திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 565 கயலைச் சருவி (இரத்னகிரி) Thiruppugazh 565 kayalaichcharuvi (rathnagiri) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான ......... பாடல் ......... கயலைச் சருவிப் பிணையொத் தலர்பொற் கமலத் தியல்மைக் ...... கணினாலே கடிமொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர்விட் டெழுமைக் ...... குழலாலே நயபொற் கலசத் தினைவெற் பினைமிக் குளநற் பெருசெப் ...... பிணையாலே நலமற் றறிவற் றுணர்வற் றனனற் கதியெப் படிபெற் ...... றிடுவேனோ புயலுற் றியல்மைக் கடலிற் புகுகொக் கறமுற் சரமுய்த் ...... தமிழ்வோடும் பொருதிட் டமரர்க் குறுதுக் கமும்விட் டொழியப் புகழ்பெற் ...... றிடுவோனே செயசித் திரமுத் தமிழுற் பவநற் செபமுற் பொருளுற் ...... றருள்வாழ்வே சிவதைப் பதிரத் தினவெற் பதனிற் றிகழ்மெய்க் குமரப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கயலைச் சருவிப் பிணை ஒத்து அலர் பொன் கமலத்து இயல் மைக் க(ண்)ணினாலே ... கயல் மீனோடு போர் செய்து, பெண் மானை ஒத்து, மலராகிய அழகிய தாமரையின் தன்மையைக் கொண்ட, மை தீட்டிய கண்களாலும், கடி மொய்ப் புயலைக் கருதிக் கறுவிக் கதிர் விட்டு எழு மைக் குழலாலே ... விளக்கமுற்று நெருங்கிய கருமேகத்தை நோக்கிக் கோபித்து, ஒளி வீசி எழுந்துத் திகழும் கரிய கூந்தலாலும், நய பொன் கலசத்தினை வெற்பினை மிக்கு உள பெரு செப்பு இணையாலே ... இனிமையும் அழகும் கொண்ட குடத்தையும், மலையையும் விட மேம்பாடு உள்ள நல்ல பெரிய இரு மார்பகங்களாலும், நலம் அற்று அறிவு அற்று உணர்வு அற்றனன் நல் கதியை எப்படி பெற்றிடுவேனோ ... இன்பம், அழகு முதலிய நலன்களை இழந்து, அறிவு போய், உணர்வையும் இழந்த நான் நற் கதியை எவ்வாறு பெறுவேன்? புயல் உற்ற இயல் மைக் கடலில் புகு கொக்கு அற முன் சரம் உய்த்த அமிழ்வோடும் ... மேகம் படியும் தன்மை வாய்ந்த கருங் கடலில் புகுந்து நின்ற மாமரமாகிய சூரன் வேரோடு சாயும்படி முன்பு வேலாயுதத்தை விட்டு அடக்கி ஆழ்த்திய ஆற்றலோடு, பொருதிட்டு அமரர்க்கு உறு துக்கமும் விட்டு ஒழியப் புகழ் பெற்றிடுவோனே ... சண்டை செய்து தேவர்களுக்கு இருந்த துன்பத்தை விட்டு நீங்கச் செய்த புகழைப் பெற்றவனே, செய சித்திர முத்தமிழ் உற்பவ நல் செபம் முன் பொருள் உற்று அருள் வாழ்வே ... வெற்றியைத் தரும் அழகிய முத்தமிழ்ப் பாக்கள் மூலமாக வெளித்தோன்றும் சிறந்த தேவார மந்திரங்களையும், மேலான பொருளையும் அனுபவித்து (சம்பந்தராக வந்து) உலகுக்கு அருளிய செல்வமே, சிவதைப் பதி ரத்தின வெற்பு அதனில் திகழ் மெய்க் குமரப் பெருமாளே. ... சிவாயம்* எனப்படும் ரத்தின கிரியில் விளங்கும் உண்மை வடிவாகிய குமரப் பெருமாளே. |
* ரத்னாசலம், சிவாயம், மணிக்கிரி என்பன வாட்போக்கித் தலமாகிய ரத்தினகிரியின் பிற பெயர்கள். தேவாரம் பெற்ற திருத்தலம். திருச்சி மாவட்டம் குளித்தலை ரயில் நிலையத்தில் இருந்து 8 மைல் தொலைவில் இருக்கிறது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.849 pg 1.850 pg 1.851 pg 1.852 WIKI_urai Song number: 347 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 565 - kayalaich charuvi (rathnagiri) kayalaic charuvip piNaiyoth thalarpoR kamalath thiyalmaik ...... kaNinAlE kadimoyp puyalaik karuthik kaRuvik kathirvit tezhumaik ...... kuzhalAlE nayapoR kalasath thinaiveR pinaimik kuLanaR perusep ...... piNaiyAlE nalamat RaRivat RuNarvat RananaR kathiyep padipet ...... RiduvEnO puyalut Riyalmaik kadaliR pukukok kaRamuR charamuyth ...... thamizhvOdum poruthit tamarark kuRuthuk kamumvit tozhiyap pukazhpet ...... RiduvOnE seyasith thiramuth thamizhuR pavanaR chepamuR poruLut ...... RaruLvAzhvE sivathaip pathirath thinaveR pathanit Rikazhmeyk kumarap ...... perumALE. ......... Meaning ......... kayalaic charuvip piNai oththu alar pon kamalaththu iyal maik ka(N)NinAlE: Because of their black-shaded eyes vying with kayal fish, looking like a female deer's eyes and beautiful lotus, kadi moyp puyalaik karuthik kaRuvik kathir vittu ezhu maik kuzhalAlE: their bright, rising and dark hair that taunts the dense and dark cloud, naya pon kalasaththinai veRpinai mikku uLa peru seppu iNaiyAlE: and their lovely and large bosom that surpass the dainty and beautiful pot and the mount, nalam atRu aRivu atRu uNarvu atRanan nal kathiyai eppadi petRiduvEnO: I have lost all values like happiness and grace, my intelligence is gone and even my basic sense has vanished; how will I ever be able to attain salvation? puyal utRa iyal maik kadalil puku kokku aRa mun saram uyththa amizhvOdum: When once the demon SUran, in the disguise of a mango tree, hid inside the dark seas over which clouds hang, You annihilated him by wielding Your spear; with that kind of commanding prowess, poruthittu amararkku uRu thukkamum vittu ozhiyap pukazh petRiduvOnE: You fought the war and eradicated the grief of the celestials, Oh Famous One! seya siththira muththamizh uRpava nal sepam mun poruL utRu aruL vAzhvE: You successfully composed (coming as ThirugnAna Sambandhar) many hymns (ThEvAram) in the three branches of Tamil and interpreted their great significance for the entire world to experience, Oh Lord! sivathaip pathi raththina veRpu athanil thikazh meyk kumarap perumALE.: You are seated in the form of Absolute Truth in this great place SivAyam*, known as Rathnagiri, Oh KumarA, the Great One! |
* RathnAchalam, SivAyam, MaNikkiri and VAtpOkki are a few of the names of Rathnagiri which has been sung in many ThEvAram songs. It is situated in Tiruchi District, 8 miles from KuLiththalai. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |