(இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு எனது முக்கியக் குறிப்பைப் படியுங்கள் - நன்றி).
(Please read my important note before using this website - Thank You).
திருப்புகழ் 540 வரைவில் பொய்  (வள்ளிமலை)
Thiruppugazh 540 varaivilpoi  (vaLLimalai)
Thiruppugazh - 540 varaivilpoi - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

 
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தந்தன தந்த தந்தன
     தனதன தந்தன தந்த தந்தன
          தனதன தந்தன தந்த தந்தன ...... தனதான

......... பாடல் .........

வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
     விழியையு கந்துமு கந்து கொண்டடி
          வருடிநி தம்பம ளைந்து தெந்தென ...... அளிகாடை

மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பல
     குரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிற
          மடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல் ...... மெழுகாகி

உருகியு கந்திதழ் தின்று மென்றுகை
     யடியின கங்கள்வ ரைந்து குங்கும
          உபயத னங்கள்த தும்ப அன்புட ...... னணையாமஞ்

சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழ
     அமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிட
          உணர்வழி யின்பம றந்து நின்றனை ...... நினைவேனோ

விரவி நெருங்குகு ரங்கி னங்கொடு
     மொகுமொகெ னுங்கட லுங்க டந்துறு
          விசைகொடி லங்கைபு குந்த ருந்தவர் ...... களிகூர

வெயில்நில வும்பரு மிம்ப ரும்படி
     ஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணை
          விறல்நிரு தன்தலை சிந்தி னன்திரு ...... மருகோனே

அருகர்க ணங்கள்பி ணங்கி டும்படி
     மதுரையில் வெண்பொடி யும்ப ரந்திட
          அரகர சங்கர வென்று வென்றருள் ...... புகழ்வேலா

அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலை
     வயல்கள்பொ ருந்திய சந்த வண்கரை
          யரிவைவி லங்கலில் வந்து கந்தருள் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வரைவில் பொய் மங்கையர் தங்கள் அஞ்சன விழியை உகந்து
முகந்து கொண்டு அடி வருடி நிதம்பம் அளைந்து
... (பொருள்
கொடுப்பின் வேண்டியவர், வேண்டாதோர் என்னும்) அளவு இல்லாமல்
அன்பு காட்டும் பொய்யே பேசும் பொது மகளிர்களுடைய மை தீட்டிய
கண்களில் மகிழ்ந்தும், அந்த இன்பத்தைப் பருகியும், அவர்களுடைய
காலைப் பிடித்துத் தடவியும், புணர்ச்சி இன்பத்தை அனுபவித்தும்,

தெந்தென அளிகாடை மயில் குயில் அன்றில் எனும்
பு(ள்)ளின் பல குரல் செய்து இருந்து பின் உந்தி என்கிற
மடுவில் விழுந்து கிடந்து செம் தழல் மெழுகாகி
... இவ்வாறு
வண்டு, காடை, மயில், குயில், அன்றில் என்னும் பறவைகளின் பல
ஒலிகளை எழுப்பி, பின்னர் கொப்பூழ் என்னும் மடுவில் விழுந்தும்
கிடந்தும், நெருப்பில் இடப்பட்ட மெழுகு போல் ஆகி,

உருகி உகந்து இதழ் தின்று மென்று கையடியில் நகங்கள்
வரைந்து குங்கும உபய தனங்கள் ததும்ப அன்புடன்
அணையா
... உருகிக் களித்து அதர பானம் செய்தும், தின்றும், மென்று
உண்டும், கையடியிலுள்ள நகங்களால் குறி இட்டும், குங்குமம் உள்ள
இரண்டு மார்பகங்களும் அசைய அன்புடன் தழுவி,

மஞ்சு உலவிய கொண்டை குலைந்து அலைந்து எழ
அமளியில் மின் சொல் மருங்குல் இலங்கிட உணர்வு அழி
இன்பம் மறந்து நின் தனை நினைவேனோ
... அழகு விளங்கும்
கூந்தல் அவிழ்ந்து அலைச்சல் உற, படுக்கையில் மின்னல் என்று
சொல்லத் தக்க இடை விளக்கம் தர, நல்லறிவை அழிக்கும் அந்த
இன்பத்தை மறந்து உன்னை நினைக்க மாட்டேனோ?

விரவி நெருங்கு குரங்கு இனம் கொடு மொகுமொகு எனும்
கடலும் கடந்து உறு விசை கொடு இலங்கை புகுந்து
...
தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன்
சென்று, மொகுமொகு என்று ஒலிக்கும் கடலையும் கடந்து சென்று,
பொருந்திய வேகத்துடன் இலங்கையில் புகுந்து,

அரும் தவர் களி கூர வெயில் நிலவு உம்பரும் இம்பரும் படி
ஜெயஜெய என்று விடும் கொடும் கணை விறல் நிருதன் தலை
சிந்தினன் திரு மருகோனே
... தவப் பெரியோர்கள் மகிழ்ச்சி மிகக்
கொள்ள, சூரியன், சந்திரன் முதலான தேவர்களும் இவ்வுலகோரும்
பூமியில் ஜெய ஜெய என்று மகிழ்ந்து ஒலி செய்ய, செலுத்திய கொடிய
அம்பால் வீரமுள்ள அசுரனாகிய ராவணனின் தலையை அறுத்துத்
தள்ளிய ராமனாகிய திருமாலின் மருகனே,

அருகர் கணங்கள் பிணங்கிடும்படி மதுரையில் வெண்
பொடியும் பரந்திட அரகர சங்கர என்று வென்று அருள் புகழ்
வேலா
... சமணர்களின் கூட்டங்கள் கலங்கி நிற்க, மதுரை நகரில்
திருநீறு பரவ, ஹர, ஹர சங்கரா என்று போற்றப்பெற வெற்றி அடைந்து
அருளிய புகழ் கொண்ட (திருஞான சம்பந்தராக வந்த) வேலனே,

அறம் வளர் சுந்தரி மைந்த தண்டலை வயல்கள் பொருந்திய
சந்த வண் கரை அரிவை விலங்கலில் வந்து உகந்து அருள்
பெருமாளே.
... (காமாட்சியாக வந்து முப்பத்திரண்டு*) அறங்களைக்
கச்சியில் வளர்த்த அழகியாகிய பார்வதியின் மகனே, குளிர்ந்த
சோலைகளும் வயல்களும் பொருந்திய, அழகிய வளப்பமுள்ள
நீர்க்கரைகளும் உள்ள, வள்ளி மலையில்** வந்து மகிழ்ச்சியுடன்
வீற்றிருக்கும் பெருமாளே.


* பெரிய புராணத்தில் கூறிய முப்பத்திரண்டு அறங்கள் பின்வருமாறு:

சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு,
பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு
உணவு, மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல்,
அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல்,
நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி
அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய்,
ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,
தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு
உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.


** வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.781  pg 1.782  pg 1.783  pg 1.784 
 WIKI_urai Song number: 323 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song

YouTube  'YouTube' Links for this song  
  இப்பாடலுக்கான யூ ட்யூப் பதிவுகள்  

to come வரவிருக்கின்றது

 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 


Song 540 - varaivil poi (vaLLimalai)

varaivilpoi mangaiyar thanga Lanjana
     vizhiyaiyu kanthumu kanthu koNdadi
          varudini thampama Lainthu thenthena ...... aLikAdai

mayilkuyi lanRile numpu Linpala
     kuralseythi runthupi nunthi yenkiRa
          maduvilvi zhunthuki danthu senthazhal ...... mezhukAki

urukiyu kanthithazh thinRu menRukai
     yadiyina kangaLva rainthu kunguma
          upayatha nangaLtha thumpa anpuda ...... naNaiyAmanj

chulaviya koNdaiku laintha lainthezha
     amaLiyil minsolma rungi langida
          uNarvazhi yinpama Ranthu ninRanai ...... ninaivEnO

viravi nerunguku rangi nangodu
     mokumoke nungada lumka danthuRu
          visaikodi langaipu kuntha runthavar ...... kaLikUra

veyilnila vumparu mimpa rumpadi
     jeyajeya venRuvi dumko dumkaNai
          viRalniru thanthalai sinthi nanthiru ...... marukOnE

arukarka NangaLpi Nangi dumpadi
     mathuraiyil veNpodi yumpa ranthida
          arakara sankara venRu venRaruL ...... pukazhvElA

aRamvaLar sunthari maintha thaNdalai
     vayalkaLpo runthiya santha vaNkarai
          yarivaivi langalil vanthu kantharuL ...... perumALE.

......... Meaning .........

varaivil poi mangaiyar thangaL anjana vizhiyai ukanthu mukanthu koNdu adi varudi nithampam aLainthu: They display their love indiscriminately on all men (provided their suitors shower wealth upon them); they are compulsive liars; being enamoured of the painted eyes of these whores, taking in the pleasure offered by those eyes, caressing their feet and indulging in coitus with them,

thenthena aLikAdai mayil kuyil anRil enum pu(L)Lin pala kural seythu irunthu pin unthi enkiRa maduvil vizhunthu kidanthu sem thazhal mezhukAki: making the sounds of several birds like beetle, partridge, cuckoo, peacock and swan, and later immersing myself in the pond surrounding their navel, I became like wax placed in fire;

uruki ukanthu ithazh thinRu menRu kaiyadiyil nakangaL varainthu kunguma upaya thanangaL thathumpa anpudan aNaiyA: melting in ecstacy, I sucked their juicy lips, biting and gobbling them up, and made marks with my finger-nails while hugging passionately their two swaying breasts smeared with vermillion;

manju ulaviya koNdai kulainthu alainthu ezha amaLiyil min sol marungul ilangida uNarvu azhi inpam maRanthu nin thanai ninaivEnO: the beautiful locks of their hair loosening and unfurling and the lightning-like waist-line flashing on the bed, why am I unable to forget my indulgence in that carnal pleasure which destroys good sense and think about You, Oh Lord!

viravi nerungu kurangu inam kodu mokumoku enum kadalum kadanthu uRu visai kodu ilangai pukunthu: With the multitude of monkeys accompanying Him closely, He crossed the roaring seas and reached LankA very swiftly;

arum thavar kaLi kUra veyil nilavu umparum imparum padi jeyajeya enRu vidum kodum kaNai viRal niruthan thalai sinthinan thiru marukOnE: to the delight of the great sages and the loud ovation of "Jeya jeya (Victory! Victory!)" by all celestials including the Sun and the Moon and all terrestrials, He wielded the fierce arrow and severed the head of the mighty demon RAvaNan; You are the nephew of that RAmA (Lord VishNu), Oh Lord!

arukar kaNangaL piNangidumpadi mathuraiyil veN podiyum paranthida arakara sangara enRu venRu aruL pukazh vElA: Leaving the crowd of SamaNAs bewildered, You spread the holy ash throughout the city of Madhurai as Your devotees praised Your success chanting "Hara Hara SankarA" when You graciously came as the famous Saivite (ThirugnAna Sambandhar), Oh Lord with the spear!

aRam vaLar sunthari maintha thaNdalai vayalkaL porunthiya santha vaN karai arivai vilangalil vanthu ukanthu aruL perumALE.: You are the Son of beautiful PArvathi, who (as Goddess KAmAkshi) upheld (thirty-two*) charitable acts in KAnchipuram! You are seated with relish in this mountain VaLLimalai** that is surrounded by cool groves and paddy-fields and has fertile river-banks, Oh Great One!


* Thirty-two religious duties are listed in Periya PurANam as follows:

Road-laying; Food for teachers; Food for all the six kinds of religious people; Feeding the cows; Feeding the prisoners; Alms; Distribution of eatables; Feeding the orphans; Obstetrics; Orphanage; Feeding milk to babies; Cremation of destitute corpses; Clothing the orphans; Whitewashing old houses; Offering medicines; Washing others' clothes; Barber's work; Providing glasses for visually-impaired; Piercing ears and providing studs; Eyedrops for medication; Providing hair oil and hair cream; Fomentation for relief; Protecting others from perils; Free distribution of potable water; Provision of free accommodation; Provision of bathing facility; Rearing shady groves; Providing sandals and shoes; Feeding animals; Ploughing the field; Providing security guard; and Conducting marriages.


** VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam. This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
 

Thiru Arunagirinathar's Thiruppugazh - 540 varaivil poi - vaLLimalai


   Kaumaram.com சமீபத்தில் DDOS தாக்குதலால் பாதிக்கப்பட்டது.
எனவே, படங்கள் மற்றும் ஆடியோ தற்காலிகமாக கிடைக்காது.
நான் இதை படிப்படியாக சரிசெய்ய முயற்சிக்கிறேன்.
உங்கள் பொறுமைக்கும் புரிந்துணர்வுக்கும் நன்றி. ... வலைத்தள நிர்வாகி.  



  Kaumaram.com was recently affected by DDOS attack.
As such, images and audio will be temporarily unavailable.
I am trying to correct this progressively.
Thank you for your patience and understanding. ... webmaster.  


... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 


Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

PLEASE do not ask me for songs about other deities or for BOOKS - This is NOT a bookshop - sorry.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

© Copyright Kaumaram dot com - 2001-2040

COMMERCIAL USE OF MATERIAL IN THIS WEBSITE IS NOT PERMITTED.

Please contact me (the webmaster), if you wish to place a link in your website.

email: kaumaram@gmail.com

Disclaimer:

Although necessary efforts have been taken by me (the webmaster),
to keep the items in www.kaumaram.com safe from viruses etc.,
I am NOT responsible for any damage caused by use of
and/or downloading of any item from this website or from linked external sites.
Please use updated ANTI-VIRUS program to rescan all downloaded items
from the internet for maximum safety and security.

 மேலே   top