திருப்புகழ் 601 அத்த வேட்கை  (திருச்செங்கோடு)
Thiruppugazh 601 aththavEtkai  (thiruchchengkodu)
Thiruppugazh - 601 aththavEtkai - thiruchchengkoduSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்த தாத்தத் தத்த தாத்தத்
     தத்த தாத்தத் ...... தனதான

......... பாடல் .........

அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
     தத்தை மார்க்குத் ...... தமராயன்

பற்ற கூட்டத் திற்ப ராக்குற்
     றச்சு தோட்பற் ...... றியவோடும்

சித்த மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
     சிக்கை நீக்கித் ...... திணிதாய

சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
     செச்சை சாத்தப் ...... பெறுவேனோ

கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
     கொற்ற வேத்துக் ...... கரசாய

குக்கு டாத்தச் சர்ப்ப கோத்ரப்
     பொற்ப வேற்கைக் ...... குமரேசா

தத்வ நாற்பத் தெட்டு நாற்பத்
     தெட்டு மேற்றுத் ...... திடமேவும்

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
     சத்ய வாக்யப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அத்த(ம்) வேட்கை பற்றி நோக்கு அத் தத்தைமார்க்கு தமர்
ஆய்
... பொருளின் மேல் மட்டும் ஆசைகொண்டு என் மீது விருப்பம்
வைக்கும் அந்தக் கிளிபோன்ற விலை மகளிருக்கு வேண்டியவனாய்,

அன்பு அற்ற கூட்டத்தில் பராக்கு உற்று அச்சு தோள் பற்ற
இயவோடும் சித்தம்
... அன்பு இல்லாத அவர்களின் கூட்டத்தில்
மட்டும் என் கவனத்தை வைத்து, உருவமைந்த அவர்கள் தோளை
அணைக்க அலை பாயும் மனத்தை

மீட்டுப் பொய்த்த வாழ்க்கை சிக்கை நீக்கி ... அவ்வழியினின்றும்
திருப்பி, பொய்யான வாழ்க்கை என்னும் நிலையில் சிக்கிக்கொண்டதை
நீக்கி,

திணிது ஆய சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச் செச்சை சாத்தப்
பெறுவேனோ
... வன்மை வாய்ந்த அழகிய வாக்கை நான் அடைந்து,
உன் வெட்சி மாலையை அணியப்பெறும் பாக்கியம் எனக்குக் கிட்டுமோ?

கொத்து நூற்றுப் பத்து நாட்ட கொற்ற வேத்துக்கு அரசாய
குக்குட(ம்) அத்த
... நெருக்கமான (100 மடங்கு 10=1000) ஆயிரம்
கண்களை உடலில் உடைய வீர வேந்தனாகிய இந்திரனுக்கு*
அரசனாகிய, கோழி(க்கொடி) ஏந்திய கையனே,

சர்ப்ப கோத்ரப் பொற்ப வேல் கைக் குமரேசா ... பாம்பு மலை
எனப்படும் திருச்செங்கோட்டு** அழகனே, வேலாயுதத்தை ஏந்தும்
திருக்கரத்தனே, குமரேசனே,

தத்வம் நாற்பத்து எட்டு நாற்பத்து எட்டும் ஏற்றுத் திடம்
மேவும் தர்க்க சாத்ரத் தக்க மார்க்க
... தொண்ணூற்றாறு (48+48)
தத்துவங்களையும்*** பொருந்தி, திடமான தர்க்க சாஸ்திரத்தில்
சொல்லப்பட்ட தக்க நீதி வழிகளில் உள்ள

சத்ய வாக்யப் பெருமாளே. ... சத்தியமான சொற்களைப் பேசும்
பெருமாளே.


* கெளதம முநிவரின் சாபத்தால் அவரது மனைவி அகல்யையைக் காமுற்ற
இந்திரனுக்கு உடலில் ஆயிரம் கண்கள் ஏற்பட்டன.


** திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து
6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால்
நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது.


'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே'
- என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார்.


*** 96 தத்துவங்கள் பின்வருமாறு:

36 பரதத்துவங்கள் (அகநிலை):
ஆத்ம தத்துவம் 24, வித்யா தத்துவம் 7, சிவ தத்துவம் 5.

ஐம்பூதங்கள், அவற்றின் தன்மைகளோடு, ஐயைந்து - 25 (புறநிலை):
மண், தீ, நீர், காற்று, வெளி.

ஏனைய தத்துவங்கள் 35 (புறநிலை):
வாயுக்கள் 10, நாடிகள் 10, கன்மங்கள் 5, அகங்காரம் 3, குணம் 3, வாக்குகள் 4.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.949  pg 1.950  pg 1.951  pg 1.952 
 WIKI_urai Song number: 383 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 601 - aththa vEtkai (thiruchchengkOdu)

aththa vEtkaip patRi nOkkath
     thaththai mArkkuth ...... thamarAyan

patRa kUttath thiRpa rAkkut
     Racchu thOtpat ...... RiyavOdum

siththa meettup poyththa vAzhkkai
     cikkai neekkith ...... thiNithAya

cithra vAkkup petRu vAzhththi
     cecchai sAththap ...... peRuvEnO

koththu nUtRup paththu nAttak
     kotRa vEththuk ...... karasAya

kukku dAththa sarppa kOthrap
     poRpa vERkaik ...... kumarEsA

thathva nARpath thettu nARpath
     thettu mEtRuth ...... thidamEvum

tharkka sAthrath thakka mArkka
     sathya vAkyap ...... perumALE.

......... Meaning .........

aththa(m) vEdkai patRi nOkku ath thaththaimArkku thamar Ay: I became a favourite of those pretty parrot-like whores whose interest in me was motivated solely by money;

anpu atRa kUttaththil parAkku utRu acchu thOL patRa iyavOdum siththam: I was paying attention only to that loveless company, with my mind yearning to embrace their shapely shoulders;

meettup poyththa vAzhkkai sikkai neekki: I want to divert my mind, relieving it from that entanglement in a life of falsehood;

thiNithu Aya cithra vAkkup petRu vAzhththi cecchai sAththap peRuvEnO: Achieving the ability to speak artfully and firmly, will I ever be fortunate to wear Your holy garland of vetchi flowers?

koththu nUtRup paththu nAtta kotRa vEththukku arasAya kukkuda(m) aththa: You are the Lord of that mighty King IndrA, who has (100 times 10 = 1000) a thousand eyes on his body*; You hold the staff of Rooster in Your hand!

sarppa kOthrap poRpa vEl kaik kumarEsA: You are the handsome one residing in ThiruchchengkOdu**, known as the Mountain of Serpent; You hold the spear in Your hand, Oh Lord Kumara!

thathvam nARpaththu ettu nARpaththu ettum EtRuth thidam mEvum tharkka sAthrath thakka mArkka sathya vAkyap perumALE.: You have adopted the righteous way governed by the science of logic as enunciated by the (48+48) ninety-six tenets*** and You always speak words of Eternal Truth, Oh Great One!


* Sage GauthamA cursed IndrA with a thousand eyes on his body because of his lust for AhalyA, wife of GautamA.


** ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station.
As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given.


In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes!


*** The 96 thathvAs (tenets) are as follows:

36 ParathathvAs (internal, Superior Tenets): 'AathmA' (soul) thathvAs 24, 'vidhyA' (knowledge) thathvAs 7, 'siva' thathvAs 5.

5 Elements (external, with five aspects each making 25): Earth, Fire, Water, Air, Cosmos.

35 Other thathvAs (external): 'vAyus' (gases) 10, nAdis (kundalinis) 10, karmAs 5, ahangkAram (ego) 3, gunAs (character) 3, vAkku (speech).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 601 aththa vEtkai - thiruchchengkodu

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]