திருப்புகழ் 552 பகலவன் ஒக்கும்  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 552 pagalavanokkum  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 552 pagalavanokkum - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தம் தனதன தத்தம்
     தனதன தத்தம் ...... தனதான

......... பாடல் .........

பகலவ னொக்குங் கனவிய ரத்னம்
     பவளவெண் முத்தந் ...... திரமாகப்

பயிலமு லைக்குன் றுடையவர் சுற்றம்
     பரிவென வைக்கும் ...... பணவாசை

அகமகிழ் துட்டன் பகிடிம ருட்கொண்
     டழியும வத்தன் ...... குணவீனன்

அறிவிலி சற்றும் பொறையிலி பெற்றுண்
     டலைதலொ ழித்தென் ...... றருள்வாயே

சகலரு மெச்சும் பரிமள பத்மந்
     தருணப தத்திண் ...... சுரலோகத்

தலைவர்ம கட்குங் குறவர்ம கட்குந்
     தழுவஅ ணைக்குந் ...... திருமார்பா

செகதல மெச்சும் புகழ்வய லிக்குந்
     திகுதிகெ னெப்பொங் ...... கியவோசை

திமிலைத விற்றுந் துமிகள்மு ழக்குஞ்
     சிரகிரி யிற்கும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பகலவன் ஒக்கும் கனவிய ரத்னம் பவள வெண் முத்தம்
திரமாகப் பயில
... சூரியனைப் போன்று ஒளி வீசும் பெருமை வாய்ந்த
ரத்தினம், பவளம் வெண்முத்து மாலைகள் நன்றாக நெருங்கி விளங்க

முலைக் குன்று உடையவர் சுற்றம் பரிவு என வைக்கும் பண
ஆசை அகம் மகிழ் துட்டன்
... மலை போன்ற மார்பகங்களை
உடைய விலைமாதர்களின் கூட்டமே அன்புக்கு இடம் என வைக்கின்ற
பண ஆசையில் உள்ளம் மகிழ்கின்ற துஷ்டன் நான்.

பகிடி மருள் கொண்டு அழியும் அவத்தன் குண வீனன்
அறிவிலி சற்றும் பொறை இலி
... வெளி வேஷக்காரன். மோக
மயக்கம் கொண்டு அழிகின்ற வீணன். இழி குணத்தோன். மூடன்.
கொஞ்சமும் பொறுமை இல்லாதவன்.

பெற்று உண்டு அலைதல் ஒழித்து என்று அருள்வாயே ...
பொருள் தேடிப் பெற்றும், உண்டும் அவ்வாறு நான் அலைதலை
ஒழித்து எப்போது அருள்வாய்?

சகலரும் மெச்சும் பரிமள பத்மம் தருண பதத் திண் சுர
லோகத் தலைவர் மகட்கும் குறவர் மகட்கும் தழுவ
அணைக்கும் திரு மார்பா
... யாவரும் மெச்சும், நறு மணம் வீசும்,
தாமரை போன்ற இளமை வாய்ந்த திருவடிகளை உடையவனே,
திண்ணிய தேவலோகத் தலைவரான இந்திரனுடைய மகள்
தேவயானைக்கும் வேடர்கள் பெண்ணாகிய வள்ளிக்கும் தழுவ
அணைக்கின்ற அழகிய மார்பை உடையவனே,

செக தலம் மெச்சும் புகழ் வயலிக்கும் ... பூவுலகம் போற்றுகின்ற
புகழ் பெற்ற வயலூரிலும்,

திகுதிகு எனப் பொங்கிய ஓசை திமிலை தவில் துந்துமிகள்
முழக்கும் சிரகிரியிற்கும் பெருமாளே.
... திகுதிகு என்று பொங்கி
எழும் ஒலி கொண்ட திமிலை, தவில், துந்துபிகளாகிய வாத்தியங்கள்
முழங்கும் திரிசிரா மலையிலும் விளங்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.819  pg 1.820 
 WIKI_urai Song number: 334 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 552 - pakalavanokkum (thiruchirApaLLi)

pakalava nokkung kanaviya rathnam
     pavaLaveN muththan ...... thiramAkap

payilamu laikkun Rudaiyavar sutRam
     parivena vaikkum ...... paNavAsai

akamakizh thuttan pakidima rutkoN
     dazhiyuma vaththan ...... kuNaveenan

aRivili satRum poRaiyili petRuN
     dalaithalo zhiththen ...... RaruLvAyE

sakalaru mecchum parimaLa pathman
     tharuNapa thaththiN ...... suralOkath

thalaivarma katkung kuRavarma katkun
     thazhuvaa Naikkun ...... thirumArpA

sekathala mecchum pukazhvaya likkun
     thikuthike neppong ...... kiyavOsai

thimilaitha vitRun thumikaLmu zhakkum
     sirakiri yiRkum ...... perumALE.

......... Meaning .........

pakalavan okkum kanaviya rathnam pavaLa veN muththam thiramAkap payila: The closely laid necklaces made of rubies radiating like the sun, corals and white pearls dazzle

mulaik kunRu udaiyavar sutRam parivu ena vaikkum paNa Asai akam makizh thuttan: on the mountain-like bosom of the whores; even the feigned concern and love shown by the bunch of avaricious whores makes me happy; I am such a wicked person;

pakidi maruL koNdu azhiyum avaththan kuNa veenan aRivili satRum poRai ili: I merely display an outward showmanship; I am a total waste in the path of destruction due to excessive passion; I am dishonorable and foolish; I do not have even an iota of patience;

petRu uNdu alaithal ozhiththu enRu aruLvAyE: I wander in search of money and gobble it up; when will You put an end to my roaming about like this and bless me?

sakalarum mecchum parimaLa pathmam tharuNa pathath thiN sura lOkath thalaivar makatkum kuRavar makatkum thazhuva aNaikkum thiru mArpA: You have fragrant, lotus-like, youthful and hallowed feet that are adored by all, Oh Lord! You have a broad chest that hugs DEvayAnai, the daughter of IndrA, Leader of the strong celestial land, and VaLLi, the damsel of the hunters, Oh Lord!

seka thalam mecchum pukazh vayalikkum thikuthiku enap pongiya Osai thimilai thavil thunthumikaL muzhakkum sirakiriyiRkum perumALE.: You reside in VayalUr, a famous town praised by the entire world; and You are also seated in ThirisirAmalai (TiruchchirApaLLi), where the percussion instruments like thimilai, thavil and thunthubi are beaten loudly causing a rising sound of "thikuthiku", Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 552 pagalavan okkum - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]