திருப்புகழ் 539 சிரம் அங்கம் அம் கை  (வள்ளிமலை)
Thiruppugazh 539 siramangkamamkai  (vaLLimalai)
Thiruppugazh - 539 siramangkamamkai - vaLLimalaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்
     தனதந்த தந்தனம் ...... தனதான

......... பாடல் .........

சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்
     சலமென்பு திண்பொருந் ...... திடுமாயம்

சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்
     தழலிண்கண் வெந்துசிந் ...... திடஆவி

விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்
     துயர்கொண்ட லைந்துலைந் ...... தழியாமுன்

வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்
     வினவென்று அன்புதந் ...... தருள்வாயே

அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்
     டமரஞ்ச மண்டிவந் ...... திடுசூரன்

அகலம்பி ளந்தணைந் தகிலம்ப ரந்திரங்
     கிடஅன்று டன்றுகொன் ...... றிடும்வேலா

மரைவெங்க யம்பொருந் திடவண்டி னங்குவிந்
     திசையொன்ற மந்திசந் ...... துடனாடும்

வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்
     வரநின்று கும்பிடும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சிரம் அங்கம் அம் கை கண் செவி வஞ்ச நெஞ்சு செம்சலம்
என்பு திண் பொருந்திடு மாயம்
... தலை என்னும் உறுப்பு, அழகிய
கை, கண், காது, வஞ்சகத்துக்கு இடமான மனம், இரத்தம், எலும்பு இவை
நன்றாகப் பொருந்தியுள்ள மாயமான இந்த உடல்

சில துன்பம் இன்பம் ஒன்றி இற வந்து பின்பு ... சில துயரங்களும்
இன்பங்களும் பொருந்தி, இறப்பு வந்து சேர்ந்த பின்னர்,

செம் தழலின் கண் வெந்து சிந்திட ஆவி ... சிவந்த நெருப்பில்
வெந்து உயிர் பிரிதல் உறும்படி,

விரைவின் கண் அந்தகன் பொர வந்தது என்று வெம் துயர்
கொண்டு அலைந்து அழியா முன்
... சீக்கிரத்தில் நமன் போரிட
வந்து விட்டான் என்று மிக்க துயரமுற்று நிலை குலைந்து அழிவதற்கு
முன்பு

வினை ஒன்றும் இன்றி நன்று இயல் ஒன்றி ... தீவினை யாவும்
தொலைந்து நல்ல வினைகளே சேர,

நின் பதம் வினவ என்று அன்பு தந்து அருள்வாயே ... உனது
திருவடியை ஆய்ந்தறிய வேண்டும் என்கின்ற அன்பை எனக்குத் தந்து
அருள் புரிவாயாக.

அரவின் கண் முன் துயின்று அருள் கொண்டல்
அண்டர்கண்டு அமர் அஞ்ச
... (ஆதிசேஷனாகிய) பாம்பின் மேல்
முன்பு அறி துயில் கொண்டு (உயிர்களை) அருள் பாலிக்கும் மேக
நிறத்தினனாகிய திருமாலும் தேவர்களும் பார்த்து போருக்கு அஞ்சும்படி,

மண்டி வந்திடு சூரன் அகலம் பிளந்து அணைந்து அகிலம்
பரந்து இரங்கிட
... நெருங்கி வந்த சூரனுடைய அகன்ற மார்பைப்
பிளந்து, பொருந்திய உலகில் (எல்லா இடங்களிலும் அவன் விழும் ஒலி)
பரந்து ஒலிக்க,

அன்று உடன்று கொன்றிடும் வேலா ... அன்று கோபித்து
(அவனைக்) கொன்ற வேலனே,

மரை வெம் கயம் பொருந்திட வண்டு இனம் குவிந்து இசை
ஒன்ற
... தாமரை மலர்கள் அழகிய குளங்களில் மலர்ந்து விளங்கிட,
வண்டின் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து இசை ஒலிக்க,

மந்தி சந்துடன் ஆடும் வரையின் கண் வந்து வண் குற
மங்கை
... குரங்குகள் சந்தன மரங்களில் விளையாடும் (வள்ளி)
மலைக்கு* வந்து, வளப்பமுள்ள குறப்பெண்ணாகிய வள்ளியின்

பங்கயம் வர நின்று கும்பிடும் பெருமாளே. ... பாதத் தாமரை
வரக் கண்டு நின்று, (அவளைக்) கும்பிட்ட பெருமாளே.


* வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில் ராயவேலூருக்கு 12 மைல் தென்கிழக்கில்,
திருவல்லத்துக்கு வடக்கே உள்ளது. வள்ளி தேவியர் அவதரித்த தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 1.779  pg 1.780  pg 1.781  pg 1.782 
 WIKI_urai Song number: 322 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 539 - siram angkam am kai (vaLLimalai)

siramangka mangkaikaN sevivanja nenjusem
     calamenpu thiNporun ...... thidumAyam

silathunpa minpamon RiRavanthu pinpusen
     thazhaliNkaN venthusin ...... thidaAvi

viraivinka Nanthakan poravantha thenRuven
     thuyarkoNda lainthulain ...... thazhiyAmun

vinaiyonRu minRinan RiyalonRi ninpatham
     vinavenRu anputhan ...... tharuLvAyE

aravinkaN munthuyin RaruLkoNda laNdarkaN
     damaranja maNdivan ...... thiducUran

akalampi LanthaNain thakilampa ranthirang
     kida anRu danRukon ...... RidumvElA

maraivenga yamporun thidavaNdi nanguvin
     thisaiyonRa manthisan ...... thudanAdum

varaiyinkaN vanthuvaN kuRamangai pangayam
     varaninRu kumpidum ...... perumALE.

......... Meaning .........

siram angam am kai kaN sevi vanja nenju semcalam enpu thiN porunthidu mAyam: This mysterious body consists of a head, beautiful hands, eyes, ears, a mind which is the seat of treacherous thoughts, blood and bones, all of which are well fitted together;

sila thunpam inpam onRi iRa vanthu pinpu: this body goes through some unhappy and happy experiences, and at the time of death,

sem thazhalin kaN venthu sinthida Avi: when the body is about to be consigned to burning red flames of fire as the life is spilled and

viraivin kaN anthakan pora vanthathu enRu vem thuyar koNdu alainthu azhiyA mun: before being gripped by great grief that Yaman (God of Death) has come too soon to wage his war with me and feeling shaken and dying.

vinai onRum inRi nanRu iyal onRi: I wish to get rid of all my bad deeds and welcome only good deeds;

nin patham vinava enRu anpu thanthu aruLvAyE: for this, kindly bless me with the love to contemplate Your hallowed feet!

aravin kaN mun thuyinRu aruL koNdal aNdarkaNdu amar anja: Lord VishNu, of the hue of black cloud, who once feigned slumber on the serpent (AdhisEshan) while protecting all lives, and the celestials, were scared to face the battle as

maNdi vanthidu cUran akalam piLanthu aNainthu akilam paranthu irangida: the demon SUran confronted them menacingly; tearing his wide chest, and making his shrieking scream, as he fell, reach all parts of the world,

anRu udanRu konRidum vElA: You killed him that day with utmost rage, Oh Lord with the spear!

marai vem kayam porunthida vaNdu inam kuvinthu isai onRa: (In this place,) the lotus flowers blossom beautifully in ponds while swarms of beetles join together and hum in unison;

manthi santhudan Adum varaiyin kaN vanthu vaN kuRa mangai: monkeys playfully jump on the sandalwood trees here (in VaLLimalai*); You went to this mountain to see VaLLi, the pretty damsel of the KuRavAs,

pangayam vara ninRu kumpidum perumALE.: stood until she set her lotus feet there and fell at them, Oh Great One!


* VaLLimalai is in North Arcot District 12 miles southeast of Roya VelUr, slightly north of Thiruvallam. This is the hill where VaLLi was found as a baby by the tribe of hunters.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 539 siram angkam am kai - vaLLimalai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]