திருப்புகழ் 553 ஒருவரொடு கண்கள்  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 553 oruvarodukaNgaL  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 553 oruvarodukaNgaL - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதனன தந்த தனதனன தந்த
     தனதனன தந்த ...... தனதான

......... பாடல் .........

ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை
     ஒருவரொடு செங்கை ...... யுறவாடி

ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை
     ஒருவரொடி ரண்டு ...... முரையாரை

மருவமிக அன்பு பெருகவுள தென்று
     மனநினையு மிந்த ...... மருள்தீர

வனசமென வண்டு தனதனன வென்று
     மருவுசர ணங்க ...... ளருளாயோ

அரவமெதிர் கண்டு நடுநடுந டுங்க
     அடலிடுப்ர சண்ட ...... மயில்வீரா

அமரர்முத லன்பர் முநிவர்கள்வ ணங்கி
     அடிதொழவி ளங்கு ...... வயலூரா

திருவையொரு பங்கர் கமலமலர் வந்த
     திசைமுகன்ம கிழ்ந்த ...... பெருமானார்

திகுதகுதி யென்று நடமிட முழங்கு
     த்ரிசிரகிரி வந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஒருவரொடு கண்கள் ஒருவரொடு கொங்கை ஒருவரொடு
செம் கை உறவாடி
... ஒருவரோடு கண்களைக் கொண்டும்,
ஒருவரோடு மார்பகங்களாலும், ஒருவரோடு கைகளைக் கொண்டும்
உறவாடி,

ஒருவரொடு சிந்தை ஒருவரொடு நிந்தை ஒருவரொடு
இரண்டும் உரையாரை
... ஒருவரை மனத்தில் வைத்து விரும்பியும்,
ஒருவரை இகழ்ந்து பேசி வெறுத்தும், ஒருவரோடு விருப்பு, வெறுப்பு
இரண்டும் காட்டாமல் மெளனம் சாதித்தும் இருக்கின்ற விலைமாதரை

மருவ மிக அன்பு பெருக உளது என்று மனம் நினையும் இந்த
மருள் தீர
... அணைவதற்கு மிக்க காதல் பெருக உள்ளது என்று
மனத்தில் நினைக்கின்ற இத்தகைய மோக மயக்கம் நீங்க,

வனசம் என வண்டு தனதனன என்று மருவு சரணங்கள்
அருளாயோ
... தாமரை என்று நினைத்து வண்டுகள் தனதனன என்ற
ஒலியுடன் சுற்றி வருகின்ற உன்னுடைய திருவடிகளை அருளமாட்டாயா?

அரவம் எதிர் கண்டு நடு நடு நடுங்க அடல் இடு ப்ரசண்ட
மயில் வீரா
... பாம்பு தன்னை எதிரில் கண்டதும் மிகவும்
நடுநடுங்கும்படி தனது வலிமையைக் காட்டும் கடுமை வாய்ந்த மயில்மீது
ஏறும் வீரனே,

அமரர் முதல் அன்பர் முநிவர்கள் வணங்கி அடி தொழ
விளங்கு வயலூரா
... தேவர்கள் முதல் அடியார்களும், முனிவர்களும்
உன்னை வணங்கி உனது திருவடியைத் தொழ விளங்குகின்ற வயலூரில்
வாழ்பவனே,

திருவை ஒரு பங்கர் கமல மலர் வந்த திசை முகன் மகிழ்ந்த
பெருமானார்
... லக்ஷ்மியை ஒரு பாகத்தில் உடைய திருமாலும், தாமரை
மலரில் வீற்றிருக்கும் நான்முகன் பிரமனும் மகிழும்படியாக சிவபெருமான்

திகுதகுதி என்று நடமிட முழங்கு த்ரி சிர கிரி வந்த
பெருமாளே.
... திகுதகுதி என்று நடனமிட, முழவு வாத்தியங்கள்
முழங்குகின்ற திரிசிராப்பள்ளியில் எழுந்தருளிய பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.821  pg 1.822 
 WIKI_urai Song number: 335 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 553 - oruvarodu kaNgaL (thiruchirAppaLLi)

oruvarodu kaNgaL oruvarodu kongai
     oruvarodu sengai ...... yuRavAdi

oruvarodu sinthai oruvarodu ninthai
     oruvarodi raNdu ...... muraiyArai

maruvamika anpu perukavuLa thenRu
     mananinaiyu mintha ...... maruLtheera

vanasamena vaNdu thanathanana venRu
     maruvusara Nanga ...... LaruLAyO

aravamethir kaNdu nadunaduna dunga
     adalidupra saNda ...... mayilveerA

amararmutha lanpar munivarkaLva Nangi
     adithozhavi Langu ...... vayalUrA

thiruvaiyoru pangar kamalamalar vantha
     thisaimukanma kizhntha ...... perumAnAr

thikuthakuthi yenRu nadamida muzhangu
     thrisirakiri vantha ...... perumALE.

......... Meaning .........

oruvarodu kaNgaL oruvarodu kongai oruvarodu sem kai uRavAdi: They flirt with some with their eyes, with some with their bosom and with some with their hands;

oruvarodu sinthai oruvarodu ninthai oruvarodu iraNdum uraiyArai: they feign love with some and betray abhorrence with others while to some they say nothing, displaying neither liking nor hatred;

maruva mika anpu peruka uLathu enRu manam ninaiyum intha maruL theera: my mind is lustfully mulling about hugging these whores; to end this delusory thinking,

vanasam ena vaNdu thanathanana enRu maruvu saraNangaL aruLAyO: will You not kindly grant me Your hallowed feet around which the beetles constantly hum to the tune of "thanathanana", believing those to be lotus flowers?

aravam ethir kaNdu nadu nadu nadunga adal idu prasaNda mayil veerA: You valorously mount Your powerful vehicle, the Peacock, at the very sight of which serpents are scared away!

amarar muthal anpar munivarkaL vaNangi adi thozha viLangu vayalUrA: You belong to VayalUr where the celestials, Your devotees and the sages come to prostrate at Your feet!

thiruvai oru pangar kamala malar vantha thisai mukan makizhntha perumAnAr: He is Lord SivA who elates Lord VishNu, concorporate with Goddess Lakshmi, and the four-faced Lord BrahmA, seated on a lotus, as

thikuthakuthi enRu nadamida muzhangu thri sira kiri vantha perumALE.: He dances in ThirisirAppaLLi, against the background of drums beaten to the meter of "thikuthakuthi"; and You have Your abode there, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 553 oruvarodu kaNgaL - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]