திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 599 தாமா தாம ஆலாபா (திருச்செங்கோடு) Thiruppugazh 599 thAmAthAmaAlAbA (thiruchchengkodu) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானா தானா தானா தானா தானா தானத் ...... தனதான ......... பாடல் ......... தாமா தாமா லாபா லோகா தாரா தாரத் ...... தரணீசா தானா சாரோ பாவா பாவோ நாசா பாசத் ...... தபராத யாமா யாமா தேசா ரூடா யாரா யாபத் ...... தெனதாவி யாமா காவாய் தீயே னீர்வா யாதே யீமத் ...... துகலாமோ காமா காமா தீனா நீணா காவாய் காளக் ...... கிரியாய்கங் காளா லீலா பாலா நீபா காமா மோதக் ...... கனமானின் தேமார் தேமா காமீ பாகீ தேசா தேசத் ...... தவரோதுஞ் சேயே வேளே பூவே கோவே தேவே தேவப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... தாமா தாம ஆலாபா லோக ஆதாரா ... மாலையை உடையவனே, இனிமையாக உரையாடுபவனே, உலகுக்கு ஆதாரமாக உள்ளவனே, தார(ம்) தரணி ஈசா ... நீர், மண் முதலிய ஐந்து பூதங்களுக்கும் ஈசனே, தான ஆசாரோ பாவா பாவோ நாசா ... கொடை அளிக்கும் ஒழுக்கம் உள்ளவர்களால் தியானிக்கப் படுபவனே, பாவ நாசனே, பாசத்து அபராத யாமா யாமா தேசார் ஊடு ... பாசங்களில் பற்று வைத்ததின் அபராதமாக தெற்கில் உள்ள யமபுரியைச் சேர்ந்தவர்களிடையே, ஆராயா ஆபத்து எனது ஆவி ஆமா காவாய் ... ஆராய்ச்சி இல்லாமல் ஆபத்தான நிலையை என்னுடைய உயிர் அடைதல் ஆகுமோ? என்னைக் காத்து அருள்வாய். தீயேன் நீர் வாயாதே ஈமத்து உகலாமோ ... கெட்டவனாகிய நான் நற் குணம் வாய்க்காமல் சுடுகாட்டைத் தீயைத் தாவிச் சேர்தல் நன்றோ? காமா காம ஆதீனா நீள் நாகா வாய் காள கிரியாய் ... அன்பனே, அடியார்கள் விரும்புவதை அளிப்பவனே, நீண்ட நாக கிரி என்னும் திருச்செங்கோட்டில்* வீற்றிருப்பவனே, கங்காளா லீலா பாலா நீபா ... எலும்பு மாலையை விளையாட்டாக அணியும் சிவனின் குழந்தையே, கடப்ப மாலை அணிந்தவனே, காம ஆமோதக் கன மானின் ... மிகுந்த விருப்பமுள்ள, பெருமை பொருந்திய மான் போன்ற வள்ளியின் தேம் ஆர் தே மா காமீ பாகீ ... தேன் கலந்த இனிய தினை மாவில் விருப்பம் உள்ளவனே, தகுதி வாய்ந்தவனே, தேசா தேசத்தவர் ஓதும் சேயே ... ஒளி உள்ளவனே, உலகத்தோர் போற்றும் குழந்தையே, வேளே பூவே கோவே தேவே தேவப் பெருமாளே. ... தலைவனே, பொலிவு உடையவனே, அரசனே, தேவனே, தேவர்களுடைய பெருமாளே. |
இது வேண்டுகோள் எதுவும் அற்ற ஒரு துதிப் பாடல். வட மொழிச் சொற்களும், சந்திகளும் நிறைந்தது. |
* திருச்செங்கோடு சேலம் மாவட்டம் சங்கரிதுர்க்கம் ரயில் நிலையத்திலிருந்து 6 மைல் தொலைவில் மலைமீது உள்ளது. மலை பாம்பின் உருவில் இருப்பதால் நாகமலை என்றும், சிவந்து இருப்பதால் திருச்செங்கோடு என்றும் பெயர் பெற்றது. |
'செங்கோடனைக் கண்டுதொழ நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே' - என கந்தர் அலங்காரத்தில் சுவாமிகள் பாடியுள்ளார். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.945 pg 1.946 pg 1.947 pg 1.948 WIKI_urai Song number: 381 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 599 - thAmA thAma AlAbA (thiruchchengkOdu) thAmA thAmA lAbA lOkA thArA thArath ...... tharaNeesA thAnA sArO bAvA pAvO nAsA pAsath ...... thaparAtha yAmA yAmA thEsA rUdA yArA yApath ...... thenathAvi yAmA kAvAy theeyE neervA yAthE yeemath ...... thukalAmO kAmA kAmA theenA neeNA kAvAy kALak ...... kiriyAykang kALA leelA bAlA neepA kAmA mOthak ...... kanamAnin thEmAr thEmA kAmee pAkee thEsA thEsath ...... thavarOthum sEyE vELE pUvE kOvE thEvE thEvap ...... perumALE. ......... Meaning ......... thAmA thAma AlAbA lOka AthArA: Oh the garlanded one, oh sweet talker, oh the causal one for the entire world, thAra(m) tharaNi eesA: Oh Lord of the five elements including water and earth, thAna AsArO bAvA pAvO nAsA: Oh Lord who is meditated upon by philanthropists with charitable mind, oh destroyer of all sins; pAsaththu aparAtha yAmA yAmA thEsAr Udu: along with those who have been doomed to the southern land of the God of Death as punishment for their obsessive attachment, ArAyA Apaththu enathu Avi AmA kAvAy: is it fair that my soul is also ordained to that perilous state without discrimination? Kindly protect and bless me! theeyEn neer vAyAthE eemaththu ukalAmO: Although I am vicious, may I not become virtuous before I am consigned to fire in the cremation ground? kAmA kAma AtheenA neeL nAkA vAy kALa kiriyAy: Oh my friend, oh grantor of Your devotees' wishes, oh Lord with an abode in the long serpentine mountain called ThiruchchengkOdu*, kangkALA leelA bAlA neepA: You are the child of Lord SivA who sports a garland of bones, and You wear the garland of kadappa flowers; kAma AmOthak kana mAnin thEm Ar thE mA kAmee pAkee: You relish the millet-flour soaked in honey offered by Your beloved, famous and deer-like VaLLi! thEsA thEsaththavar Othum sEyE: Oh effulgent one, You are the famous child praised by all in the world! vELE pUvE kOvE thEvE thEvap perumALE.: Oh Leader, oh handsome one, oh my king, oh Lord, You are the Lord of all celestials, oh Great One! |
This is a song full of praise, without any request. This song contains quite a few Sanskrit words and conjunctions. |
* ThiruchchengkOdu is in SAlem District of Tamil NAdu, 6 miles away from Sankaridurgam railway station. As the mount is reddish in colour, the name ThiruchchengkOdu -Red Hill- was given. |
In Kandhar AlangkAram, Sri AruNagirinAthar sings about ChenkOdan (Murugan): to see His beauty, he wishes BrahmA, the Creator, had blessed him with 4,000 eyes! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |