திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 560 பொருள்கவர் சிந்தை (திருசிராப்பள்ளி) Thiruppugazh 560 poruLkavarsindhai (thiruchirAppaLLi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தந்த தனதன தந்த தனதன தந்த ...... தனதான ......... பாடல் ......... பொருள்கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுககில் சந்து ...... பனிநீர்தோய் புளகித கொங்கை யிளகவ டங்கள் புரளம ருங்கி ...... லுடைசோர இருள்வளர் கொண்டை சரியஇ சைந்து இணைதரு பங்க ...... அநுராகத் திரிதலொ ழிந்து மனதுக சிந்து னிணையடி யென்று ...... புகழ்வேனோ மருள்கொடு சென்று பரிவுட னன்று மலையில்வி ளைந்த ...... தினைகாவல் மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த ...... முருகோனே தெருளுறு மன்பர் பரவ விளங்கு திரிசிர குன்றில் ...... முதனாளில் தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பொருள் கவர் சிந்தை அரிவையர் தங்கள் புழுகு அகில் சந்து பனி நீர் தோய் ... பொருளை அபகரிப்பதையே மனத்தில் கொண்ட (விலை) மாதர்களுடைய, புனுகு, அகில், சந்தனம், பன்னீர் ஆகிய வாசனைப் பண்டங்கள் தோய்ந்த புளகித கொங்கை இளக வடங்கள் புரள மருங்கில் உடை சோர ... புளகாங்கிதம் கொண்ட மார்பகங்கள் குழைந்து அசைய, முத்து மாலைகள் புரள, இடுப்பில் ஆடை நெகிழ, இருள் வளர் கொண்டை சரிய இசைந்து இணை தரு பங்க அநுராகத் திரிதல் ஒழிந்து ... இருள் நிறைந்த (கரிய) கூந்தல் அவிழ்ந்து புரள, மனம் ஒத்து இணைகின்ற குற்றத்துக்கு இடமான காமப் பற்றில் அகப்படும் கெடுதல் நீங்கி, மனது கசிந்து உன் இணை அடி என்று புகழ்வேனோ ... என் மனம் நெகிழ்ந்து உருகி உனது திருவடிகளை என்று நான் புகழ்வேனோ? மருள் கொடு சென்று பரிவுடன் அன்று மலையில் விளைந்த தினை காவல் மயிலை மணந்த அயிலவ எங்கள் வயலியில் வந்த முருகோனே ... மோகத்துடன் சென்று அன்புடன் அன்று, (வள்ளி) மலைக் காட்டில் உள்ள தினைப் புனத்தைக் காவல் செய்த மயில் போன்ற வள்ளியை மணம் புரிந்த வேலவனே, எங்கள் வயலூரில் எழுந்தருளியுள்ள முருகனே, தெருள் உறும் அன்பர் பரவ விளங்கு திரி சிர குன்றில் முதல் நாளில் ... தெளிந்த அறிவை உடைய அன்பர்கள் போற்ற சிறப்புற்று விளங்கும் திரிசிரா மலையில், ஆதி நாள் முதலாக தெரிய இருந்த பெரியவர் தந்த சிறியவ அண்டர் பெருமாளே. ... விளங்க வீற்றிருக்கும் சிவபெருமான் (தாயுமானவர்) அருளிய குழந்தையே, தேவர்களின் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 1.837 pg 1.838 WIKI_urai Song number: 342 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 560 - poruLkavar sindhai (thiruchirAppaLLi) poruLkavar sinthai arivaiyar thangaL puzhukakil santhu ...... panineerthOy puLakitha kongai yiLakava dangaL puraLama rungi ...... ludaisOra iruLvaLar koNdai sariyai sainthu iNaitharu panga ...... anurAkath thirithalo zhinthu manathuka sinthu niNaiyadi yenRu ...... pukazhvEnO maruLkodu senRu parivuda nanRu malaiyilvi Laintha ...... thinaikAval mayilai maNantha ayilava engaL vayaliyil vantha ...... murukOnE theruLuRu manpar parava viLangu thirisira kunRil ...... muthanALil theriya iruntha periyavar thantha siRiyava aNdar ...... perumALE. ......... Meaning ......... poruL kavar sinthai arivaiyar thangaL puzhuku akil santhu pani neer thOy puLakitha kongai iLaka: These whores are keen only on grabbing other people's money; moving their rapturous and softened bosom, smeared with musk, incence, sandal and rose water, vadangaL puraLa marungil udai sOra iruL vaLar koNdai sariya: with their swinging necklaces of pearl, their slackening the loin-cloth around the waist, and their untied dark hair flowing down, isainthu iNai tharu panga anurAkath thirithal ozhinthu: they ensnare me, with willingness of my mind, in a sinful and passionate attachment; saving myself from such devastation, manathu kasinthu un iNai adi enRu pukazhvEnO: when shall I extol Your hallowed feet with a melting heart? maruL kodu senRu parivudan anRu malaiyil viLaintha thinai kAval mayilai maNantha ayilava engaL vayaliyil vantha murukOnE: The other day, You went with extreme passion and love to Mount VaLLimalai and wedded the peacock-like damsel, VaLLi, who stood guard for the millet field, Oh Lord with the spear! You are seated in our favourite town, VayalUr, Oh MurugA! theruL uRum anpar parava viLangu thiri sira kunRil muthal nALil theriya iruntha periyavar thantha siRiyava aNdar perumALE.: This famous Mount ThirisirAmalai is extolled by devotees with a clear mind; He is seated here since time immemorial (as ThAyumAnavar); You are the child of that Lord SivA; and You are the Lord of the celestials, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |