திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 558 புவனத் தொரு (திருசிராப்பள்ளி) Thiruppugazh 558 buvanaththoru (thiruchirAppaLLi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் தனனத் ...... தனதான ......... பாடல் ......... புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக் கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் ...... திடிலாவி புரியட் டகமிட் டதுகட் டியிறுக் கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் ...... தனலூடே தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் தணிபற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் ...... திடவாய்கண் சலனப் படஎற் றியிறைச் சியறுத் தயில்வித் துமுரித் துநெரித் துளையத் தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் ...... துயர்தீராய் பவனத் தையொடுக் குமனக் கவலைப் ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற் படரிச் சையொழித் ததவச் சரியைக் ...... க்ரியையோகர் பரிபக் குவர்நிட் டைநிவிர்த் தியினிற் பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற் பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் ...... குருநாதா சிவனுத் தமனித் தவுருத் திரன்முக் கணனக் கன்மழுக் கரனுக் ரரணத் த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் ...... குணனாதி செகவித் தனிசப் பொருள்சிற் பரனற் புதனொப் பிலியுற் பவபத் மதடத் த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... புவனத் தொருபொற்றொடி சிற் றுதரக் ... இந்தப் பூமியில் ஓர் அழகிய பெண்ணின் சிறிய வயிற்றில் கருவிற் பவமுற்று விதிப் படியில் ... கருவிலே தோற்றம் ஏற்பட்டு, விதியின் ஆட்சிப்படியே புணர்துக்கசுகப் பயில்வுற்று மரித்திடில் ... கூடுகின்ற துக்கத்தையும் சுகத்தையும் அநுபவித்து, இறந்தபின் ஆவி புரியட்டகம் இட்டு ... உயிரை புரி அஷ்டகம்* என்ற சூக்ஷ்ம தேகத்தில் புகுத்தி, அதுகட்டியிறுக்கு அடி குத்தெனஅச்சம்விளைத்து ... (யமலோகத்தில்) அந்த தேகத்தைக் கட்டி, அடி, குத்து என்றெல்லாம் பயத்தை உண்டுபண்ணி, அலறப் புரள்வித்து வருத்தி மணற் சொரிவித்து ... அலறி அழும்படி புரட்டி எடுத்து, வருத்தப்படுத்தி, சூடான மணலை உடலெல்லாம் சொரிவித்து, அனலூடே தவனப் படவிட்டு ... நெருப்புக்குள்ளே அவ்வுடலைச் சூடேறும்படியாக விட்டு, உயிர்செக்கிலரைத்து ... உயிரைச் செக்கில் இட்டுப் பிழிய அரைத்து, அணிபற்களுதிர்த்து ... வரிசையாக உள்ள பற்களை தட்டி உதிர்த்து, எரிசெப் புருவைத் தழுவப் பணி ... எரிகின்ற செம்பாலான உருவம் ஒன்றைத் தழுவும்படிச் செய்து, முட்களில்கட்டியிசித்திட ... முட்களில் கட்டி இழுத்திட, வாய்கண் சலனப் படஎற்றி ... வாயும் கண்ணும் கலங்கி அசையும்படியாக உதைத்து, இறைச்சியறுத்து அயில்வித்து ... மாமிசத்தை அறுத்து உண்ணும்படியாகச் செய்து, முரித்து நெரித்து உளையத் தளையிட்டு ... எலும்பை ஒடித்து, நொறுக்கி, வலிக்கும்படியாக காலில் விலங்கு பூட்டி, வருத்தும் யம ப்ரகரத் துயர்தீராய் ... துன்பப்படுத்தும் யம தண்டனை என்ற துயரத்தை நீக்கி அருள்வாயாக. பவனத்தை யொடுக்கு மனக்கவலைப் ப்ரமையற்று ... பிராணவாயுவை ஒடுக்கும் மனக்கவலையாம் மயக்கத்தை ஒழித்து, ஐவகைப் புலனிற் கடிதிற் படரிச்சையொழித்த ... ஐந்து புலன்களில் வேகமாகச் செல்கின்ற ஆசையை நீத்த, தவச் சரியைக் க்ரியையோகர் ... தவசீலர்களான சரியையாளர்கள் *1, கிரியையாளர்கள் *2, யோகிகள் *3, பரிபக்குவர் நிட்டை நிவிர்த்தியினில் பரிசுத்தர் ... ஞான *4 முதிர்ச்சி கொண்டவர்கள், தியானம், துறவு மேற்கொண்ட பரிசுத்தர்கள், விரத்தர்கருத்ததனிற் பரவப்படு ... பற்றை நீக்கியவர்கள் இவர்களின் கருத்திலே வைத்துப் போற்றப்படும், செய்ப் பதியிற் பரமக் குருநாதா ... வயலூர்ப்பதியில் வாழும் குருநாதனே, பரமனுக்கும் குருநாதனே, சிவன் உத்தமன் நித்த வுருத்திரன் ... சிவபிரான், உத்தமன், அழிவில்லாத ருத்திரன், முக் கணன் நக்கன்மழுக்கரன் ... முக்கண்ணன், திகம்பரன் (திக்குக்களையே ஆடையாகப் புனைந்தவன்), மழு ஏந்திய கரத்தன், உக்ர ரணத் த்ரிபுரத்தை யெரித்தருள் ... கடுமையான போர்க்களத்தில் திரிபுரத்தை எரித்தருளிய சிற் குணன் நிற்குணன் ஆதி ... ஞான குணத்தவன், குணமில்லாதவன், ஆதி மூர்த்தி, செகவித்தன் நிசப் பொருள் ... உலகுக்கு வித்தான மூலப் பொருளானவன், உண்மைப் பொருளானவன், சிற்பரன்அற்புதன் ஒப்பிலி மற் பவ ... அறிவுக்கு எட்டாதவன், அற்புதன், தனக்கு உவமை இல்லாதவனாகிய சிவபெருமானிடத்தே தோன்றியவனே, பத்ம தடத் த்ரிசிரப் புர வெற்புறை ... தாமரைத் தடாகங்கள் உள்ள திரிசிராப்பள்ளி மலை மேல் அமரும் சற் குமரப் பெருமாளே. ... நல்ல குமரப் பெருமாளே. |
* புரி அஷ்டகம்: ஐம்புலன்களான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் ஆகியவையோடு மனம், புத்தி, அகங்காரம் மூன்றும் சேர்ந்து ஆக மொத்தம் எட்டும் கூடிய தேகம். யமதூதர்கள் கொண்டு போகும் உடல் இதுதான். |
** நான்கு பக்தி மார்க்கங்கள் பின்வருமாறு: 1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'. 2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல். இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'. 3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி, முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'. 4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'. . . . சிவஞான சித்தியார் சூத்திரம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.831 pg 1.832 pg 1.833 pg 1.834 WIKI_urai Song number: 340 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 558 - buvanaththoru (thiruchirAppaLLi) buvanath thorupotrodi chitrudharak karuvil bavamutru vidhippadiyiR puNar dhukka sugap payil vutru marith ...... thidilAvi puriyat tagamittadhu kattiyiRuk kadikuth thena accham viLaith thalaRap puraLvithth uvaruththi maNaR soriviththu ...... analUdE dhavanap padavit tuyirsek kilaraith thaNipaR kaLudhirth therisep puruvaith thazhuvap paNi mutkaLilkat tiyisith ...... thidavAykaN chalanappada etriyiRaich chiyaRuth thayilviththu muriththu nerith thuLaiyath thaLaiyittu varuththum yamap ragarath ...... thuyartheerAy pavanath thaiyoduk kumanak kavalaip bramaiyatr aivagaip pulaniR kadidhiR padar icchaiyozhith thathavach chariyaik ...... kriyaiyOgar paripak kuvar nishtai nivirth thiyiniR parisudhdhar viraththar karuththadhanil paravappadu seyppadhiyil parama ...... gurunAthA sivan uththama niththa uruddhiran muk kaNanakkan mazhukkaran ugraraNath thiripuraththai eriththaruL siRguNa niR ...... guNan Adhi jegaviththa nijapporuL chiRparan aR buthan oppiliyuR bava padhmathadath thirisirAppura veRpuRai saR kumarap ...... perumALE. ......... Meaning ......... buvanath thorupotrodi chitrudharak karuvil bavamutru: In this world, birth takes place in the little womb of a pretty woman. vidhippadiyiR puNar dhukka sugap payil vutru: According to fate, life experiences happiness and misery. marith thidilAvi puriyat tagamittu: Upon death, life is encompassed in a virtual body (SUkshma Sareeram also known as puriashtagam*) adhu kattiyiRukka adikuththena accham viLaiththu alaRa: and that body is tightly bound in ropes (in hell) and is subjected to beatings and blows, leading to scary screams. puraLviththu varuththi maNaR soriviththu: The body is rolled over and tortured by splattering hot sand all over it analUdE dhavanap padavittu: It is thrust into fire and roasted. uyirsekkilaraiththu: The life in that body is crushed in a crusher (chekku). aNipaRkaLudhirththu: The neat row of teeth is knocked out. erisep puruvaith thazhuvap paNi: The body is forced into hugging a copper statue that is smoulderingly hot. mutkaLilkattiyisiththida: It is bound with thorns and dragged along. vAykaN chalanappada etri: The body is kicked so hard that the mouth and eyes are shaken. yiRaichchiyaRuththu ayilviththu: The flesh of the body is sliced and forcibly fed into the mouth. muriththu neriththu uLaiya thaLaiyittu: The feet are crushed and squeezed painfully by heavy chains. varuththum yamapragarath thuyar theerAy: These are the punishments meted out in the Land of Yaman (God of Death). Please spare me such misery! pavanath thaiyodukkumanak kavalai bramaiyatru: These people are free from the illusion or mental pressure to control and regulate their breath; aivagaip pulaniR kadidhiR padar icchaiyozhiththa: they have conquered the five senses (namely, taste, smell, sight, hearing and perception) through which desire spreads fast; thavach chariyaik kriyaiyOgar paripakkuvar: these are exalted people who have performed sariyai, kiriyai, and yOgA and are mature consummate gnAnis**. nishtai nivirththiyiniR parisudhdhar: these have attained the purest mind through renunciation and deep meditation; viraththar: these people have given up all desires and attachments. karuththadhanil paravappadu seyppadhiyil parama gurunAthA: In their thoughts, this place, VayalUr, is worshipped with reverence. You reside there, Oh Supreme Master! sivan uththaman niththa uruddhiran mukkaNan: Lord SivA, the most virtuous, the immortal one, Rudra MUrthi, one who has three eyes (the Sun, the Moon and the Fire), nakkan mazhukkaran: the Dhikambaran (one who wears the directions as His clothing), one who holds in his hand the pickaxe, ugraraNath thiripuraththai eriththaruL: one who burnt down Thiripuram in a fierce battle, siRguNa niRguNan Adhi: one who is Wisdom itself, one who does not have any attributes, one who is primordial, jegaviththa nijapporuL chiRparan: one who is the seed for the entire universe, one who is truth incarnate, one who is beyond comprehension, aRbuthan oppili yuRbava: one who is the most wonderful and is matchless - that SivA delivered You to us! padhmathadath thirisirAppura veRpuRai saR kumarap perumALE.: You reside in the mountain of ThirisirAppaLLi, which is full of lotus ponds, Oh Great One! |
* Puriashtagam means the virtual body in which the five senses, mind, intellect and ego (in all, eight) are encompassed together. This is not the mortal body, but is the one that is carried by messengers of the God of Death. |
** The four methods of worship are: 1. sariyai: Worship through service in temples such as doing penance, washing the floor, lighting the lamps, maintaining the flower garden, plucking the flowers for offering, making of garlands, singing of hymns, decorating the deities etc. This is known as 'dhAdha mArgam - sAlOkam'. 2. kiriyai: Worship, both inwardly and externally, of a God with a form through daily offerings (pUjA) and with several pUjA materials. This is called 'puthra mArgam - sameepam'. 3. yOgam: Inward worship only of a formless God by control of senses, holding the oxygen in the inhaled air and letting it through the six centres of 'kuNdalini chakrA' after understanding each state fully, experiencing the flow of nectar in the 'Lunar zone' between the eyebrows and letting it seep throughout the body and meditating on the full effulgence. This is 'sakha mArgam - sArUbam'. 4. gnAnam: Ceasing all external and internal activities, this method consists of worshipping through the medium of intellect alone, seeking the True Knowledge. This is 'san mArgam - sAyujyam'. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |