திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 570 இலாபமில் (விராலிமலை) Thiruppugazh 570 ilAbamil (virAlimalai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனாதன தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன ...... தனதான ......... பாடல் ......... இலாபமில் பொலாவுரை சொலாமன தபோதன ரியாவரு மிராவுபக ...... லடியேனை இராகமும் விநோதமு முலோபமு டன்மோகமு மிலானிவ னுமாபுருஷ ...... னெனஏய சலாபவ மலாகர சசீதர விதாரண சதாசிவ மயேசுரச ...... கலலோக சராசர வியாபக பராபர மநோலய சமாதிய நுபூதிபெற ...... நினைவாயே நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன நியாயப ரிபாலஅர ...... நதிசூடி நிசாசர குலாதிப திராவண புயாரிட நிராமய சரோருகர ...... னருள்பாலா விலாசுகம் வலாரெனு முலாசவி தவாகவ வியாதர்கள் விநோதமகள் ...... மணவாளா விராவுவ யலார்புரி சிராமலை பிரான்மலை விராலிம லைமீதிலுறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... இலாபமில் பொ(ல்)லாவுரை சொலாமன தபோதனர் ... பயனற்ற பொல்லாத மொழிகளைச் சொல்லாத மனத்தை உடைய தவ முனிவர்கள் இயாவரும் இராவுபகல் அடியேனை ... எல்லோரும் இரவும் பகலும் என்னைக் குறித்து இராகமும் விநோதமும் உலோபமுடன்மோகமும் ... இவன் ஆசையும், விளையாடல்களில் இன்ப மகிழ்ச்சியும், ஈயாமைக் குணமும், காம மயக்கமும் இலான் இவனு மாபுருஷன் எனஏய ... இல்லாதவன், இவனும் ஓர் உத்தம புருஷன் எனக் கூறும் சொல் பொருந்தும்படிச் செய்து, சலாப அமலாகர சசீதர விதாரண ... இனிய குணத்தனே, தூய்மைக்கு இருப்பிடமானவனே, சந்திரனைத் தரித்தவனே*1, கருணை நிறைந்தவனே, சதாசிவ மயேசுர சகலலோக சராசர வியாபக ... சதாசிவமாக இருப்பவனே, மஹேஸ்வரனே, எல்லா உலகங்களிலும் உள்ள இயங்குவன - நிலைத்திருப்பன அனைத்திலும் கலந்திருப்பவனே, பராபர மநோலய சமாதி யநுபூதிபெற நினைவாயே ... பரம் பொருளே, மனம் ஒடுங்கிய சமாதியில் ஒன்றுபடும் நிலையை நான் பெறவேண்டும் என்று நீ நினைத்தருள்வாயாக. நிலாவிரி நிலாமதி நிலாத அநில அசன ... சந்திரிகை விரிந்து ஒளி செய்யும் பிறைமதியையும், நில்லாது அலைகின்ற காற்றைப் புசிக்கும் சர்ப்பமாகி நியாயப ரிபாலஅர ... தர்மத்தைப் காப்பவனான ஆதிசேஷனையும்*2, நதிசூடி ... கங்கைநதியையும் சூடியவரும், நிசாசர குலாதிபதி ராவண புயாரிட ... அரக்கர் குலத்துக்கு அதிபதியாகிய ராவணனுடைய தோள்கள் வருந்துமாறு*3 செய்தவரும், நிராமய சரோருக அரன் அருள்பாலா ... நோயற்றவரும், தாமரையின் மீது அமர்ந்தவருமான சிவனார் அருளிய பாலனே, வில் ஆசுகம் வலாரெனும் உலாச இத ஆகவ ... வில்லையும் அம்பையும் வைத்துப் போர் புரிவதில் வல்லவர்கள் தாம் என்ற மகிழ்ச்சியில் போர் செய்யும் வியாதர்கள் விநோதமகள் மணவாளா ... வேடர்களின் அற்புதப் புதல்வியாகிய வள்ளியின் மணவாளனே, விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை ... மேன்மைமிகு வயலூர், திரிசிராப்பள்ளி, பிரான்மலை என்னும் கொடுங்குன்றம், மற்றும் விராலிமலைமீதிலுறை பெருமாளே. ... விராலிமலையிலும்*4 வாழ்கின்ற பெருமாளே. |
(*1) முருகன் சிவனின் அம்சமாகையால் புலவர் சிவனையும் முருகனையும் வேறாகக் கருதவில்லை. |
(*2) ஆதிசேஷன் சிவபிரானின் ஜடாமுடியில் ஆபரணமாக உள்ளார். அவர் சர்ப்பங்களின் அரசன். நீதியைப் பரிபாலிப்பவர். தனது நீதிவழுவாமை குறித்து கர்வம் ஏற்பட்டதால் சிவபிரான் ஆதிசேஷனை ஜடையிலிருந்து உருவி தரையில் அடிக்க பாம்பின் தலை ஆயிரம் துண்டங்களாக உடைந்தது. தன் தவறுக்கு வருந்தி சிவனைத் தொழ, ஆதிசேஷன் ஆயிரம் தலைகளுடன் தோன்றினார் - சிவபுராணம். |
(*3) ராவணன் அகந்தையினால் சிவபிரானது கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்றான். சிவனார் திருவடி நகத்தால் சிறிது ஊன்ற, வலி தாங்காமல் கதறி அழுதான். அதனால் அவனுக்கு ராவணன் (அழுபவன்) என்ற பெயர் ஏற்பட்டது. |
(*4) விராலிமலை, திருச்சியில் இருந்து மதுரை வழியில் 20 மைலில் மணப்பாறைக்கு அருகே உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.865 pg 1.866 pg 1.867 pg 1.868 WIKI_urai Song number: 352 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 570 - ilAbamil (virAlimalai) ilAbamil polAvurai solAmana thapOdhanar iyAvarum irAvupagal ...... adiyEnai irAgamum vinOdhamum ulObamudan mOhamum ilAniva numA purushan ...... ena Eya salAbava malAkara saseedhara vidhAraNa sadhAsiva mayEsura ...... sakalalOka sarAsara viyApaga parApara manOlaya samAdhi anubUthipeRa ...... ninaivAyE nilAviri nilAmadhi nilAdhava nilAsana niyAya paripAla ara ...... nadhisUdi nisAchara kulAdhi pathi rAvaNa buyArida nirAmaya sarOruharan ...... aruLbAlA vilAsukam valArenum ulAsavi dhavAgava viyAdhargaL vinOdhamagaL ...... maNavALA virAvu vayalArpuri sirAmalai pirAnmalai virAli malai meedhil uRai ...... perumALE. ......... Meaning ......... ilAbamil polAvurai solAmana thapOdhanar iyAvarum: The sages are so pious that they never say anything futile or hurtful; irAvupagal adiyEnai: they have been saying these things about me day and night. irAgamum vinOdhamum ulObamudan mOhamum: "He does not have desires, does not indulge in pranks, has no miserliness and lust; ilAniva numA purushan ena Eya: he is indeed a great man". In order that I qualify for these words, salAbava malAkara saseedhara vidhAraNa: Oh upright one, who wears the spotless crescent moon*1, and the most compassionate, sadhAsiva mayEsura: Oh SadhAsivA, Oh MahEswarA (Lord of all Gods), sakalalOka sarAsara viyApaga parApara: You pervade everything in the world, both moving and stationary, Oh the Supreme Being, manOlaya samAdhi anubUthipeRa ninaivAyE: please think in terms of blessing me with the sublime experience of NirvAna, where the thought process ceases and the mind shrinks. nilAviri nilAmadhi: The crescent moon that spreads moonlight everywhere, nilAdha anila asana niyAya paripAla ara: the serpent (AdhisEshan) who feeds on the wind that stops nowhere and who is known to uphold justice*2, nadhisUdi: and the river Ganga are worn in SivA's tresses; nisAchara kulAdhi pathi rAvaNa buyArida: RAvanA, who is the Leader of the asura dynasty, once suffered immense pain in his shoulders, which was inflicted by SivA*3; nirAmaya sarOruharan aruLbAlA: He is free from any disease; He is seated on the lotus; that SivA delivered You as His child! vil Asukam valArenum ulAsa idha Agava viyAdhargaL: These hunters are experts in fighting with their bows and arrows and delight in doing so; vinOdhamagaL maNavALA: their wonderful girl, VaLLi has You as her consort! virAvu vayalArpuri sirAmalai pirAnmalai: The famous places like VayalUr, ThirisirApalli, PirAnmalai (known as KodungkundRam) virAli malai meedhil uRai perumALE.: and VirAlimalai*4 are Your favourite abodes, Oh Great One! |
(*1) As Murugan is the alter-ego of SivA, the poet does not distingush between the two. |
(*2) AdhisEshan is worn as an ornament in the tresses of SivA. He is the King of all serpents. He is known to uphold justice. Once, AdhisEshan became so egoistic about his sense of justice that Lord SivA decided to punish him by pulling him from His tresses and throwing him on earth when his head broke into a thousand pieces. Repentant AdhisEshan pleaded for forgiveness and prayed to SivA whereupon AdhisEshan was blessed with a thousand hoods. |
(*3) RAvaNA became so arrogant that he decided to lift Mount KailAsh along with SivA and PArvathi. To punish his arrogance, SivA pressed His little toe on the mountain whose entire weight fell on the shoulders of RAvanA. He began to cry in pain. RAvaNA means one who cries. |
(*4) VirAlimalai is located 20 miles from Tiruchi on the route to Madhurai, near MaNappARai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |