பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/868

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . விராலிமலை திருப்புகழ் உரை 395 சந்திரிகை விரிந்து பிரகாசிக்கின்ற பிறையையும், நில்லாது அலைகின்ற அனில்ம் (காற்றை) அசனம் (உணவாகக் கொள்ளும்) நியாய பரிபாலனம் செய்வதில் வல்ல ஆதிசேடனாகிய சர்ப்பத்தையும், கங்கையையும் சூடினவரும் அரக்கர் குலத்துக்கு (அதி பதி தலைவனான ராவன னுடைய புயங்களுக்குக் கேடு உண்டு பண்ணினவரும், நோயற்ற மூர்த்தியும், தாமரையில் வீற்றிருப்பவருமான அரன் (அல்லது தாம்ரையன்ன கரத்தை உடைய) சிவன் அருளிய குழந்தையே! வில் - அம்பு விடுதலில் (தாம்) வல்லவர் என்னும் மனக்களிப்பின் இதம் (இன்பம்), கொண்டு போரிடும் வேடர்களின் அற்புத மகளாம் வள்ளியின் மணவாளனே! பொருந்திய வயலார்புரி (வயலூர்), திரிசிராமலை, பிரான்மலை (கொடுங்குன்றம்), ( களை இடமாகக் கொண்டு) விராலிமலை மீதில் உறைகின்ற பெருமாளே! (மநோலய சமாதி அநுபூதிபெற நினைவாயே) 353 நோயிலாத, பழமையான, எல்லாவற்றுக்கும் மேலான, வரம் என்னும் @#ji தருவதான (இனிய வரங்களைத் தருவதான) (அல்லது சிரேட்டமான அ விலாத), ←ᏠjöᏗᎧyy (கலக்கம்) இல்லாத, மேன்மை மிக்க ஒளியாய் விளங்கும் (பொருளை) or (முன் பக்கத் தொடர்ச்சி) “சிவபிரான் தாமரையில் வீற்றிருத்தல்: பதும நன் மலரது மருவிய சிவன்- சம்பந்தர் 1-21-1. சுடர்க் கமலப் போதகஞ் சேர் புண்ணியனார் - சம்பந்தர் 1-66-2 ttவில் ஆசுகம், ஆசுகம் - அம்பு. #ஆகவம் - போர். SSவியாதர்கள் - வேடர்கள்: $ சம்பந்தர் தேவாரத்தில் அருணகிரியார்க்கு மிகப் பழக்கம் உண்டு என்பது திரிசிராப்பள்ளிப் பதிகம் 332-ன் கீழ்க்குறிப்பிற் காட்டப்பட்டது. இந்தப் பாடலில் "நிராமய பு. தன பராபர" என்பது சம்பந்தர் தேவாரத்தில் நிராமய பராபர புராதன" எனவரும் பாடல் நினைவு போலும் (III. 67 - 6). நிராமயம் - நோயிலாமை ஆமயம் - நோய் ஆமயந் தீர்த்தடியேனை ஆளாக் கொண்டார் . அப்பர் - Vi-96-1.