்து இதயம் உருகி ... மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடிய மார்பகங்களிலும், இரண்டு தாமரை போன்ற கைகளிலும் மனம் உருகி, அத்தி இடன் உறையும் நெடு மாமரத்து மலர் கனி அலைத்து ... கடலிடை இருந்த பெரிய மாமரத்தினுடைய (சூரனுடைய) மலரையும் பழத்தையும் கலக்கி (அதாவது சூரனைக் கொன்று) வரும் இடைத் தலத்து உரக சிகரி பகராதே ... பிறகு வந்து அமர்ந்தருளிய தலமாகிய பாம்பு மலையை (திருச்செங்கோட்டை)* ஓதித் துதியாமல், அத்தி மல உடல் நடத்தி எரி கொள் நிரையத்தின் இடை அடிமை விழலாமோ ... எலும்பும் மலமும் கூடிய உடலைச் சுமந்து, எரிகின்ற நரகத்தில் அடிமையாகிய நான் விழலாமோ? தத்து கவன அரிணத்து உபநிட விதத்து முநி உதவு மொழியால் ... வேகமான நடையை உடைய பெண்மானிடத்தில் வேத ஒழுக்கம் உடைய சிவ முநிவர் தந்த வார்த்தையால் (பிறந்தவளும்), துத்தத்தை நறவை அமுதத்தை நிகர் குறவர் தத்தை ... பாலையும், தேனையும், அமுதத்தையும் ஒத்த இனிய மொழியை உடையவளும், குறவர் பெண்ணாகிய கிளி போன்றவளுமான வள்ளியை தழுவிய ப(ன்)னிரு தோளா ... அணைந்த பன்னிரண்டு தோள்களை உடையவனே, தத்து உததி துரகதத்து மிகு திதிசர் ... அலை வீசும் கடல் போல, குதிரைப் படையை மிக வேகமாகச் செலுத்தும் அசுரர்களும், தத்து மலை அவுணர் குல நாகம் தத்த ... யுத்தகளத்தில் பாய்ந்து போரிடும் அவுணர்களும், குலவரைகள் எட்டும் நடுங்க, மிசை மரகதத் தமனிய மயில் தத்த விடும் அமரர் பெருமாளே. ... அவர்கள் மீது பசும் பொன் மயமான மயிலைப் பாய விட்டவனே, தேவர்களின் பெருமாளே. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.947 pg 1.948 pg 1.949 pg 1.950 WIKI_urai Song number: 382 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 600 - ath thugirin nal (thiruchchengkOdu) aththu kirinalatha raththu alanavaLa kaththu vaLarseypuLa ...... kithapUtha raththi rukamalaka raththi thayamuruki yaththi yidanuRaiyu ...... nedumAma raththu malarkaniya laiththu varumidaitha laththu rakasikari ...... pakarAthE yaththi malavudalna daththi yerikoLnirai yaththi nidaiyadimai ...... vizhalAmO thaththu kavanavari Naththu vupanidavi thaththu muniyuthavu ...... mozhiyARuth thaththai naRavaiyamu thaththai nikarkuRavar thaththai thazhuviyapa ...... niruthOLA thaththu thathithuraka thaththu mikuthithisar thaththu malaiyavuNar ...... kulanAkam thaththa misaimaraka thaththa maniyamayil thaththa vidumamarar ...... perumALE. ......... Meaning ......... ath thukirin nal atharaththu al ana aLakaththu: In those coral-like red lips (of the whores), in their black hair like darkness, vaLar sey puLakitha pUtharaththu iru kamala karaththu ithayam uruki: in their exhilarating breasts and in their lotus-like palms, my mind simply melted; aththi idan uRaiyum nedu mAmaraththu malar kani alaiththu: in the middle of the sea, You shook the huge mango tree (SUran in disguise) along with its flowers and fruits (and killed that demon) varum idaith thalaththu uraka sikari pakarAthE: and after that, You came to rest in this place called Mount Serpent (ThiruchchengkOdu)*; rather than singing the praise of this great mountain, aththi mala udal nadaththi eri koL niraiyaththin idai adimai vizhalAmO: I, the lowly slave, was carrying on with this body filled with bones and faeces and fell into the burning hell; how could I do that? thaththu kavana ariNaththu upanida vithaththu muni uthavu mozhiyAl: She was born to a female deer with a fast stride who was blessed by a Saivite Sage who adopted a VEdic life as stipulated in scriptures; thuththaththai naRavai amuthaththai nikar kuRavar thaththai: her speech was sweet like milk, honey and nectar; she was VaLLi, the parrot-like damsel of the KuRavAs; thazhuviya pa(n)niru thOLA: and You embraced her with Your twelve shoulders, Oh Lord! thaththu uthathi thurakathaththu miku thithisar: Those demons who were capable of driving their armies of horses faster than the wavy seas, thaththu malai avuNar kula nAkam thaththa: along with those demons who aggressively fight in the battlefield and the eight protective mountains, were all shattered misai marakathath thamaniya mayil thaththa vidum amarar perumALE.: when You drove Your greenish-golden peacock jumping into all over them, Oh Lord! You are the Lord of the celestials, Oh Great One! |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |