திருப்புகழ் 559 பொருளின் மேற்ப்ரிய  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 559 poruLinmERpriya  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 559 poruLinmERpriya - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தானா தானன
     தனன தாத்தன தானா தானன
          தனன தாத்தன தானா தானன ...... தந்ததான

......... பாடல் .........

பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள்
     பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள்
          புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் ...... கொங்கைமேலே

புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
     மிடிய ராக்குபொ லாமூ தேவிகள்
          புலையர் மாட்டும றாதே கூடிகள் ...... நெஞ்சமாயம்

கருதொ ணாப்பல கோடா கோடிகள்
     விரகி னாற்பலர் மேல்வீழ் வீணிகள்
          கலவி சாத்திர நூலே யோதிகள் ...... தங்களாசைக்

கவிகள் கூப்பிடு மோயா மாரிகள்
     அவச மாக்கிடு பேய்நீ ரூணிகள்
          கருணை நோக்கமி லாமா பாவிக ...... ளின்பமாமோ

குருக டாக்ஷக லாவே தாகம
     பரம வாக்கிய ஞானா சாரிய
          குறைவு தீர்த்தருள் ஸ்வாமி கார்முக ...... வன்பரான

கொடிய வேட்டுவர் கோகோ கோவென
     மடிய நீட்டிய கூர்வே லாயுத
          குருகு க்ஷேத்ரபு ரேசா வாசுகி ...... அஞ்சமாறும்

செருப ராக்ரம கேகே வாகன
     சரவ ணோற்பவ மாலா லாளித
          திரள்பு யாத்திரி யீரா றாகிய ...... கந்தவேளே

சிகர தீர்க்கம காசீ கோபுர
     முகச டாக்கர சேணா டாக்ருத
          திரிசி ராப்பளி வாழ்வே தேவர்கள் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

பொருளின் மேல் ப்ரிய காமா காரிகள் பரிவு போல் புணர்
க்ரீடா பீடிகள்
... பொருளின் மேல் ஆசை கொண்ட காமமே
உருவமாக ஆனவர்கள். அன்பு உடையவர்கள் போலச் சேரும் காம
லீலைக்கு இருப்பிடம் ஆனவர்கள்.

புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கை மேலே
புடைவை போட்டிடு மாயா ரூபிகள்
... ஆண்கள் கூட்டத்தில்
வெட்கப்படாத செருக்கினர். மார்பின் மேல் புடைவையை
எடுத்தெடுத்துப் போடும் மாயா உருவத்தினர்.

மிடியர் ஆக்கு பொ(ல்)லா மூதேவிகள் புலையர் மாட்டும்
அறாதே கூடிகள் நெஞ்ச மாயம் கருத ஒணா பல கோடா
கோடிகள்
... (தம்மிடம் வருவரை) வறியராக்குகின்ற பொல்லாத
மூதேவிகள். கீழ் மக்களிடத்தும் மறுக்காமல் சேர்பவர்கள். (தமது) மனதில்
வஞ்சனை (எண்ணங்கள்) கணக்கிட முடியாத பல கோடிக் கணக்காக
உடையவர்கள்.

விரகினால் பலர் மேல் வீழ் வீணிகள் கலவி சாத்திர நூலே
ஓதிகள் தங்கள் ஆசைக் கவிகள் கூப்பிடும் ஓயா
மாரிகள்
... தந்திரத்தால் பலர் மேல் விழுகின்ற பயனற்றவர்கள். கலவி
சாத்திர நூல்களையே படிப்பவர்கள். தங்களுக்கு ஆசையான
பாடல்களைப் பாடும் கவிகளை அழைப்பதில் ஓயாத மழை போன்றவர்கள்.

அவசம் ஆக்கிடு பேய் நீர் ஊணிகள் கருணை நோக்கம்
இ(ல்)லா மா பாவிகள் இன்பம் ஆமோ
... தன் வசத்தை இழக்கச்
செய்கின்ற கள்ளை உண்பவர்கள். இரக்கமுள்ள பார்வையே இல்லாத
பெரிய பாவிகளாகிய விலை மகளிருடன் கூடுதல் நல்லதாகுமோ?

குரு கடாக்ஷ கலா வேத ஆகம பரம வாக்கிய ஞான ஆசாரிய
குறைவு தீர்த்து அருள் சுவாமி
... குரு மூர்த்தியாகக் கடைக்கண்
வைத்து அருள வல்லவனே, வேதம் ஆகமம் ஆகிய சிறப்பான மொழிகளை
உபதேசிக்க வல்ல ஞான போதகனே, எனது குறைகள் எல்லாவற்றையும்
நீக்க வல்ல ஸ்வாமியே,

கார்முக வன்பரான கொடிய வேட்டுவர் கோகோகோ
எனமடிய நீட்டிய கூர் வேலாயுத
... வில்லை ஏந்திய
வலிமையாளரான பொல்லாத வேடர்கள் கோகோவென்று கூச்சலிட்டு
இறக்கும்படி செலுத்திய கூர்மையான வேலாயுதனே,

குருகு த்ர புர* ஈசா வாசுகி அஞ்ச மாறும் செரு பராக்ரம
கேக(ய)** வாகன
... கோழியூர் என்னும் தலத்தில் வீற்றிருக்கும்
ஈசனே, வாசுகி என்னும் பாம்பு பயப்படும்படி எதிர்த்து போர் செய்யும்
வலிமை பொருந்திய மயிலை வாகனமாக உடையவனே,

சரவண உற்பவ மாலால் லாளித திரள் புய அத்திரி ஈராறு
ஆகிய கந்தவேளே
... சரவணப் பொய்கையில் தோன்றியவனே,
பெருமையால் அழகு பெற்ற திரண்ட புய மலைகள் பன்னிரண்டு
கொண்ட கந்த வேளே,

சிகர தீர்க்க மகா சீ கோபுர முக சடா அக்கர ... சிகரங்கள்
நீண்ட பெரிய விசேஷமான கோபுர வாயிலில் வீற்றிருக்கும்
(சரவணபவ என்ற) ஆறு அட்சரங்களுக்கு உரியவனே,

சேண் நாடு ஆக்ருத திரிசிராப்ப(ள்)ளி வாழ்வே தேவர்கள்
தம்பிரானே.
... விண்ணுலகம் போல் உயர்ந்த திரிசிராப்பள்ளியில்
வீற்றிருப்பவனே, தேவர்கள் தம்பிரானே.


* குருகு த்ரபுரம் = கோழியூர் (உறையூர்). குருகு = கோழி.
இங்கு யானையைக் கோழி வென்றமையால் இப்பெயர் வந்தது.
திருச்சிக்கு அருகில் உள்ளது.


** கேகயம் = மயில்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.833  pg 1.834  pg 1.835  pg 1.836  pg 1.837  pg 1.838 
 WIKI_urai Song number: 341 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 559 - poruLin mERpriya (thiruchirAppaLLi)

poruLin mERpriya kAmA kArikaL
     parivu pORpuNar kreedA peedikaL
          purushar kOttiyil nANA mOdikaL ...... kongaimElE

pudaivai pOttidu mAyA rUpikaL
     midiya rAkkupo lAmU thEvikaL
          pulaiyar mAttuma RAthE kUdikaL ...... nenjamAyam

karutho NAppala kOdA kOdikaL
     viraki nARpalar mElveezh veeNikaL
          kalavi sAththira nUlE yOthikaL ...... thangaLAsaik

kavikaL kUppidu mOyA mArikaL
     avasa mAkkidu pEynee rUNikaL
          karuNai nOkkami lAmA pAvika ...... LinpamAmO

kuruka dAkshaka lAvE thAkama
     parama vAkkiya njAnA chAriya
          kuRaivu theerththaruL SvAmi kArmuka ...... vanparAna

kodiya vEttuvar kOkO kOvena
     madiya neettiya kUrvE lAyutha
          kuruku kshEthrapu rEsA vAsuki ...... anjamARum

cherupa rAkrama kEkE vAkana
     sarava NORpava mAlA lALitha
          thiraLpu yAththiri yeerA RAkiya ...... kanthavELE

sikara theerkkama kAsee kOpura
     mukacha dAkkara sENA dAkrutha
          thirisi rAppaLi vAzhvE thEvarkaL ...... thambirAnE.

......... Meaning .........

poruLin mEl priya kAmA kArikaL parivu pOl puNar kreedA peedikaL: These avaricious women are an embodiment of passion. They feign affection while making love and are a repository of erotic acts.

purushar kOttiyil nANA mOdikaL kongai mElE pudaivai pOttidu mAyA rUpikaL: They are arrogantly shameless in the company of men. These delusive figures repeatedly slide their sari from, and cover up, their bosom.

midiyar Akku po(l)lA mUthEvikaL pulaiyar mAttum aRAthE kUdikaL nenja mAyam karutha oNA pala kOdA kOdikaL: They are the impish and evil goddesses of adversity (mUthEvi) who turn their suitors into paupers. Without any hesitation they are willing to make love even to debauchees. In their mind they have countless millions of schemes of treachery.

virakinAl palar mEl veezh veeNikaL kalavi sAththira nUlE OthikaL thangaL Asaik kavikaL kUppidum OyA mArikaL: Deviously, these vain women fall all over many men. They read only the erotic texts dealing with carnal knowledge. To listen to their favourite songs, they incessantly call poets, coming hard on them like the torrential rain.

avasam Akkidu pEy neer UNikaL karuNai nOkkam i(l)lA mA pAvikaL inpam AmO: They imbibe the inebriating liquor that causes loss of balance. These whores do not have any compassion whatsoever; and could there be any good outcome from my liaison with such great sinners?

kuru kadAksha kalA vEtha Akama parama vAkkiya njAna AsAriya kuRaivu theerththu aruL SvAmi: You are the One who is capable of showing compassion as the Great Master and teaching me all the famous texts of the VEdAs and the holy scriptures, Oh Teacher of True Knowledge! You are the Lord that can remove all my blemishes!

kArmuka vanparAna kodiya vEttuvar kOkOkO enamadiya neettiya kUr vElAyutha: The mighty and evil hunters in the forest, holding bows, screamed uncontrollably and died when You wielded the sharp spear on them, Oh Lord!

kuruku thra pura* eesA vAsuki anja mARum seru parAkrama kEka(ya)** vAkana: You are the Lord seated in this place, KOzhiyUr! You mount Your vehicle of peacock that has the valour to terrify and fight the serpent VAsuki!

saravaNa uRpava mAlAl lALitha thiraL puya aththiri eerARu Akiya kanthavELE: You were born in the holy pond of SaravaNa, Oh Lord! You proudly possess twelve broad and handsome shoulders, Oh Lord KandhA!

sikara theerkka makA see kOpura muka sadA akkara: You represent the six hallowed letters (SaravaNabava) that appear prominently in front of the special temple towers that have lofty peaks, Oh Lord!

sEN nAdu Akrutha thirisirAppa(L)Li vAzhvE thEvarkaL thambirAnE.: You are seated in ThirisirAppaLLi whose fame is as high as the celestial land! You are the Lord of the celestials, Oh Great One!


* Kuruku thrapuram = KOzhiyUr (uRaiyUr, a part of ThirisirAppaLLi). kuruku = Rooster.
In this place, a Rooster conquered an elephant, and hence it is known as KOzhiyUr.


** kEkayam = Peacock.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 559 poruLin mERpriya - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]