பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/784

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . வள்ளிமலை திருப்புகழ் உரை 311 உருகிக் களித்து, அதர பாணஞ் செய்து (வாயிதழைத்) தின்றும் மென்று உண்டும் (பருகியும்), கையடியிலுள்ள நகங்களால் குறியிட்டும் (நகக் குறியிட்டும்), குங்குமம்_உள்ள இரு கொங்கைகள் பூரித்து அசைய, அன்புடனே அணைந்து, மஞ்சு (அழகு) உலவிய (விளங்கும்) கொண்டை அவிழ்ந்து அலைச்சல் உற, படுக்கையில் மின்னல் எனச் சொல்லத்தக்க இடை விளக்கந் தர, நல்லுணர்வை (நல்லறிவை) அழிக்கும் அந்த இன்பத்தை மறந்து உன்னை நினைக்க மாட்டேனோ! தன்னுடன் கலந்து கூடி நெருங்கி வந்த குரங்குகளின் கூட்டத்துடன் சென்று, மொகு மொகு என்று ஒலிக்கும் கடலைத் தாண்டி, பொருந்திய வேகத்துடன் இலங்கையிற் புகுந்து, அருமையான தவப் பெரியோர்கள் மகிழ்ச்சி நிரம்பக் கொள்ள ஒளி பொருந்திய தேவர்களும், இவ்வுலகோரும், பூமியில் செய செய என்று (மகிழ்ந்து) ஒலி செயச் செலுத்தின கொடிய அம்பால் வீரமுள்ள அரக்கன் ராவணனுடைய தலையை (அறுத்துத் தள்ளின. ரீராமபிரானுடைய (திருமாலுடைய) மருமகனே! சமணரது கூட்டம் குழம்ப (மாறுபட்டுக் கலங்கி நிற்க), மதுரையில் திருநீறு பரவ, யாவரும் ஹர ஹர சங்கர! என்று புகழ் கூற, வெற்றி பெற்று அருளிய புகழ் கொண்ட வேலனே! அறத்தைக் (காஞ்சியில்) வளர்த்த அழகி - பார்வதியின் குமாரன்ே குளிர்ந்த சோலைகளும் வயல்களும் பொருந்திய அழகிய வளப்பமுள்ள நீர்க்கரைகளுள்ள அரிவை விலங்கலில் (வள்ளிமலையில்) வந்து மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கும் பெருமாளே! (நின்றனை நினைவேனோ)