திருப்புகழ் 554 குமுத வாய்க்கனி  (திருசிராப்பள்ளி)
Thiruppugazh 554 kumudhavAikkani  (thiruchirAppaLLi)
Thiruppugazh - 554 kumudhavAikkani - thiruchirAppaLLiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தாத்தன தனன தாத்தன
     தானா தானா தானா தானா ...... தனதான

......... பாடல் .........

குமுத வாய்க்கனி யமுத வாக்கினர்
     கோலே வேலே சேலே போலே ...... அழகான

குழைகள் தாக்கிய விழிக ளாற்களி
     கூரா வீறா தீரா மாலா ...... யவரோடே

உமது தோட்களி லெமது வேட்கையை
     ஓரீர் பாரீர் வாரீர் சேரீர் ...... எனவேநின்

றுடைதொ டாப்பண மிடைபொ றாத்தன
     மூடே வீழ்வே னீடே றாதே ...... யுழல்வேனோ

தமர வாக்கிய அமரர் வாழ்த்திய
     தாதா வேமா ஞாதா வேதோ ...... கையிலேறீ

சயில நாட்டிறை வயலி நாட்டிறை
     சாவா மூவா மேவா நீவா ...... இளையோனே

திமிர ராக்கதர் சமர வேற்கர
     தீரா வீரா நேரா தோரா ...... உமைபாலா

திரிசி ராப்பளி மலையின் மேற்றிகழ்
     தேவே கோவே வேளே வானோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

குமுத வாய்க் கனி அமுத வாக்கினர் கோலே வேலே சேலே
போலே அழகான குழைகள் தாக்கிய விழிகளால்
... குமுத மலர்
போன்ற வாயினின்றும், பழம் போலவும் அமுதம் போலவும் (இனிமை
தரும்) பேச்சுக்களை உடையவர்கள். அம்பு, வேல், சேல் மீன்
இவற்றைப் போல அழகான, குண்டலங்கள் தாக்குகின்ற, கண்களால்,

களி கூரா வீறாது ஈரா மாலாய் அவரோடே உமது
தோள்களில் எமது வேட்கையை ஓரீர் பாரீர் வாரீர் சேரீர்
எனவே நின்று
... நான் மகிழ்ச்சி மிகுந்து பெருமையுடன், முடிவு
இல்லாத மோகத்துடன் அந்தப் பொது மகளிரோடு உம்முடைய
தோள்களில் எமக்கு உள்ள ஆசையை நீர் அறிய மாட்டீரோ, என்னைப்
பார்க்க மாட்டீரோ, எம்மிடம் வரமாட்டீரோ, எம்மோடு சேர மாட்டீரோ
என்றெல்லாம் கூறி நின்று,

உடை தொடாப் பணம் இடை பொறாத் தனம் ஊடே
வீழ்வேன் ஈடேறாதே உழல்வேனோ
... (அவர்களுடைய)
ஆடையைத் தொட்டும், அவர்களுடைய பெண்குறி இடத்தும், இடை
தாங்க முடியாத கனமுடைய மார்பகங்களின் இடத்தும் விழுகின்ற
நான், ஈடேறும் வழியைக் காணாமல் இவ்வாறு திரிவேனோ?

தமர வாக்கிய அமரர் வாழ்த்திய தாதாவே மா ஞாதாவே
தோகையில் ஏறி
... ஒலி செய்யும் (துதிச்) சொற்களுடனே தேவர்கள்
வாழ்த்துகின்ற பெரிய வள்ளலே, சிறந்த ஞானவானே, தோகை உடைய
மயில் வாகனனே,

சயில நாட்டு இறை வயலி நாட்டு இறை சாவா மூவா மேவா
நீ வா இளையோனே
... மலை நாட்டுக்குத் தலைவனே, வயலூர்
நாட்டுக்குத் தலைவனே, இறப்பும் மூப்பும் இல்லாதவனே, அருள நீ
வருக இளைய தேவனே,

திமிர ராக்கதர் சமர வேல் கர தீரா வீரா நேரா தோரா உமை
பாலா
... இருள் போல் கரிய அசுரர்களுடன் போர் செய்ய வல்ல
வேலாயுதம் ஏந்திய கையனே, தீரனே, வீரனே, நேர்மை உள்ளவனே,
தோல்வி இல்லாதவனே, உமா தேவியின் குழந்தையே,

திரிசிராப்ப(ள்)ளி மலையின் மேல் திகழ் தேவே கோவே
வேளே வானோர் பெருமாளே.
... திரிசிராப்பள்ளி மலையின் மேல்
விளங்கும் தேவனே, அரசே, முருகவேளே, தேவர்கள் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.823  pg 1.824 
 WIKI_urai Song number: 336 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Kumaravayaloor Thiru T. Balachandhar
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர்

Thiru T. Balachandhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 554 - kumudha vAikkani (thiruchirAppaLLi)

kumutha vAykkani yamutha vAkkinar
     kOlE vElE sElE pOlE ...... azhakAna

kuzhaikaL thAkkiya vizhika LARkaLi
     kUrA veeRA theerA mAlA ...... yavarOdE

umathu thOtkaLi lemathu vEtkaiyai
     Oreer pAreer vAreer sEreer ...... enavEnin

Rudaitho dAppaNa midaipo RAththana
     mUdE veezhvE needE RAthE ...... yuzhalvEnO

thamara vAkkiya amarar vAzhththiya
     thAthA vEmA njAthA vEthO ...... kaiyilERee

sayila nAttiRai vayali nAttiRai
     sAvA mUvA mEvA neevA ...... iLaiyOnE

thimira rAkkathar samara vERkara
     theerA veerA nErA thOrA ...... umaipAlA

thirisi rAppaLi malaiyin mEtRikazh
     thEvE kOvE vELE vAnOr ...... perumALE.

......... Meaning .........

kumutha vAyk kani amutha vAkkinar kOlE vElE sElE pOlE azhakAna kuzhaikaL thAkkiya vizhikaLAl: Their speech emanating from their lily-like mouth is sweet like the fruit and nectar. Being struck by their beautiful eyes that look like the arrow, the spear and the sEl fish, which eyes attack their swinging ear-studs,

kaLi kUrA veeRAthu eerA mAlAy avarOdE umathu thOLkaLil emathu vEtkaiyai Oreer pAreer vAreer sEreer enavE ninRu: I was overwhelmed with pride; I asked those whores with utmost passion "Do you not know how much I yearn for your shoulders? Would you not look at me? Would you not come to me and unite with me?"

udai thodAp paNam idai poRAth thanam UdE veezhvEn eedERAthE uzhalvEnO: Touching their outfit, I fell head over heels for their genitals and breasts that were too heavy for their waist to bear; why am I roaming about aimlessly without knowing the way to my salvation?

thamara vAkkiya amarar vAzhththiya thAthAvE mA njAthAvE thOkaiyil ERi: Oh Great Benefactor praised by the celestials singing hymns comprising resonating words! Oh Great Scholar with spiritual wisdom! You mount the peacock with beautiful plumes!

sayila nAttu iRai vayali nAttu iRai sAvA mUvA mEvA nee vA iLaiyOnE: You are the leader of all mountainous regions! You rule the land of VayalUr! You are beyond death or aging, Oh Young Lord; kindly come to bless us!

thimira rAkkathar samara vEl kara theerA veerA nErA thOrA umai pAlA: You hold in Your hand the mighty spear that is capable of fighting with the demons, black as darkness! Oh Courageous and Valorous One! Oh Righteous One, You have never experienced defeat! You are the child of UmAdEvi!

thirisirAppa(L)Li malaiyin mEl thikazh thEvE kOvE vELE vAnOr perumALE.: You are the Lord seated on top of the mountain in ThirisirAppaLLi, Oh King, Oh Lord MurugA! You are the Lord of the celestials, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 554 kumudha vAikkani - thiruchirAppaLLi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]